Saturday, February 18, 2012

இஸ்லாமிய சட்டக்கலையின் தோற்றமும் அடிப்படைகளும்



இஸ்லாமிய சட்டக்கலையின் தோற்றமும் அடிப்படைகளும்


அறிமுகம்


    மனித இனத்தின் இயக்கு சக்தியாக சட்டங்கள் காணப்படுகின்றன. 'சட்டம் .இன்றி மனிதன் இல்லை' எனக்கூறலாம். மனித இன வரலாற்றில் சட்டம் பேணப்படாத ஒரு சமுகத்தைக் காண முடியாது. ஒரு நாட்டுக்கு அரசியல் யாப்பு எனவும், நிறுவனத்திற்கு நிறுவனச் சட்டங்களும், அமைப்புகளுக்கு அமைப்புச் சட்டமெனவும், குடும்பங்களுக்கு குடும்பச் சட்டங்கள் எனவும் சட்டமின்றிய மனிதக்கூட்டம் இல்லை என்று கூறலாம். ஒரு கொள்ளைக்கூட்டமாக இருப்பினும் அதனை இயக்கவும் கட்டுப்படுத்தவும், கொள்ளையிட்ட பொருற்களைப் பகிரவுமென சட்டங்கள் காணப்படும். யாசகம் கேட்கும் கூட்டமாக இருப்பினும் அவர்களுக்குள்ளும் ஒரு சட்டவமைப்பு காணப்படும். இ;வ்வாறு, மனித வாழ்வு தொடர்பு படும் அனைத்து துறைகள் தொடர்பாகவும் சட்டங்கள் ஆள்வதனைத் தவிர்க்க முடியாது.


    சட்டம் ஒரு பொறுப்புவாய்ந்த அம்சம் என்பதால் அது மனித இனத்துக்கு இன்றியமையாத ஒன்றாகும். சமுகங்கள் இந்த சட்டங்கள் மூலமே ஒழுங்கு பெறுகின்றன. அதன் மூலமே தீமைகளைத் தடுக்கின்றன. நன்மைகளையும் நீதியையும் ஏவுகின்றன. அந்த சமகத்தின் உரிமைகளைக் காக்கின்றன. மக்களைச் சரியான வழியில் இட்டுச் செல்கின்றன.


    பொதுவாக, மனித வாழ்வின் தேவைகளே சட்டங்களை உருவாக்குகின்றன. சட்டங்களது தோற்றங்களுக்கும், அதன் அமுலாக்கத்துக்கும் மனிதனின் தேவைகளே அடிப்படைகள். உலகில் தோன்றிய எல்லா மனிதர்களும் சட்டத்துக்கு கட்டுப்பட நினைப்பது தேவை இருப்பதனாலேயேயாகும். எனவே, ஒரு கட்டுப்பாட்டுடன் செயற்பட்டு ஒரு சமுகம் தனது இலக்கை அடைந்து கொள்வதற்கு சட்டத்தின் தேவை இன்றியமையாததாகும்.


    ஒரு சமுகத்தின் அங்கத்தவர்களது உரிமைகள் சரியாக வழங்கப்பட்டு, நீதி அவர்களுக்கிடையே நிலைநாட்டப்பட்டு, அவர்களக்கிடையே சாந்தியுடனும் சமாதானத்துடனும் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து எந்தவொரு தனி நபருக்கும் சமுகத்தில் தீங்கு ஏற்படாது பாதுகாத்து, நன்மையும் பூரணத்துவமும் பெற்று வாழச் செய்வது அந்த சமுகத்தின் அத்தியாவசிய தேவையாக விளங்குகிறது. எனவே, சமகத்திலுள்ள ஒவ்வொரு தனிநபரும் சில செயற்பாடுகளைச் செய்தும், சில செயற்பாடுகளைத் தவிர்த்தும் வாழ வழி நடத்த வேண்டியது சமுகத்தின் தேவையாகும். இவ்வாறு மக்களை வழிநடத்துவதற்குத் தேவையான சில சட்டங்கள் சமகங்களால் வகுக்கப்படுவதுண்டு. அந்தவகையில், சகத்திலுள்ள தனி நபர்களை தீமைகளிலிருந்து காத்து சீரிய வழியில் நடத்திடும் ஒரு கருவியாக இந்த சட்டத்தினை வரையருக்கலாம்.


    பொதுவாக, சட்டத்தின் கடiயாக சமுகத்திற்கு சேவை செய்வதும், அதன் இலக்குகளை அடைவதற்குரிய தேவைகளைப் பூர்த்தி செய்தலுமாகும் என்று கூறுவது பொருத்தானதாகும். எனவே, சட்டங்கள் பல்வேறு வகையில் பிரிக்கப்பட்டாலும் கூட அவற்றின் பொது இலக்கு சமுகத்துக்கு உதவும் வகையில் அதன் சுபீட்சத்திற்கு உதவம் வகையில் சேவை செய்தலாகம்;. உதாரணத்திற்காக, சமுக அநீதியை ஒழிக்கும் சட்டமானது, ஒவ்வொரு தனிநபரையும் பாதுகாப்பதிலும், நீதியை நிலை நிறுத்துவதிலும், நிம்மதியை நிலைநாட்டுவதிலும் சமுகத்திற்கு சேவை செய்தலாகும். குற்றவாளிகளைத் தண்டிக்கும் சட்டத்தின் நோக்கம் சமகத்திலுள்ள குற்றச் செயல்களை ஒழித்து அமைதியை நிலைநாட்டலாகும். இவ்வாறு ஒவ்வொரு சட்டத்தினதும் நோக்கம் சமுகத்தின் சுபீட்சத்திற்கு பங்காற்றுவதாகும்.


    எனவே, இந்தப் பின்னணியில் நோக்கும் போது சட்டங்கள் யாவும் சமுகத்திற்காக இயற்றப்பட்டவை என்பதுவும், சமுகத்திற்கு சேவை செய்ய அவை தகுதிபெறுவதன் மூலம் மட்டுமே அவை நிலைக்க முடியும் என்பதுவும், சட்டத்தின் கடமை சமகத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதுமே என்பதுவம் தெளிவாகிறது. இத்தகைய பண்பகளைப் பெறாத எந்தவொரு சட்டமும் நிலைத்திருக்க மடியாதது என்பதோடு, அவை பொருத்தமற்றவை என்பதுவும், அவை பின்பற்றத் தகுயானவை அல்ல என்பதுவும் சுட்டிக்காட்டத் தக்கதாகும்.


   அந்தவகையில், மனித இனத்தின் ஈடேற்றத்திற்கு வழிகாட்ட வந்த திரட்சியான சிந்தனையின் தொகுப்பாக அமையும் இஸ்லாமிய வாழ்வியல் கோட்பாட்டின் இயங்கு சக்தியாக 'அல்பிக்ஹூல் இஸ்லாமியா' (இஸ்லாமிய சட்டவியல்) திகழ்கின்றது. தனிமனிதன் முதல் சமுகம், சர்வதேசியம் எனப் பரந்து செல்லும் அதனுடைய வாழ்வு நெறியையும், கொடுக்கல், வாங்கல் நடவடிக்;கைகள், தேசிய, சர்வதேசிய உறவுகள் எனச் செல்லும் சமுகச் செல்நெறிகளையும் ஒருங்கிணைக்கும் பிரதான பணியை இஸ்லாமிய சட்டக்கலை செய்கின்றது.


                                                                                                        (தொடரும்...)

                                   

              அஷ்ஷெய்க்.M.S..றியாஸ் முஹம்மத் (நளீமி) M.A., Dip.In.Edu.

                                                                                                                                


                                             

No comments:

Post a Comment