மனித உரிமைக் கோட்பாடுகளும் இஸ்லாம் முன்வைத்துள்ள மனித உரிமைகளும் விமர்சன ரீதியாக ஆய்வு
மனித உரிமைகள்
அறிமுகம்:
மனித உரிமை என்பது, எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். இந்த உரிமைகள், மனிதர்கள் மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக்கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாக கருதப்படுகின்றன. இனம், சாதி, நிறம், சமயம், மொழி, தேசம், பால், வயது, உடல், உள வலு ஆகியவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு தனிமனிதருக்கும் இருக்கும் இந்த அடிப்படை உரிமைகள், மனிதர் சுதந்திரமாக, சுமூகமாக, நலமாக வாழ அவசியமான உரிமைகளே மனித உரிமைகளாகக் கருதப்படுகின்றன. மனிதர்களாகப் பிறந்தால் அவர்களுக்கு இயல்பாகவும், இயற்கையாகவும் இருக்கும் உரிமைகளை இது குறிப்பதாக அமைகிறது.
பொதுவாக மனித உரிமை எனும்போது, இருவகையான அனுகுமுறைகள் காணப்படுகின்றன. அதில் முதல் வகை அணுகு முறையைப் பொருத்தவரையில், மேற்கத்தைய அணுகு முறையினைக் குறிப்பிட முடியும். உலகில் ஏற்பட்டிருக்கும் ஒவ்வொரு நன்மையான விடத்திற்கும் தாம் தான் காரணம் என்ற கருத்தைக் கூறிக்கொள்வது மேற்கத்தையர்களுடைய பொதுப்பண்பு. மனித உரிமை விடயத்திலும் கூட இதற்கு விதிவிலக்கில்லை. உலகில் முதன் முதலில் மனித உரிமை பற்றிய பிரகடனத்தை முன்வைத்து நடைமுறைப்படுத்தியோர் தாம் தான் என்று அவர்கள் விவாதிக்கின்றனர்.

இது இவ்வாறிருக்க, மக்கள் இந்த மக்னா கார்டா பற்றிய தெளிவான கருத்து உருப்பெற, அது மக்கள் உரிமைகளாக வடிவம் பெறுவதற்கு பல நூற்றாண்டுகள் சென்றன. இதற்கு உதாரணமாக, Pநவவைழைn ழக சுiபாவள' 1626 ஆம் ஆண்டிலும், 'ஹேர்பியஸ் கார்பஸ்' 1679 ஆம் ஆண்;டிலும் இந்த மக்னா கார்டா சாசனத்தில் சேர்க்கப்பட்டே அது முழுமை பெற்றது.
எனவே, 17 ஆம் நூற்றாண்டு வரையில் மனித உரிமைகள், குடியுரிமைகள் பற்றிய கருத்தோட்டங்கள் மேற்கத்தையரிடம் இருக்கவில்லை. அக்காலத்துக்குப் பின்புதான் மேலை நாட்டு தத்துவஞானிகளும், சிந்தனையாளர்களும், சட்ட வல்லுணர்களும் இவை பற்றி பேசவாரம்பித்தனர். ஆனால், சட்டங்களிலோ சாசனங்களிலோ இவை இடம்பெறவில்லை.

20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் 1948 ஆம் வருடம் ஐ.நா. சபை பொதுமனித உரிமைகள் பற்றிய பிரகடனத்தை உருவாக்கியது. இனப்படுகொலையை எதிர்த்து ஒரு தீர்மானம் நிறைவேற்றி, அதைத் தடுப்பதற்கான விதிமுறைகளை உருவாக்கியது. ஆனால், ஐ.நா. சபையின் அந்தத் தீர்மானங்களில் ஒன்று கூட அமுல்படுத்தப்படவில்லை. காரணம், அந்நிறுவனம் யூத, கிருஸ்தவ நலன் காப்பதற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட அமைப்பாகும். அதில் இயங்கு சக்தியாக செயற்படும் அங்கத்தவர்களும் யூதர்களும், கிருஸ்தவர்களுமே. ஏதாவது மனித உரிமைகளுக்கு சார்பாக அவர்கள் குரல் கொடுக்க நினைத்தாலும் கூட, வல்லரசுகள் தமது வீட்டோ அதி(கர்வாதி)காரத்தைப் பயன்படுத்தி அதனைக் கட்டுப்படுத்துகினறன.
எனவேதான், மேலை நாடுகளில் வீட்டுப் பிராணி கொலையுண்டாலும் உரிமைபேசும் அமைப்புகள், இஸ்லாமிய நாடுகளில் பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்களென கொன்று குவிக்கப்படும்போதும் மௌனம் சாதிக்கின்றன.
ஐ.நா. சபையின் தீர்மானங்கள் ஒருபுறமிருக்க, மனித உரிமைகள் உலகின் பல பாகங்களிலும் நசுக்கப்படுகின்றன. பல நாடுகளில் அவை மிதிக்கப்படுகின்றன. ஐ.நா. சபையோ இவற்றுக்கெதிராக ஒன்றும் செய்ய முடியாமல் வெறுமனே பாhத்துக்கொண்டிருப்பது இதனாலேயாகும். மனித உரிமைகள் மீறப்படும்போது தன் பலத்தைப் பயன்படுத்தி அவற்றைத் தடுக்க அந்நிறுவனத்தால் முடியாமலுள்ளது. அதன் மனித உரிமைப் பிரகடனங்கள் ஒலித்துக்கொண்டிருந்த போதும், மிகக்கொடிய இனப்படுகொலைகள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன.
மனித உரிமைகள் குறித்த இஸ்லாமிய அணுகுமுறை
மனித உரிமைகள் பற்றிய இஸ்லாமிய கருத்தோட்டத்தைப் பொருத்தவரையில், அவை அல்லாஹ்வினால் வழங்கப்பட்டவைகளாகும். அவை எந்த அரசனாலும் அல்லது எந்த சட்டமன்றத்தாலும் கொடுக்கப்பட்டவையல்ல. அரசர்களாலும் சட்டமன்றங்களாலும் கொடுக்கப்பட்டவற்றை அவை எவ்விதம் வழங்கப்பட்டனவோ அவ்விதமே இரத்துச்செய்ய முடியும். சர்வாதிகாரிகளால் இயற்றி அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளது நிலையும் இதுவே. அவர்கள் கொடுக்க நாடும் போது உரிமைகளை வழங்குவார்கள். இரத்துச் செய்ய விரும்பியபோது அதனையும் செய்வார்கள். அவர்களுக்கு ஒத்துவரக் கூடிய சூழலில் அதை நிறைவேற்றுவார்கள். இல்லையென்றால் விலக்கிவிடுவார்கள். அவர்கள் விரும்பும்போது பகிரங்கமாகவே அவ்வுரிமைகளை நசுக்கி மீறிச் செயற்படுவார்கள். ஆனால், இஸ்லாமிய மனித உரிமைகளின் நிலைப்பாடு இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். இஸ்லாத்தில் அடிப்படை மனித உரிமைகளை மாற்றவோ, திருத்தவோ உலகில் எந்த சட்டமன்றத்திற்கும். அரசுக்கும் அறவே உரிமையில்லை. ஏனெனில் அவையனைத்தும் இறைவனால் வழங்கப்பட்டவை. யாருக்கும் அவற்றை திரும்பப் பெறவோ, மீறவோ, மாற்றவோ அதிகாரமில்லை.
இங்கு உரிமைகள் படைத்த இறைவனால் வழங்கப்படுகின்றன. வெற்றுத்தாளில் எழுதி வீண் விளம்பரத்திற்கு மட்டும் பயன்படுத்தப்படும் உதவாக்கரை ஆவணங்களல்ல அவை. வெளிச்சம் போட்டுக்காட்டிய பின் நடைமுறை வாழ்வில் அமல்படுத்தாமல் பதுக்கும் சட்டங்கள் அல்ல அவை. உருப்படாத தத்துவங்கள் அல்ல அவை. அமுல்படுத்துவதற்;கு முடியாத வறட்டுத்தத்துவங்கள் அல்ல அவை.
மேலை நாடுகளில் உரிமைகள் ஏட்டளவில் காட்சிப்பொருளாக்கப்பட்டு யதார்த்த வாழ்வில் அவை செயற்படுத்தப்படாமல் அவை மறுக்கப்படுகின்றன. ஆனால், இஸ்லாத்திலோ அவை இறைவனால் வழங்கப்பட்ட அடிப்படையான உரிமைகளாக விளங்குகின்றன. அவற்றை விரும்பினால் செயல்படுத்தலாம் விரும்பினால் விட்டுவிடலாம் என்ற நிலைபாட்டில் இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகள் காணப்படுவதில்லை. மாறாக, அவற்றை மறுமை வாழ்வுடன் தொடர்பு படுத்தியுள்ளதை அவதானிக்கலாம். மேலை நாட்டினர் கொண்டுள்ள சில கருத்தோட்டங்கள் வறட்டுத் தத்துவமாக விளங்குகின்றன. அதனை செயல்படுத்தும் வகையிலான ஆதாரங்களையோ, பின்னணியில் எவ்வித தூண்டுதலையோ பெற்றிருப்பதை அவதானிக்க முடியும். ஆனால், இஸ்லாமிய ஒழுக்கவியல் கோட்பாடு அவ்வாறானதல்ல.
ஐ.நா. சபையின் பிரகடணங்களும் தீர்மானங்களும் ஒவ்வொரு தனிமனிதரையும் கட்டுப்படுத்தக்கூடியவையன்று. எனவே, அவற்றை அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட உரிமைகளுடன் ஒப்பிட்டு நோக்க முடியாது.
இஸ்லாத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள், இறை நம்பிக்கை கொண்டுள்ள ஒவ்வொருவரையும் கட்டுப்படுத்தக்கூடியவை. அவை இறை நம்பிக்கையுடன் பின்னிப் பிணைந்துள்ள அம்சமாகும். ஒவ்வொரு முஸ்லிமும், தங்களை முஸ்லிம் என கூறிக்கொள்ளும் ஒவ்வொரு ஆட்சியாளரும் அவற்றை ஏற்று நடைமுறைப்படுத்தியே தீரவேண்டும். அவற்றை புறந்தள்ளும், நிராகரிக்கும், துஷ்பிரயோகம் செய்யும் எவரையும் முஸ்லிமாகக் கருதிவிட முயடியாது. அவர் மறுமையில் வெற்றிபெறவும் முடியாது. அல்லாஹ்விடத்தில் அத்தகைய மனிதர்கள் யார் என்பதைக் கூறும் அல்குர்ஆன்,
'யார் அல்லாஹ் இறக்கியவைகளைக் கொண்டு தீர்ப்பு வழங்கவில்லையோ அவர்கள் நிராகரிப்பாளர்கள்' (5:44)
'யார் அல்லாஹ் இறக்கியவைகளைக் கொண்டு தீர்ப்பு வழங்கவில்லையோ அவர்கள் அக்கிரமக்காரர்கள்' (5:45)
'யார் அல்லாஹ் இறக்கியவைகளைக் கொண்டு தீர்ப்பு வழங்கவில்லையோ அவர்கள் பாவிகள்' (5:47) என்ற கருத்துக்களை அல்குர்ஆன் கூறுகின்றது.
எனவே, தங்களை முஸ்லிம்கள் என அழைக்கும் எவரும் இஸ்லாத்தின் மனித உரிமைப்பிரகடனத்தை புறந்தள்ளி தமது சட்டங்களின் அடிப்படையில் உலகில் சர்வாதிகாரம் செலுத்த முடியாது. எனவே, ஐக்கிய நாட்டுப் போரவை அதனுடைய பிரகடனம், அது எடுத்த தீர்மானம், வழங்கிய மனித உரிமைகள் இறைவன் அருளிய மனித உரிமைகளோடு ஒப்பிடக் கூடியவை அல்ல.
(தொடரும்...)
அஷ்ஷெய்க்.M.S.றியாஸ் முஹம்மத் (நளீமி) M.A., P.G.D.E.
அஷ்ஷெய்க்.M.S.றியாஸ் முஹம்மத் (நளீமி) M.A., P.G.D.E.