Monday, February 27, 2012

அபுல் கலாம் ஆசாத்தும் மவ்லானா மவ்துதி (ரஹ்) வும் இந்திய முஸ்லிம் சமுகத்தை வழிநடத்திய முறை


மௌலானா மௌதூதி (ரஹ்) இந்திய முஸ்லிம் சமூகத்தை வழிநடத்த எடுத்த நடவடிக்கைகளில் சமகாலத்தவரான அபுல்கலாம் ஆஸாத் அவர்களது சிந்தனையிலிருந்து வேறுபட்ட சிந்தனையைக் கொண்ட விதம் தொடர்பான விமர்சன ரீதியான ஆய்வு


மூலம்

அஷ்ஷெய்க்.M.S.றியாஸ் முஹம்மத் (நளீமி) M.A., Dip.In.Edu.


முகவுரை

அல்லாஹ் ஒவ்வொரு நூற்றாண்டிலும் இந்த மார்க்கத்தை புனர்நிர்மாணம் செய்யக் கூடிய சீர்திருத்தவாதிகளை அனுப்புவதாக வாக்களித்துள்ளான். அந்தவகையில், வரலாற்று நெடுகிலும் இஸ்லாமிய கொள்கை மறக்கப்பட்டு, ஏனைய கோட்பாடுகள் வாழ்வின் நடைமுறையாக வரும் போதெல்லாம் அவற்றை தூசு தட்டி, இஸ்லாத்தை வாழ வைக்க வேண்டும் என்ற நோக்கில் பல முஜத்தித்கள் தோன்றியுள்ளனர்.

 இந்தவகையில், இந்திய சமுகம் பல்வேறு சவால்களுக்கும் முகம்கொடுக்க நேர்ந்த வேளையில் அதனை வழி நடத்த தோற்றிய முக்கிய முஜத்திதாக மௌலானா செய்யத் அபுல் அஃலா மௌதூதி அவர்களைக் குறிப்பிட முடியும்.

      சமகாலத்தில் தோன்றிய அறிஞராக மதிக்கப்பட்ட அபுல்கலாம் ஆஸாம் பல்வேறு வழிமுறைகளினூடாக இந்திய முஸ்லிம் சமுகத்தை வழி நடத்தியிருந்தாலும் கூட பல வழிமுறைகளில் அவருக்கு வித்தியாசமான கருத்துக்களை கொண்டு சமுகத்தை வழிநடத்தக் கூடியவராக மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்கள் விளங்கினார்கள்.

அந்தவகையில் இவ்வாய்வினூடாக மௌலானா அபுல் அஃலா மௌதூதி அவர்கள் அவரது சம காலத்தவரான மௌலானா அபுல் கலாம் ஆஸாத் அவர்களது சிந்தனைகளிலிருந்து சமுகத்தை வழிநடத்துவதில் எவ்வகையான வித்தியாசமான கருத்தைக் கொண்டிருந்தார் என்பது விமர்சன ரீதியாக ஆராயப்படுகிறது.


அறிமுகம்

கி.பி. 711 இல் இந்திய தேசத்தினுள் நுழைந்த முஸ்லிம்கள்  இந்திய  தேசத்தவர்களை சுமார் எட்டு நூற்றாண்டுகள் ஆட்சி புரிந்து கல்வி, கலாசார, பண்பாட்டு ரீதியாக பண்பட்டவர்களாக அவர்களை மாற்றியமைத்து  நாகரிகத்தை அவர்களுக்கு கற்றுக் கொடுத்தனர்.


    இடைக்காலங்களில் முஸ்லிம் மன்னர்களிடையே, இஸ்லாமிய மக்களிடையே தோன்றிய மூட நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், இஸ்லாத்திற்கு புறம்பான சிந்தனைகள் என்பவற்றை நீக்குவதற்கும், அவற்றிற்கு சாவுமணி அடிப்பதற்குமென இந்திய மண்ணில் பிறந்த பல்வேறு சீர்திருத்தவாதிகளும் செயற்பட்டு வந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.


     மொகலாய மன்னன் அக்பரது நெறிதவறிய சிந்தனகளைக் கண்டும், அக்கால சமுகத்தில் வாழ்ந்த ஆலிம்களது அசட்டைத் தனங்களைக் கண்டும் அரசக் கொள்கைகளை பலமாக எதிர்த்து, உண்மையான கொள்கைகளுக்கு புத்துயிர் வழங்கும் முயற்சியை மேற்கொள்ள ஷெய்க் அஹ்மத் ஸிர்ஹிந்த் அவர்கள் தோன்றி பாடுபட்டார்கள்.


      18 ஆம் நூற்றாண்டில் இந்தியா சீர்திருத்தத்தினை வேண்டி நின்ற அறியமையும், அநியாய ஆட்சியும், அக்கிரமும் நிறைந்த சூழலில் தோன்றி திறனாய்வு, சீர்திருத்தம் ஆகிய இரு துறைகளிலும் இணையற்ற சாதணைகளைப் புரிந்த ஷாஹ் வலியுல்லாஹ் அவர்களை என்றும்  முஸ்லிம்கள் மறந்துவிட முடியாது.


      இஸ்லாமிய கிலாபத் அமைக்கும் நோக்கில் ஸஹாபாக்களை ஒத்த சமுகமொன்றை செய்யத், மற்றும் ஷாஹ் இஸ்மாஈல் ஷஹீத் ஆகியோர்கள் 19 ஆம் நூற்றாண்டில் உருவாக்கிக் காட்டினார்கள்.


      தொடர்ந்து இந்திய மண்ணில் தோன்றி செய்யித் அஹ்மத் காண், அல்தாப் ஹூஸைன், அல்லாமா இக்பால் போன்ற தலைசிறந்த சீர்திருத்தவாதிகள் வரிசையில் தோன்றிய இரு முக்கிய சிந்தனையாளர்களே அபுல்கலாம் ஆஸாத் மற்றும் மற்றும் செய்யித் அபுல் அஃலா மெதூதி (ரஹ்) ஆகிய இருவருமாவர்.


      சம காலத்தவர்களான இவர்கள் இந்திய சமுகத்தினை வழி நடத்தும் தலைமைத்துவ ஆளுமை மிக்கவர்களாக திகழ்ந்துள்ளனர். இருவரும் வாழ்ந்த சூழுல் ஒன்றாக இருப்பினும் சமுகத்தினை வழி நடத்துவதில் இவ்விரு சிந்தனையாளர்களும் இரு முரண்பட்ட சிந்தனைகளைக் கொண்டிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.


     1857 இல் ஏற்பட்ட சிப்பாய் கலகத்தினைத் தொடர்ந்து இந்திய மக்களிடையே சுதந்திர வேட்கை உணர்வுகள் படிப்படியாக தலைதூக்கவாரம்பித்தன. பிரித்தானியாவுக்கு எதிரான உணர்வரலகள் இந்திய முஸ்லிம் மக்களிடையே துருக்கிக்கு எதிரான பிரித்தானியாவின் நடவடிக்கைகள் காரணமாக வழுவடைந்திருந்தன. இதனைச் சுதந்திரப் போராட்ட சிந்தணைகளுக்கு சாதகமாகப் பயன்படுத்த விரும்பிய ஹிந்துக்கள் முஸ்லிம்கள் முன்னெடுத்த கிலாபத் சிந்தனைக்கு ஆதரவு வழங்;கினர்.


     இக்காலப்பகுதியில் இந்திய மக்களிடையே இந்திய தேசிய உணர்வு உயிரோட்டம் பெறுகிறது. இக்கால சூழ்நிலையில் வாழ்ந்த இருவர் என்ற வகையில் தாம் எதிர்கொண்ட பிரச்சினைகள், அனுபவங்கள் என்பவற்றின் விளைவாக இவ்விரு சிந்தனையாளரதும் சமூக சீர்;திருத்த சிந்தனைகள் வேறுபடுகின்றன.


      அந்தவகையில், இவ்விரு சிந்தனையாளர்களும் இந்திய சமுகத்தினை வழிநடத்துவதில் ஒருவருக்கொருவர் கொண்டிருந்த வித்தியாசமான கருத்துக்கள் இங்கு ஆராயப்படவுள்ளன  இன்ஷா அல்லாஹ்!.


அபுல்கலாம் ஆஸாத் சுருக்க அறிமுகம்


1888 ஆம் ஆண்டு மௌலானா கைருத்தீனுக்கும், அலியாவுக்கும் மகனாக புனித மக்காவில் மௌலானா அபுல்லாம் ஆசாத் பிறந்தார். தனது 10 வயதில் அல்குர்ஆனை மனனம் செய்த இவர் தனது 17 ஆவது வயதாகின்ற போது உலகில் பயிற்சி பெற்ற ஆன்மீகவாதியாக அறியப்பட்டார். கெய்ரோவில் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் அவரது அரிவை மேலும் விசாலமாக்கியது.


     அவரது குடும்பம் கல்கத்தாவில் குடியேரிய பின்பு லிஸானுஸ் ஸத்க் எனும் சஞ்சிகையை வெளியிட ஆரம்பித்தார். தனக்கு காணப்பட்ட ஆங்கில மொழிப் புலமையைப் பயன்படுத்தி பல்துறை சாhந்த நூல்களை மொழிபெயர்த்தார்.


     ரஷீத் ரிழாவின் 'அல்மனார்' சஞ்சிகையால் கவரப்பட்ட இவர் அதன் விளைவாக முஸ்லிம் சமுகத்தில் எழுச்சியை ஏற்படுத்தும் இலட்சியத்துடன் 1912 ஆம் ஆண்டில் 'அல்ஹிலால்' எனும் சஞ்சிகையை வெளியிட்டார்.


     ரஷீத் ரிழா கெய்ரோவில் தோற்றுவித்த 'ஜாமிஅதுத் தஃவா வல்இர்ஷாத்' எனும் கல்வி நிலையத்தை விஞ்சும் வகையில் கல்கத்தாவில் 'தாருல் இர்ஷாத்' எனும் கல்வி நிலையத்தைத் தோற்றுவித்தார்.


   இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தனது 35 ஆவது வயதில் தெரிவுசெய்யப்பட்ட செயற்பட்ட இவர்,  சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டதால்  பல வருடங்கள் சிறையில் கழித்திருக்கிறார்.


     1942 இல ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளராக தெரிவுசெய்யப்பட்டார். சிம்லாவில் 1946 இல் நடைபெற்ற 'கெபினட் மிஷன்;' பேச்சுவார்த்தையில் முக்கிய பங்காளராக கலந்து கொண்டார்.


     இந்தியா சுதந்திரம் பெற்றதும் முதல் இந்திய கல்வியமைச்சராக பொறுப்பேற்றார். இக்காலப்பகுதிகளில், 'சாஹித்திய அகடமி', 'லலித் கலா அகடமி', 'கலாசார உறவுகளுக்கான இந்திய கவுன்சில்' போன்ற பல அமைப்புக்களை நிறுவினார். கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் தலைவராக இருந்த ஆஸாத் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி முறையில் சீர்திருத்தங்களை செய்வதற்கு பரிந்துரைத்தார்.


     இறுதியில் 1958 பெப்ரவரி 22 இல் ஆஸாத் இறையடி சேர்ந்தார். 'இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூஊன்'.


மௌலானா அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) சுருக்க அறிமுகம்

1903 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் திகதி ஒளரங்கபாத்தின் டெக்கான் பகுதியில் ஓர் உயர் குடும்பத்தில் இவர் பிறந்தார். இந்தியாவுக்கு இஸ்லாத்தை ஜிஸ்திய்;யா தரீக்கா மூலம் அறிமுகப்படுத்திய ஷெய்க் நாசிருத்தீன் அபூ யூசுப் அவர்களின் மூத்த மகனான ஷெய்க் குதுபுத்தீன் அல்மௌதூதி அல்ஜிஸ்தி அவர்களது பரம்பரையைச் சோந்தவர். ஹஸன் பின் அலி(ரழி) ஹஸன் அல்முஸ்னி அவர்களது பரம்பரையில் வந்த ஷேய்க் அபூ அஹ்மத் அப்தால் அல்ஜிஸ்தி அவர்களது வழித்தோன்றலுமாவார்.  இவரது முன்னோர் மொகலாய ஆட்சியாளர்களது அரசவை உத்தியோகத்தர்களாக பணியாற்றியுள்ளனர். அவரது தாய்வழி முன்னோர் ஹைதராபாத் நிழாமிடம் பணியாற்றியவர்கள்.

 

   இவரது தந்தை அலிகாரில் கல்விகற்றவர். பிக்;ஹ் கலை கற்றவர். ஹைதராபாத்தில் வைத்து சூபிச சிந்தனைத் தாக்கத்திற்கு உற்பட்டு துறவி போன்று வாழ்ந்தவர். எனவே, நவீன கல்வியை, ஆங்கில மொழியை மௌதூதி (ரஹ்)இற்கு கற்பிப்பதைத் தவிர்த்து மரபு ரீதியான கல்வியைப் போதித்தார். வீட்டிலேயே அரபு, பாரசீகம், உருது மொழிகளைக் கற்பித்தார்.


     அவர் தனது 11 ஆவது வயதில் விஞ்ஞானப் பாடங்கள் கற்பிக்கப்படும் பாடசலையில் சேர்க்கப்பட்டார். தந்தையின் காலத்திலேயே அவரது வேண்டுகோளுக்கு இணங்கி அறிவியல் துறையில் தேர்ச்சி மிக்க ஷெய் அப்துஸ் ஸலாம் நியாஸி அவர்களிடம் அரபு மொழியைக் கற்றார். ஆயின், 16 ஆவது வயதில் தந்தையை இழந்ததால் பாடசாலைக் கல்வி இடையில் நின்று போயிற்று. அதன் பின்பு சுயமாகவே தனது அறிவை விருத்தி செய்து கொண்டார். இந்தியாவின் புகழ்பெற்ற கல்லூரிகளின் கல்வி பயிலும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்காத போதும் கற்றுத் தேர்ந்தவர்களை விஞ்சும் வகையிலாக பேரறிவு பெற்று விளங்கினார்.


       1926 டிசம்பர் இறுதியில் 'ஷூத்ஹீ' எனும் இந்துத் தீவிரவாத இயக்கத்தின் ஸ்தாபகரை காழி அப்துர்ரஷீத் என்பவர் கொலை செய்யவே, காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்களின் பின்புல உதவியுடன் இந்துக்கள் கிளர்ந்தெழுந்தனர். இந்நிகழ்வை சாதகமாக வைத்து இஸ்லாத்தை இரத்தக் கறை படிந்த மார்க்கம் எனவும், முஸ்லிம்களை இரத்த வெறியர்களாகவும் சித்தரிக்க முயன்றனர். மகாத்மா காந்தியும் கூட ' முஸ்லிம்கள் ஒரு கையில் அல்குர்ஆனையும் மருகையில் வாளையும் பிடித்துகன் கொண்டிருக்கும் வரை அவர்களுடன் சமாதானமாக வாழ முடியாது' என்று தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.


    டில்லி பெரிய பள்ளிவாசலில் முஹம்மத் அலி ஜௌஹர் அவர்கள் குத்பாவின் பன்பு எழுந்து,'இஸ்லாத்தின் மீது குரோதம் கொண்டு, அதை மட்ட ரகமாக விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கக்கூடியவர்கள் யார்? ஜிஹாத் சம்பந்தமாக நிலவும் அனைத்து சந்தேகங்கள், குழப்பங்களை நிவர்த்தி செய்பவர் யார்? ஜிஹாத் பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டத்தை மிகச் சரியாக தெளிவுபடுத்தி, அதன் தாத்பரியத்தை சகலரும் புரிந்துகொள்ளக்கூடியவகையில் காத்திரமான ஆய்வென்றை மேற்கொள்ளக் கூடிய இறையடியான் ஒருவரை எம்மால் காண முடியுமாக இருக்குமா? என்ற கேள்விகளை எழுப்பினார். இதனை சவாலாக ஏற்று 1927 இல் 'ஜம்இய்யா' எனும் பத்திரிகையில் 'இஸ்லாத்தில் ஜிஹாத்' எனும் தலைப்பில் கட்டுரை எழுதவாரம்பித்த இவர் பின்பு அப்பத்திரிகையின் பக்கம் போதாமையால் அதனை ஒரு நூலாக எழுதினார். ஜிஹாதைப் பற்றி எழுதப்பட்ட மிகப் பிரபல்யமான இந்த நூல் மூலமே அவருக்கு அறிஞர் என்ற சமுக அங்கீகாரம் கிடைக்கிறது. பின்பு பல நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட பல்துறை சார்ந்த புத்தகங்கள் மற்றும் சஞ்சிகைகள் மூலம் இஸ்லாமிய தஃவாவை உலகிற்கு முன்வைத்த இவர் 1941 இல் தான் வெளிட்டு வந்த தர்ஜூமானுல் குர்ஆன் எனும்  சஞ்சிகையின் மூலம் அழைப்பு விடுத்து இஸ்லாமிய சிந்தனையில் பண்பட்ட 75 உள்ளங்களை வைத்து 'ஜமாஅதே இஸ்லாமி' அமைப்பைத் தோற்றுவித்து உலக இஸ்லாமிய மீளெழுச்சிக்கு வழிவகுத்தார்.


   இஸ்லாமிய சிந்தனையாளராகவும், செயல்வீரராகவும் விளங்கிய இவர் பத்திரிகையாளர், தத்துவஞானி, நூலாசிரியர் என்று எல்லாத் தளங்களிலும் தடம் பதித்த ஒரு பண்முக ஆழுமை கொண்டவர்.


   1979 செப்டம்பர் 22ஆம் திகதி சிகிச்சைக்காக அமேரிக்கா சென்றவேளையில் அங்கு வைத்து அவரது உயிர் பிரிந்தது. 'இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூஊன்'.


அன்றைய இந்திய முஸ்லிம் சமுகத்தை வழி நடத்துவதில் அபுல் கலாம் ஆஸாத் மற்றும் செய்யது அபுல் அஃலா மௌதூதி ஆகியோர்களது சிந்தனைகள்


   அபுல் கலாம் ஆசாத் மற்றும், அபுல் அஃலா மெதூதி (ரஹ்) ஆகியோர் இந்திய சமுகத்தினை வழிநடத்துவதில் கொண்டிருந்த சிநதனைகளை இரு காலகட்டங்களை மையமாக வைத்து நோக்க முடியும்.


01. அபுல்கலாம் ஆஸாதின் 1920 இற்கு முற்பட்ட காலப்பகுதியான ரஷீத் ரிழாவின் சிந்தனைத்தாக்கத்திற்கு உட்பட்டிருந்த காலப்பகுதி.
 


     இக்காலப்பகுதியில் இஸ்லாமிய உலகில் மேற்கத்தையரால் இஸ்லாமிய நாடுகளை துண்டாடுவதற்காக தூவி விடப்பட்ட தேசியவாத விதைகளை கடுமையாக எதிர்க்கிறார். துருக்கியின் இஸலாமிய கிலாபத்தினை ஒழிப்பதற்கு துருக்கியின் கீழிந்த நாடுகளிலே தேசியவாத உணர்வை தூண்டிவிட்டு துருக்கியிலிருந்து விடுதலை பெற்று தனி நாடுகளாக உரிமை கோர அவை தூண்டின. எனவே, இஸலாமிய கிலாபத்திற்கு சாவுமணியடிக்கும் செயலாகவும், இஸலாமிய சமுகத்திற்கு அது தீங்கு பயக்கும் எனக்கருதியே அதனை எதிர்த்தார். தேசியவாதம் இனத்தை அடிப்படையாகக் கொண்டதெனில், இஸ்லாம் எல்லைகளுக்கு அப்பாட்பட்டது எனக்கருதுகிறார்.


       அந்தவகையில், இந்திய தேசியவாதமானது இரண்டு அடிப்படையில் மாத்திரமே சாத்தியம் என அவர் கருதுகிறார்.


   1. சமயத்தையும் அரசியலையும் வேறாக்குவது

 

   2. இந்திய இஸ்லாமிய  கலாசாரங்களை  அவற்றின்   சமூக,  கல்வி,

     அரசியல்,  சிந்தனைகளை ஒன்றினைத்து விடுவது.


    ஆரம்ப காலங்களில் ஆஸாத் சமயத்தினை அரசியலிலிருந்து பிரித்துவிடும் விடயத்தில்  மிகக் கவனமாக இருந்தார். சமயசார்பற்ற சிந்தனைகளையும், சமய சார்பற்ற அறிவியலையும் சாடினார். மனித செயற்பாடுகள் யாவும் சமய சிந்தனைக்கு உட்பட்டது. அல்குர்ஆனுக்கு வெளியே ஒன்றுமில்லை. நாம் எமது அரசியலை எமது சமயத்திலிருந்தே பெற்றோம். அல்குர்ஆனுக்கு வெளியிலிருந்து வரும் சிந்தனைகள் அனைத்தும் சமயத்துக்கு வெளியே உள்ளவை என அவர் கண்டார்.


     இக்கருத்தைக் குறிப்பிடும் அவர் ' நான் மனித செயற்பாடுகளின் சகல கூறுகளும் மார்க்கத்தில் உள்ளவையாகும். நான் ஏதாவது ஒரு விடயம் தொடர்பாக வழிநடத்தலைப் பெற்றால் அது புனிதக் குர்ஆனிலிருந்து பெற்றதாகும்.  எனக்கென்று எதுவும் தெரியாது. அல்குர்ஆன் மனித சமுகத்தை இருளிலிருந்து ஒளியின் பக்கம் இட்டுச்செல்ல வந்ததாகும். அரசியலை மார்க்கத்திலிருந்து பிரிக்கச் சொல்லி நீங்கள் கூறுகின்றீர்கள்! நான் அதனைச் செய்தால் வேறு எதிலே தங்கியிருப்பது!?. நான் எனது அரசியலை மார்க்கத்திலிருந்து பெற்றேன். எனது சிந்தனைகள் அனைத்தும் எனது மாhக்கத்திலிருந்து பிறந்தவைகளாகும். அவ்வாறிருக்க எவ்வாறு என்னால் அரசியலை மார்க்கத்திலிருந்து வேறுபடுத்த முடியும். எனது மத நம்பிக்கையின் பிரகாரம் அல்குர்ஆன் தவிர்ந்த வேறு மூலங்களிலிருந்து நான் வழிகாட்டலைப் பெறுவேனாயின் அது இறை கோபத்தைப் பெற்றுத் தரும். இதில் அரசியலும் உள்ளடங்குமில்லையா?


     நீங்கள் வாழ்வின் சகல துறைக்குமான வழிகாட்டலை அல்குர்ஆனிலிருந்து பெற வேண்டும். உலகிற்கு தேவையான சகல அம்சங்களையும் அல்குர்ஆனியப் போதனைகள் உள்ளடக்கியுள்ளது. இஸ்லாம் குறித்ததொரு துறைசார் வழிகாட்டலை மாத்திரம் வழங்கி ஏனையவற்றை புறக்கனிக்கவில்லை. மாறாக நீதித்துறை, அறிவுத்துறை, அரசியல், கலாசாரம், மார்க்கம் அல்லது முஸ்லிம்களது இவ்வுலக வாழ்வு தொடர்பான, ஆட்சியாளருடன் தொடர்பான சகல சட்டதிட்டங்களையும் அது தெளிவுபடுத்தியுள்ளது'. என தனது அல்ஹிலால் சஞ்சிகையில் எடுதும் போது குறிப்பிடுகிறார்.(1)


        மேலும் அவர்,' அரசியல் நடவடிக்கைகளுக்கு வேறு கண்ணோட்டம் இருக்க வேண்டும் என நீங்கள் ஏற்றுக் கொண்டால், நீங்கள் ஏன்  அதனை அல்குர்ஆனில் பெற முடியாதவர்களாக இருக்கின்றீர்கள்?!. நாம் அரசியலை அல்குர்ஆனுக்கு வெளியே தேடுவதாக இருந்தால் நாம் அல்குர்ஆனிலிருந்து வழிகாட்டல் பெறுவதிலிருந்து எம்மை தடுத்துக் கொள்கிறோம் என்பது தான் அதன் கருத்து' என குறி;ப்பிடுகிறார். (2)


       தனது அல்ஹிலால் சஞ்சிகையின் நோக்கம் பற்றிக் குறிப்பிடும் போது கூடு பின்வருமாறு கூறுகிறார். 'அல்ஹிலாலின் முக்கிய நோக்கமானது மக்கள் தமது நம்பிக்கைகள், நடைமுறைகளில்  அல்குர்ஆனின் போதனைகளையும் நபியவர்களது வாழ்வு முறையையும் பின்பற்றி தமது கல்வி, கலாசார, அரசியல் அல்லது ஏனைய நடவடிக்கைகளில் ஒழுங்கமைக்க அவர்களை அழைப்பு விடுப்பதாகும்.


       உங்கள் அனைவரையும் புனித, தெய்வீக பாதையை நோக்கிச் செல்வதற்கு அழைப்பு விடுக்கிறோம். அது அல்குர்ஆன் காட்டும் நேரான பாதையாகும். முஸ்லிம்களுக்கு தனியான அரசியல் வழிமுறை உண்டு. ஹிந்துக்களிடம் இரு வகையான அரசியல் குழுக்கள் உண்;டு. நான் அவர்களுக்கு சொல்ல விரும்புவது இதுதான். நான் இஸ்லாத்தின் வழிகாட்டலிற்கு அருகில் இருக்கிறேன். இஸ்லாத்திலேயே அதிக கண்ணியமும், கௌரவமும் உண்டு. ஆனால் முஸ்லிம்கள் அதனைத் துறந்து மற்றவர்களது வழிமுறையை முன்வைக்க விரும்புகின்றனர்!'.(3)

    

     முஸ்லிம் சமுகத்தின் அரசியல் சிந்தனை பின்வருவனவற்றுள் ஒன்றாக அமைய முடியும் என அவர் கருதினார்.


   1. மேற்கு வயப்பட்ட அரசியல் சிந்தனை


   2. ஜமாலுத்தீன் ஆப்கானி எழுப்பிய அரசியல் சிந்தனை


   3. இஸ்லாமிய சமய நோக்கியலான அரசியல் சிந்தனை.


     இம்மூன்று வழிமுறைகளில் மூன்றாம் வழிமுறையே முஸ்லிம்கள் பின்பற்றுவதற்கு ஏற்றது என்றும், தாம் இம்மூன்றாம் பிரிவைச் சார்ந்தவர் எனவும் சுட்டிக்காட்டினார். மனிதனிடம் அடைக்களம் புகுந்துள்ள இறைமையை உலகில் நிலைநாட்டி சமாதான சூழலை ஏற்படுத்தவே இஸ்லாம் விரும்புவதாகக் கருதினார்.


      1885 இல் இந்திய காங்கிரஸ் உருவாக்கபட்டபோது அது இஸ்லாம் வெறுக்கும் தேசியவாதத்தினை ஆதரிப்பதாகக் கருதி அதில் இணைந்து செயற்படுவதை ஆட்சேபித்தார்.


    முஸ்லிம் லீகிற்கு எதிரான மனப்பாங்கை அவர்  1912 களிளேயே கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். தனது 'அல்ஹிலால்' சஞ்சிகையில் 1912-12-18 அன்று வெளியான கட்டுiரையில் முஸ்லிம் லீக் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் அவர்,' நீண்ட போராட்டத்தின் பின்பு விலங்குகள் உடைந்தன. மதச்சார்பற்ற சிந்தனையாகக் கொள்ளப்பட்ட விடயம் சீரிய ஒழுக்கமாக பிரகடனப்படுத்தப்ட்டது. இது அவர்களது முயற்சியன் பலனாகவா, தீர்மானமெடுக்கும் சக்தியின் காரணமாகவா, அவர்களது தெளிவு காரணமாகவா, உள்ளுணர்வு காரணமாகவா, ஆன்மீக வழிகாட்டல் காணமாகவா? மாறாக இது மற்றையவர்களின் மூலோபாய நகர்வுகளின் விளைவாகும். யாருடைய கட்டளையின் பேரல் அவர்கள் குகைக்குள் தஞ்சமடைந்திருந்தார்களோ, அவர்களால் வெளிக்கொண்டுவரப்பட்டு மண்டியிடச்செய்யப்பட்டார்கள். 'ஷிம்லா' தூதுக்குழுவின் பின்னர் நடைபெற்ற நாடகத்தின் கடைசி அங்கமே அரங்கேற்றப்பட்டது. 'முஸ்லிம் லீக்' என்ற பெயரும் அதற்கு சூட்டப்பட்டது.


      பனிக்கட்டியால் ஒரு வீட்டைக் கட்டிவிட்டு அதனைத் தீயினாலான வீடென்று அழைத்தால் அது தீயாக மாறுமா? ஒரு பொத்தானை அழுத்தி ஒரு பொம்மையைக் கைதட்டச் செய்வதன் மூலம் அது மனிதக் குழந்தையாக மாறிவிடுமா? அறிவீனம்!. தங்கத்தையும், வெள்ளியையும் வணங்கும் உங்களைப்போன்று வேறெவரும் கடந்த 6 வருடமாக அரசியலை அவமதித்ததில்லை. நீங்கள் அரசியலில் இருப்பது அவமானம். உங்களது நடவடிக்கைகள் இந்தியாவின் நற்பெயருக்கே கலங்கம். நீங்கள் பெருமைக்குத் தலைவணங்கிவிட்டு கௌரவமான உணர் அந்தஸ்து கிடைத்துவிட்டதாக மக்களை ஏமாற்றுகிரீர்கள். நீங்கள் உங்களையும் வழிகெடுத்து மற்றவர்களையும் வழி கெடுக்கிறீர்கள்'. என சாடுகின்றார் (4)


   மேலும் அவர் முஸ்லிம் லீக்குடன் ஒரு ஒப்பந்தத்திற்கு அழைக்கிறார்.' உண்மையைச் சொன்னால் முஸ்லிம் லீக் ஏமாற்றத்தைத் தந்தது, தருகின்றத. அது காத்திரமானதாக தம்மை நிரூபிக்கும்வரை முக்கியமான அரசியல் பிரச்சினைகளில் மாத்திரமன்றி அன்றாட செயற்பாடுகளில் கூட லீக் பிரயோசனமற்றது. நாட்டின் வளமான எதிர்காலத்திற்கு இது ஆபத்தான நிலையாகும். அதனால் நாம் முஸ்லிம் லீகை புரக்கணித்துவிட்டு புதிய பாதையைத் தேடும்போது பழைய சம்பவங்களை மறந்த நிலையில் எம்மில் மன்றாடுகிறார்கள். முஸ்லிம் லீக் எம்முடைய ஆதரவைப் பெற விரும்பினால் நாம் ஒரு ஒப்பந்தத்துக்கு வருவது நல்லது. அந்த ஒப்பந்தம் சட்டபூர்வமானதாகவும், தெளிவானதாக, சந்தேகங்கள், சிக்கல்கள் அற்றதாக இருத்தல் வேண்டும். ஏனையவர்களுடனான தொடர்ப்பு பின்னரும் காணப்பட்டால் இந்த ஒப்பந்தம் செல்லுபடியற்றதாகிவிடும். நீங்கள் அரசாங்கத்துடன் தொடர்ப்பு கொள்வதை ஏனையவர்கள் என்பதன் மூலம் கருதவில்லை. காங்கிரஸ் இதில் உதாரணமாக இருக்கிறாது. அரசும் இதனை ஊக்குவிக்கிறது. ஆனால் அரசாங்கத்துடனான தொடப்பு உங்களது கௌரவத்துக்கு குந்தகம் ஏற்படாத வகையில் இடைக்கிடையான தொடர்பாக அமைதல் வேண்டும்' என அழைப்புவிடுக்கிறார். ( 5 )


02.அபுல்அஃலா மௌதூதியின் 1924 இற்கு முற்பட்ட காலப்பகுதி

     தனது 11 வயது தொடக்கமே மொழிபெயர்பு, கட்டுரைகள் எழுதல் போன்ற துறைகளில் ஈடுபடவாரம்பித்த மௌலானா மெதூதி (ரஹ்) அவர்கள் தனது 15 ஆம் வயதிலேயே இதழியல் உலகில் காலடி வைத்திருந்தார். 1918 ஆம் ஆண்டு பிஜ்ஜானூரிலிருந்து வெளிவந்த அல் மதீனா இதழின் ஆசிரியராக சேர்ந்து தனது எழுத்தாற்றலை வளர்த்துக் கொண்ட இவர்,1920 இல் ஜபல்புரிலிருந்து வெளிவந்த 'தாஜ்' எனும் இதழின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். பின்பு 'ஹம்தன்' என்ற பத்திரிகையில் எழுதவாரம்பிக்கிறார்.


       அக்கால கட்டத்திலே இஸ்லாமிய சமுகம் எதிர்நோக்கும் நடைமுறைப் பிரச்சினைகள் பற்றிய கட்டுரைகளை எழுதவாரம்பிக்கிறார். இக்கால கட்டத்தில் முதலாம் உலக மகா யுத்தம் முடிவுற்று முஸ்லிம் உலகு அரசியல் ரீதியாக ஐரோப்பாவுக்கு அடிமையாகி கூறுபோடப்படும் நிலை தோன்றியிருந்தது. இந்தியாவும் கூட ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழேயே இருந்தது.


        இப்பின்னணி மௌதூதி (ரஹ்) அவர்களை அரசியல் ஆர்வம் கொள்ளத் தூண்டியது. எனவே இந்திய தேசியவாதக் கொள்கையினை அவர் ஆதரிக்கவாரம்கிறார். தனது 18ஆம், 19 ஆம் வயது காலப்பகுதிகளில் காங்கிரஸ் தலைவர்கள், அவர்களது செயற்பாடுகள் குறித்து புகழ்ந்து கட்டுரைகளை எழுதவாரம்பிக்கிறார்.


      இக்காலப்பகுதியில் தனது மூத்த சகோதரரருடன் இணைந்து டில்லியில் குடியேறியமையால் அங்குள்ள அறிஞர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. எனவே, சுதந்திரப் போராட்டத்தில் இணைந்து பாடுபட்டார். இதன் விளைவாகவே காங்கிரஸ் கட்சியின் வார சஞ்சிகையான 'தாஜ்' பிரசுரிப்பில் பங்காற்றினார்.


      காங்கிரசுக்கு ஆதரவாக செயற்பட்டமைக்கு தேசியவாத சிந்தனையுடன் மற்றுமொரு காரணம் கிலாபத்தை மீள கட்டியெழுப்பும் போராட்ட முயற்சிகளில் காங்கிரஸ் ஈடுபட்டமையாகும். எனவே, அதற்காக வெளியிடப்பட்ட 'ஹம்தன்' எனும் செய்தித்தாளை வெளியிடுவதில் பங்காற்றினார். இவ்வாறு, கிலாபத் மீளமைத்தலுக்கான செயற்பாடுகளின் போதே இவரது அரசியல் சிந்தனை சமய வடிவம் பெற்றது.


       இவரது திறமை கண்டு 1921 இல் தில்லியிலிருந்து வெளியான ஜம்இய்யதுல் உலமாவின் இதழான 'அல் முஸ்லிம்' இன் ஆசிரியராகவும் நியமிக்கப்படுகிறார். 1924 இல் கிலாபத் வீழும் வரையில் அதன் பரதம ஆசிரியாராக கடமையாற்றிய இவர் இக்காலப்பகுதியில் இஸ்லாமிய அரசியல் சிந்தனை பற்றிய பரீட்சயத்தைப் பெறுகிறார்.


     அக்காலத்தில் தனது எழுத்துக்களில் சமகாலத்து இந்திய முஸ்லிம்களின் நிலை, ஏகாதிபத்தியவாதிகளின் செயற்பாடுகள், துருக்கியின் அரசியல் நிலை, இந்தியாவில் நிலவிய ஆட்சி முறை  என்பன தொடர்பான கட்டுரைகளை எழுதினார். அவற்றில் இஸ்லாமிய சமுகம் பற்றிய அவரது உணர்வலைகள் தொணித்தன.


      அந்தவகையில் இக்குறித்த காலப்பகுதியில் மௌலானா மௌதூதி (ரஹ்), அபுல் கலாம் ஆஸாத் ஆகிய இருவரும் சமுகத்தினை வழி நடத்துவதில் பத்திரிகைகள், சஞ்சிகைகள், நூல்கள் மூலம் பல்வேறு சிந்தனைகளை முன்வைத்த போதிலும், பல்வேறு அமைப்புக்கள், இயக்கங்களின் வாயிலாக சமுகத்தினை வழிநடத்திய சந்தர்ப்பங்களிலும் இவ்விரு சிந்தனையாளர்களது இக்கால சிந்தகைள் ஒருவருக்கொருவர் முரண்பாடான சிந்தனைகளை இருந்துள்ளது.


      குறிப்பாக அபுல்கலாம் ஆஸாத் தேசியவாத சிந்தனை இஸ்லாமிய சமுகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தின் பிரதிபலனாக அச்சிந்தனையையும், அந்சிந்தனையை தாங்கியிருப்போரையும் எதிர்க்கும் மனப்பாங்கு கொண்ட நிலையிலும், மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்கள் நாட்டு முஸ்லிம்களது எதிர்கால நலன் கருதி தேசியவாத சிந்தனைக்கு சார்பாக குரலெழுப்பி சமுகத்தினை கிலாபத்தின் மீளெழுச்சிக்காக  முயற்சி மேற்கொண்டமையையும் காணலாம்.

03. அபுல்கலாம் ஆஸாதின் 1920 இற்கு பிற்பட்ட காலப்பகுதி

    1920 இற்குப் பிற்பட்ட காலப்பகுதியில் அபுல்காலாம் ஆஸாத் அவர்களது சிந்தனையில் பாரிய மாற்றம் ஏற்படுகிறது. 1920 இற்கு முன்பு எவ்வாறு தேசியவாதத்தின் கடும் எதிரியாக இருந்தாரோ, அதேயளவு 1920 இற்குப் பின்பு தேசிய வாதத்தின் கடும் ஆதரவாளராக மாறுகிறார்.


   ஆரம்ப காலகட்டங்களில் தேசியவாதமானது இஸ்லாமிய சமுகத்திற்கு தீங்குபயக்கும் எனக்கண்ட இவர் அதற்கு கடும் விரோதியாக செயற்பட்டார். ஆனால் பிற்பட்ட காலத்தில் அவரது சிந்தனை மாற்றத்துக்கு பல்வேறு நியாயங்கள் காரணமாயின. அவற்றில்  இந்தியாவுக்கு சுதந்திரம் பெறல், இந்தியாவில் பெரும்பாண்மை சமுகமாக வாழ்ந்த இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே ஒற்றுமையை ஏற்படுத்தல் என்ற காரணங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.


      அபுல்கலாம் ஆஸாத் தீவிர சுதந்திரப்போராட்ட வீரர். அந்தவகையில், முஸ்லிம்களது புனிதப் போராட்டம் ஜிஹாதிற்கு வித்தியாசமானதொரு விளக்கத்தினை வழங்கினார். 'ஜிஹாத் சுதந்திரத்திற்கான சிலுவைப்போர்' என பிரகடனப்படுத்தினார். அது பற்றிக் குறிப்பிடும் அவர், ' நீங்கள் எண்ணற்ற இரவுகளை மயக்கத்தில் கழித்துவிட்டீர்கள்.இறைவனுக்காக எழுந்து இறங்குங்கள். சூரியன் தொடுவானத்தை எட்டியிருப்பதைப் பாருங்கள். உங்கள் நன்பர்கள் எவ்வளவு பின்தங்கிய நிலையில் உள்ளார்கள்? நீங்கள் எவ்வளவு பின்னடைவில் இருக்கின்றீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். இஸ்லாம் உங்களிடம் வேண்டுவதென்ன?எதுவரை உங்களது துர்செயல்கள் இறை விசுவாசத்திற்கு மாசு கற்பிக்கும். எவ்வளவு காலம் உங்;களைப் பார்த்து உலகம் சிரிக்க வேண்டும். நீங்கள் இதுவரை முகம்கொடுக்காத அழிவுகளும், அபாயங்களும் இன்னும் எஞ்சியிருக்கிறதா? அறிந்துகொள்ளுங்கள் ஹிந்துக்களுக்கு நாட்டின் சுதந்திரம் தேசப்பற்றின் ஒரு பகுதி மாத்திரமே. ஆனால் ஒரு முஸ்லிமுக்கு அது ஒரு மார்க்கக் கடமை. அல்லாஹ்வின் பாதையிலான போராட்டம். அவன் முஜாஹித்களான உங்களுக்கு உண்மைக்காகவும், நீதிக்காகவும் போராடும்படி பொறுப்புச் சாட்டியுள்ளான். ஜிஹாத் என்பது அடிமைத்துவ விலங்கினை உடைத்தெரிவதாகும். நீங்கள் ஆரம்பித்து வைத்திருக்க வேண்டிய சிலுவைப் போராட்டத்திலேயே நாடு இப்போது விடுதலைப் போராட்டமாக போராட்டமாக போராடிக்கொண்டிருக்கிறது. விளித்தெழுங்கள்! ஏனெனில் அல்லாஹ் நீங்கள் கிளர்ந்தெழ வேண்டும் என விரும்புகின்றான். உலகின் ஏனைய பாகங்களில் நீங்கள் எதனை நிலைநாட்ட வேண்டும் என்று விரும்புகிறானோ அதனை நிறைவேற்றுவதற்கு நீங்கள் கடமைப்பட்ட நிலையிலும் நீங்கள் இதுவரை எதுவும் செய்யவில்லை'. (6) என ஜிஹாத் அழைப்பை ஆங்கிலேயருக்கு எதிராக அவர் இந்திய முஸ்லிம்களை நோக்கி விடுக்கிறார்.


    இரு சமுகங்களும் ஒன்றிணையாது சுதந்திரம் சாத்தியமற்றது என்பதை அறிந்திருந்த அவர் இரு சமுகங்களையும் ஒற்றுமைப்படுத்த முயற்சி மேற்கொண்டார். எனவே, ஒவ்வொரு இந்திய முஸ்லிமும் இநதிய மகன் என்ற அடிப்படையில் தனி நாட்டுப் போராட்டத்தை கடுமையாக எதிர்த்தார். 'முஸ்லிம்கள் சிறுபான்மையென்ற ரீதியில் முன்வைத்த கருத்தை கடுமையாக விமர்சித்தார். சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களின் உரிமைகளும் மாறுபடவேண்டும். ஏனெனில், அவர்கள் அரசியல் ரீதியான சிறுபான்மையினரே'எனபது மிக பிழையான கருத்து என்பதை முன்வைத்த அவர், இந்த ஒரு மிகப் பிழையான கருதுகோள் பல்வேறுபட்ட பிழையான சிந்தனைப்போக்கிற்கு காரணமாக அமைந்துள்ளதாக காண்கிறார்.


      ஒருபுரத்தில் முஸ்லிம்களது உண்மை நிலையைப் புரிந்து கொள்ள ஏற்படுத்தப்பட்ட தடுமாற்றம். மறு பக்கம் அது உலக மக்களை இந்திய முஸ்லிம்கள் தொடர்பில் சரியான கண்ணோட்டத்தினைப் பெறுவதில் தடையாக அமைந்ததாக அவர் கருதுகிறார். இது பிரித்தானியரின் பிரித்தாளும் கொள்கையின் பின்னணியில் காங்கிரஸ் தனது தேசிய முன்னணியைத் தொடங்கிய பின்பு ஏற்படுத்தப்பட்ட சிந்தனை வடிவமாகவும் இதன் உள் நோக்கம் முஸ்லிம்களின் அரசியல் விழிப்புணர்வை மழுங்கடிக்கச்செய்வதாகும் எனவும் அவர் காண்கிறார்.

முஸ்லிம் லீக் தனி நாட்டு கோரிக்கைய முன்னெடுத்துச் சென்றபோது இவர் பல்வேறு காரணங்களால் அதனை கடுமையாக எதிர்த்தார். முஸ்லிம்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்கள். எனவே, ஜனநாயக நிறுவனம் ஒன்று ஏற்படுத்தப்படுமிடத்தில் அது ஹிந்துக்கள் பெரும்பாண்மை ஆட்சிக்கே வழிவகுக்கும் இது முஸ்லிம்களின் இருப்பையே அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் என அவர் கருதினார்.


     முஸ்லிம்கள் சிறுபான்மை என்பதற்கு அஞ்சும் நிலையை கண்டிக்கிறார் .'சிறுபான்மை என்பது அரசியல் அகராதியில் எண்ணிக்கை அடிப்படையில் குறைவினைக் காட்டாது. அதற்கு மாற்றமாக, அது ஒரு தரமான பாரிய  சமுகத்தின் மத்தியில் எண்ணிக்கை அடிப்படையிலும், செல்வாக்குச் செலுத்தும் செயற்றிறன் அற்ற தன்மையையும் உள்ள மக்கள் மக்கள் தொகுதியைக் குறிக்கும்.


    அவர்கள் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் உள்ளடக்கப்பட்டவர்களாக அல்லாமல் எல்லா பிரதேசங்களிலும் பிரிந்து வாழ்வார்கள். இந்தியாவின் 11 மாநிலங்களில் 3 மாநிலங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். 'பிரித்தானிய பலுசிஸ்தான்' சேரும் போது ஐந்து மாநிலங்களாக மாறுகின்றன. மதங்களின் அடிப்படையில் நாம் சிறுபாண்மை, பெரும்பான்மை பார்த்தாலும் முஸ்லிம்களின் நிலை சிறுபான்மையல்ல. முஸ்லிம்கள் 7 மாநிலங்களில் பெரும்பான்மையாகவும் 5 மாநிலங்களில் சிறுபாண்மையாவும் வாழ்கின்றனர். எனவே, முஸ்லிம்கள் நாங்கள் சிறுபான்மையினர் என்று கவலையடையத் தேவையில்லை. எவ்வாறான அரசியலமைப்பு எதிர்காலத்தில் இந்தியாவில் ஏற்பட்டாலும் அது ஜனநாயக மரபை உள்ளடக்கியதாக இருக்கும்.


     உள்நாட்டு விவகாரங்களைப் பொருத்தவரை ஒவ்வொரு அங்கமும் தனித்தனி ஆடசியமைப்பாக இருக்கும். வெளிநாட்டு விவகாரங்கள், பாதுகாப்பு போன்ற விவகாரங்களில் மத்திய அரசு பொறுப்பாக இருக்கும். இவ்வாறு, பிற்காலத்தில் பெரும்பான்மை, சிறுபாண்மை என்ற பிரச்ச்சினை ஜனநாயக ரீதியிலான அரசியலமைப்பில் பாதிப்புக்களை ஏற்படுத்த முடியுமா?'. (7) என அவர் சுதந்திர இந்தியாவின் நிலை குறித்து தெளிவு படுத்துகிறார்.


      அபுல்கலாம் ஆஸாத் 1940 ஆம் ஆண்டு தேசிய காங்கிரஸின் தலைமை உரையின் போது 'முஸ்லிம்களும் தேசியவாத ஒருங்கமைப்பும்' என்ற கட்டமைப்பில் பேசும் போது பின்வருமாறு குறிப்பிடுகிறார்.' நான் ஒரு முஸ்லிம். இஸ்லாத்தின் 13 நூற்றாண்டு கால புகழ்பூத்த பாரம்பரியங்களை ஆழமாக உணர்ந்தவன். அதன் ஒரு சிரிய பகுதியை இழப்பதற்கும் நான் தயாரில்லை. இஸ்லாத்தின் நெறிகளும், வழிகாட்டல்களும், அதன் கலைகளும், எழுத்துக்களும், அதன் கலாசாரங்களும் எனது சொத்தாகும். அவற்றை பராமரிப்பதும் பாதுகாப்பதும் எனது கடமை. ஒரு முஸ்லிம் என்ற ரீதியில் எனக்கு.ஸ்லாத்தினுள் ஒரு விஷேட அடையாளமும், கலாசாரமும் உண்டு. அநாவசியமான தலையீட்டை அதில் நான் விரும்புவதில்லை. ஆனால் இவ்வாறான உணர்வுடன் எனது அனுபவத்தின் அடியாக என்னுள் ஏற்பட்ட ஆழமான தெளிவு உண்டு. அது இஸ்லாத்தின் ஊற்றினில் வழுவூட்டப்பட்டதே தவிர இடைஞ்சல் ஏற்படுத்தப்படவில்லை. நான் அதற்கு சமாந்திரமாகவே இந்தியன் என்பதில் பெருமைப்படுகிறேன். இது இந்திய தேசியத்துவத்தின் புலனுக்கெட்டாத ஒரு பகுதியாகும். எனக்கு இந்த மனப்பூர்வமான சிந்தனையைக் கைவிட முடியாது. பல்வேறுபட்ட குனங்கள், கலாசாரங்கள், மதங்கள் சங்கமமான ஒரு தேசம் என்ற இந்தியாவின் சரித்திரத்தில் இருந்து விடு பட முடியாது.


      ஹிந்துத்துவத்தைப் போன்றே இஸ்லாத்தி;ற்கும் இந்த பூமியின் மீது உரிமை கோரும் தகுதி உண்டு. ஹிந்துத்துவம் இந்த தேச மக்களின் மதமாக பல ஆயிரம் வருடங்கள் உள்ளது போல் இஸ்லாமும் இந்த நாட்டு மக்களால் ஆயிரம் வருடங்களுக்கு மேல் பின்பற்றப்படுகிறது. ஒரு ஹிந்து 'நான் ஒரு ஹிந்து, நான் ஒரு இந்தியன்' என  கூற முடியுமானால், ஒரு முஸ்லிம் 'நான் ஒரு முஸ்லிம், நான் ஒரு இந்தியன்' என்றும் கூற முடியும்.


     11 நூற்றாண்டு கால எமது சரித்திரம் இந்தியாவின் நிர்மாணத்தில் அபரிமித பங்கை செய்துள்ளது. எமது மொழிகள், எமது கவிதைகள், எமது இலக்கியம், எமது கலாசாரம், எமது கலைகள், எமது ஆடைகள், எமது பழக்கவழக்கங்கள் என்பன எமது பொதுவான வாழ்க்கை வழிமுறைகளின் சின்னங்களாகும். இந்த பொதுவான சொத்துக்களும் அடைவுகளும் புறந்தள்ளப்பட்டு பழைய நிலைக்கு செல்வதென்பது எமக்கு தேவையில்லாத விடயம்' என அவர் குறிப்பிட்டார். (8)


    இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் இந்தியர்கள் அவர்களது வாழ்வு முறை பல கலாசாரங்களின் கூட்டுக் கலவை. எனவே, என்ற அம்சத்தை கூற வந்த  அவர்,' எந்த முஸ்லிமாவது ஈரானிலும், மத்தியாசியாவிலிருந்தும் தாம் கொண்டு வந்த பழைய கலாசாரத்தையும் நாகரிகத்தினையும் நோக்கிச் செல்ல வேண்டும் என்று விரும்பினால் அவர்கள் தமது கனவிலிருந்து விழித்துக் கொள்ளட்டும். நாம் விரும்பியோ, விரும்பாமலோ தற்போது இந்தியர்களாக ஒன்றுபட்டு பிரிக்க முடியாதவர்களாக உள்ளோம். பிரிவனை வாதம் என்ற பொய்யான சிந்தனை எம்மை உடைக்க முடியாது. நாம் எமது யதார்த்தபூர்வமான நிலையைப் புரிந்துணர்ந்து எமது எதிர்காலத்தை செப்பனிடுவோம்'. ( 9) என குறிப்பிடுகிறார்.


     இந்தியா பிரிக்கப்பட்ட நிலை கண்டு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஆஸாத் அன்றைய டில்லி முஸ்லிம்களுக்காக உரை நிகழ்த்தும் போது பின்வருமாறு கருத்துரைத்தார். ' இந்தியா பிரிக்கப்பட்டமை ஒரு அடிப்படைத் தவறாகும். மத ரீதியான உணர்வுகளின் தூண்டுதல்கள் தவிர்க்க முடியாத அழிவுகளையும் நாசத்தினையும் ஏற்படுத்தியமை நாம் கண்கூடாகப் பார்த்தோம். துரதிஷடவசமாக சிற்சில இடங்களில் இன்றும் நாம் கண்டு வருகிறோம். கடந்த ஒரு வருட கால கசப்பான அனுபவங்களை மீட்டிப்பார்ப்பதில் பயனில்லை. ஆனால் இந்திய முஸ்லிம்களின் இப்பாரிய பின்னடைவுக்கு முஸ்லிம் லீக் உடைய தலைமையின் பாரிய தவறுகள் காரணம் என்பதையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஆனால், இவை எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. இவற்றை நான் ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்த்திருந்தேன். இப்போது இந்திய அரசியல் வித்தியாசமான திசையை நோக்கிச் செல்கிறது...' (10)என்ற கருத்தை குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


      பாகிஸ்தான் உருவாக்கத் திட்டமானது முஸ்லிம் சமுகத்திற்கு எவ்வித பலனையும் தர மாட்டாது என ஆஸாத் கருதினார். டாக்டர் எட்வர்ட் தொம்ஸன், இந்தியாவின் பல்லாயிரம் நகரங்கள், கிராமங்கள், குக்கிராமங்களில் முஸ்லிம்களுடன் ஹிந்துக்கள் வாழ்வதும் அது எவ்வகையிலும் மாறுபட்ட தேசிய இனம் என்பதைப் பாதிக்கவில்லை என்பதுவும்  சுட்டிக்காட்டப்பட்டபோது, முஸ்லிம் லீக் அப்பிரதேசங்களில் மோதல் நிலையில் இருப்பதாகவும் அதனால் பிரிவினை அவசியம் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டபோது, இவர்,' இந்தப் பிரச்சினையின் ஏனைய பகுதிகளை விட்டு முஸ்லிம்களின் நலனை மாத்திரம் கருத்தில் கொள்ளத் தயார். அதனை விட ஒரு படி மேலே சென்று பாகிஸ்தானியத் திட்டம் முஸ்லிம்களுக்கு நன்மையைக் கொண்டுவரும் என்பது தெளிவுபடுத்தப்பட்டால் நானும் அதனை ஏற்றுக் கொண்டு அதற்காக உழைக்கத் தயாராக உள்ளேன். ஆனால் முஸ்லிம்களின் சமுக நலன்களை மாத்திரம் கருத்திற் கொண்டு இதனை ஆய்வு செய்தாலும் இது முஸ்லிம்களின் நியாயமான பயத்தை நீக்கும் செயலாக அமைய மாட்டாது' (11) எனவும் அவர் குறி;பிட்டார்.


     இதற்கு நியாயத்தினை கூறும் ஆஸாத் ' பாகிஸ்தான் திட்டத்தின் விளைவாக, இந்தியா இரு நாடுகளாகப் பிரியும். ஒன்று முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டது. மற்றையது ஹிந்துக்களை பெரும்பான்மையாகக் கொண்டது. ஹிந்துஸ்தான் பிரதேசத்தில் 3 1ஃ2 கோடி முஸ்லிம்கள் பரந்துபட்ட சிறு குழுமங்களாக சிதறி சிறுபான்மையாக வாழ்வார்கள். உத்தரப் பிரதேசத்தில் 17மூ, பீகாரில் 12மூ, மதராசில் 9மூ என மிக வலிமையிழந்து இன்று ஹிந்துக்கள் பெரும்பான்மையான மாநிலங்களில் வாழ்வதை விட சிறுபாண்மையான நிலையில்  வாழ்வார்கள். முஸ்லிம்கள் ஆயிரக் கணக்கான வருடங்கள் இப்பிரதேசங்களில் வாழ்ந்து, அவர்களது கலாசார, நாகரிக சின்னங்களை கட்டிக்காத்து வளர்த்த பிரதேசங்களை தாம் இவை. அவர்கள் ஒரே இரவில் தம்மை வேற்றுக் கிரக வாசிகளாக அந்நியர்களாக, தொழில், கல்வி, தொழில்நுட்ப, பொருளாதாரம் பின்னடைந்தவர்களாக கலப்படமற்ற ஹிந்து ராஜ்யத்தின் தயவில் காண்பார்கள். மருபுறத்தில், பாகிஸ்தனில் அவர்களது நிலை மிகப்பலயீனமானதும், பாகிஸ்தானின் எந்கப்பிரதேசத்திலும் இந்தியாவின் ஹிந்து ராஜ்யத்தில் போன்று இருக்க மாட்டாது. முஸ்லிம் பெரும்பாண்மை எண்ணிக்கையில் குறைவானதாகவும், முஸ்லிமல்லாதவர் அனுபவிக்கும் பொருளாதார, கல்வி, அரசியல் உரிமைகள் அதனைப் பின்தள்ளி விடும். பாகிஸ்தான் முஸ்லிம் பெரும்பான்மையாகவே கொள்ளப்பட்டாலும் ஹிந்து ராஜ்யத்தினுள் சிக்குண்டு வாழும் முஸ்லிம்களுக்காக அவர்களால் எதுவும் செய்ய முடியாது போகும். ஒன்றையொன்று எதிர்க்கும் இரு நாடுகள் மற்றைய நாட்டிலுள்ள சிறுபாண்மை தொடர்பாக எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கும்.


    பாகிஸ்தான் திட்டத்தின் அடிப்படை மத்திய அரசில் ஹிந்துக்களின் பெரும்பாண்மை காரணமாக முஸ்லிம்களின் விவகாரங்களில் தலையீடு அதிகரிக்கும் என்ற பயமாகும். மத்திய அரசு மாநில அரசுக்கு பூரண அதிகாரங்களை வழங்குவதன் மூலம் அதனைத் தீர்க்க முன்வந்துள்ளது. இதன்படி முஸ்லிம்கள் பெரும்பான்மையான மாநிலங்களில் தமது விருப்பப்படி அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதுடன் ஒட்டுமொத்த இந்தியாவின் பிரச்சினைகளையும் எதிர்கொள்வதில் பங்களிப்பு செய்வதாகும். இன்றைய நிலையில் இந்தியா பொறுப்புக்களை ஏற்று செயற்படும் போது வீண் பயம் நீங்கி மக்கள் பரஸ்பர ஒத்துழைப்புடன் வாழப் பழகிக் கொள்வர்.

 

     பிரிவினைகள் காணப்படும். ஆனால், அவை இனத்துவப் பிரிவினைகள் அல்ல. பொருளாதாரப் பிரிவினைகள். அரசியல் கட்சிகளுக்கிடையில் எதிர்ப்புக்கள் காணப்படும். ஆனால், அவை சமய சார்பு எதிர்ப்பலைகள் அல்ல. மாறாக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகள் சார்ந்ததாக இருக்கும். இவை யாவும் நம்பிக்கை மாத்திரமே. சில சமயம் இவை செயற்படாமல் போகலாம் என யாராவது வாதாடினால் 9 கோடி முஸ்லிம்கள் எவராலும் மறுக்க முடியாத ஒரு சக்தியாக இருப்பர். எவ்வாறான சூழல் ஏற்பட்டாலும் தமது எதிர்காலத்தை செப்பனிட்டுக் கொள்ளக்கூடிய பிரமாண்டமான சக்தியாக அவர்கள் இருப்பர்'  (12) என அவர் குறிப்பிடுகிறார்.

4. மௌலானா மௌதூதி (ரஹ்) கொண்டிருந்த அபுல்கலாம் ஆஸாதின்  சிந்தனையிலிருந்து வேறுபட்ட  சிந்தனையும், அவர் தனது சிந்தனையில் முஸ்லிம் சமூகத்தை தட்டியெழுப்ப எடுத்த நடவடிக்கைகளும்

    மௌலானா மௌதூதி (ரஹ்) இந்திய முஸ்லிம் சமூகத்தை வழிநடத்த சமகாலத்தவரான அபுல்கலாம் ஆஸாத் என்பரது சிந்தனையிலிருந்து வேறுபட்ட ஒரு சிந்தனையைக் கைக்கொண்டார். இருவரும் சமகாலத்தவர்களாக இருப்பினும் இருவரதும் சிந்தனைப்பாங்குகள் வித்தியாசமாக அமைந்திருந்தன. ஆரம்பத்தில் நாம் நோக்கியது போன்று அபுல்கலாம் ஆஸாத் அவர்கள் தேசியவாத சிந்தனையின் கடும் எதிரியாக இருந்த வேளை மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்கள் பல காரணங்களுக்காக தேசியவாதத்தினை ஆதரித்த நிலையை காண முடிகிறது. அன்று பொது எதிரியாக கருதப்பட்டு வந்த பிரிட்டிஷாரை எதிர்க்கும் நோக்கில் அனைவரும் தேசியம் என்ற ரீதியில் ஒன்றிணைவதில் தவறில்லை என ஆரம்பத்தில் கருதியிருந்தார்.


      இக்கருத்தை உறுதிப்படுத்தும் வகையிலேயே அவரது செயற்பாடுகளும் அமைந்திருந்தன. 1920களில் இந்தியாவுக்கு சுதந்திரம் வேண்டும் என்ற போராட்டத்திலும் மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்கள் கலந்து கொண்டார்கள். மஹாத்மா காந்தி தலைமையிலான கிலாபத் அமைப்புக்கு ஆதரவு வழங்கினார். ஹிந்துக்கள் இவ்வாறு இஸ்லாமிய கிலாபத்தை வரவேற்பதால் தாமும் தேசியவாதத்தினை ஆதரிப்பதில் தவறில்லை எனக் கருதினார். எனவேதான் ஜம்இய்யதுல் உலமாவினால் வெளியிடப்பட்ட 'முஸ்லிம்' பத்திரிகைக்கு ஆசிரியராக பணியாற்றினார்.


     இரண்டாம் உலக மகா யுத்த முடிவின் போது முஸ்லிம்களின் எதிர்பார்க்கைக்கு முற்றிலும் முரணான முடிவு ஏற்பட்டு பிரிட்டிஷாரினால் முஸ்லிம்கள் பெருத்த ஏமாற்றத்தை அடைந்தனர். கிலாபத் அழிக்கப்படுவதில்லை எனவும், முஸ்லிம்களுக்கு சுதந்திரம் தம் கூறி முஸ்லிம், அரபு நாடுகளிலிருந்து படை திரட்டி அதன் மூலமாகவே கிலாபத்தையும் ஒழித்து, போதாக்குறைக்கு முஸ்லிம் தேசங்களையும் தேசியவாதம் என்ற போர்வையால் துண்டு துண்டாக சிதைத்தனர். எனவே மௌலானாவுக்கு தேசியவாதம் தொடர்பில் பலத்த சந்தேகம் தோன்றியது. தேசியவாதம் முஸ்லிம்களுக்கு எவ்வித பலனையும் தர மாட்டாது. முஸ்லிமல்லாதவர்கள் தமது நலன்களை அடைந்து கொள்வதற்கு பகடைக் காயாய் இதனைப் பயன்படுத்துகின்றனர் என்ற முடிவுக்கு அவர் வருகின்றார்.


      இந்திய தேசிய காங்கிரஸ் தேசியவாதம் என்ற போர்வையில் ஹிந்துக்களது நலன் பேணுவதை அவதானித்த மௌலானா ஆரம்பத்தில் தன்னிடம் இருந்த தேசியவாத சார்பு சிந்தனையை தேசியவாத எதிர்ப்பு சிந்தனையாக மாற்றிக் கொள்கிறார். இங்கு ஆஸாதுக்கு மாற்றமான சிந்தனையை அவர் கொள்கிறார்.


       ஜம்இய்யதுல் உலமா ஹிந்தும் காங்கிரஸை ஆதரிக்கிக்கின்றனர். அதில் அங்கம் வகித்தவர்களுள் ஒருவரே அபுல்கலாம் ஆஸாத். அதன் தொண்டர்கள் அனைவரும் விடுதலைப் போரில் முழு மூச்சாக பங்கு கொண்டனர். காந்தியின் வாக்குகள் வேதவாக்காகக் கொள்ளப்பட்டன. இதை அவதானித்த மௌலானா இது இஸ்லாத்தின் தனித்தன்மையையும், பண்பாட்டையும் பாழாக்கிவிடும் எனப் பயந்தார். இதனை ஜம்இய்யாவின் முஸ்லிம் இதழில் ஒரு தலையங்கமாகவே எழுதினார். 'விடுதலைப்போராட்டம் தேவைதான். அதற்காக நாம் நமது தனித்தன்மையை இழந்துவிடக்கூடாது. அது மிகப்பெரிய அபாயமாகும். ஜம்இய்யதுல் உலமாவின் தனித்தன்மை இஸ்லாமியத் தனித்துவம். அதுதான் நமது அடையாளம். அதை நாம் புறக்கணித்து விடக்கூடாது. முதலிலும் நாம் முஸ்லிம்கள், முற்றாகவும் நாம் முஸ்லிம்கள். இது மிகப் பெரும் உண்மை. இந்த உண்மை நிலையை மறக்காமலேயே நாம் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும்' (13)என குறிப்பிடுகிறார். எனவே, அவர்களுடன் முரண்பட்டு தான் ஆசிரியராக இருந்த 'முஸ்லிம்' பத்திரிகையையும், ஜம்இய்யதுல் உலமாவை விட்டும் வெளியேறுகின்றார். அத்தோடு, காங்கிரஸை ஆதரித்தவர்களையும் அவர் ஆதரிக்கவில்லை. இக்காலப்பிரிவில் ஆஸாத் ஜம்இய்யதுல் எலமாவின் செயற்குழுவில் இருந்ததோடு, தேசிய காங்கிரஸையும், தேசியவாதத்தினையும்  ஆதரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


     பின்பு மௌலானா இஸ்லாமிய சிந்தனையின் அடியிலான போராட்ட அரங்கொன்றை உருவாக்க முயற்சியெடுக்கிறார். தேசியவாத சிந்தனைக்குப் பதிலாக முஸ்லிம்களது நலன் பேணும் வகையிலான சிந்தனையை முன்வைக்க முயற்சி மேற்கொள்கிறார். காரணம் மற்றைய சிந்தனைகள் எவ்வகையிலும் பயன்தராத நிலையை அவர் அனுபவ ரீதியில் கண்டிருந்ததார்.


     ஹைதராபாத்தில் குடியேறியிருந்த இமாமவர்கள் சமுகமொன்றையும் ஆட்சி முறையொன்றையும்  அடிப்படையிலிருந்து ஆரம்பிப்பதை விட ஏற்கனவே மெகலாய வம்சத்தின் எச்சங்களாக ஹைதராபத்தில் கானப்பட்ட நிளாம் அவர்களிடம் சென்று ஆட்சியை, சட்டதிட்டங்களை, சமுக அமைப்பை இஸ்லாமிய மயப்படுத்துமாறு கோரிக்கை விடுத்தார். ஆயினும் அவர் மறுத்து விட்டார்.


      அடுத்த கட்டமாக முஸ்லிம் சமுக நலன் காக்கும் நோக்கிலும், முஸ்லிம்களை இந்துக் கலாசாரத்திலிருந்து விடுதலை பெறச் செய்யவும் வழி தேடினார். அதன் விளைவே 1928 ஆம் ஆண்டு அவரால் துவங்கப்பட்ட 'தர்ஜூமானுல் குர்ஆன்' சஞ்சிகையாகும். இச்சஞ்சிகையூடாக மேற்சொன்ன பிரச்சினைகளுக்கு தீர்வு தேடவாரம்பித்தார்.


     எனவேதான் அவர் இந்து மத கலாசாரங்களுடன் இஸ்லாமிய கலாசாரம் கலந்து இஸ்லாமிய கலாசாரத்தின் தனித்துவம் இல்லாமல் போவதை விரும்பவில்லை. அதை கடுமையாக விமர்சித்தார். அவர் இதுபற்றிக் குறிப்பிடும் போது, ' இன்று முஸ்லிம்கள் என்று பெயர் தாங்கி நிற்கும் சமுகத்தின் நிலையைப் பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள். நயவஞ்சகம், தவறான நம்பிக்கை ஆகியன அவற்றின் முழு வடிவிலும் முஸ்லிம்களிடம் குடிகொண்டுள்ளன. இஸ்லாத்தைப்பற்றிய அறியாமையின் காரணமாக அவர்களிடம் அந்நியக் கொள்கைகளும், நம்பிக்கைகளும் புகுந்து ஆட்சி செய்கின்றன. இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளை சந்தேகிப்பவர்கள் கூட இந்த சமுக அமைப்பில் இடம் பிடித்துக் கொண்டுள்ளார்கள்...' (14)என குறிப்பிடுகிறார்.


    இந்நிலையில் அபுல்கலாம் ஆஸாத் இஸ்லாமிய இந்துக் கலவைக் கலாசாரத்தினை அங்கீகரித்துள்ளமையை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம்.


    முஸ்லிம் சமுகத்திற்கென்று ஒரு இலட்சியமுன்டு. அந்த இலட்சியத்தினை நோக்கியதாகவே அதன் அங்கத்தவர்கள் பிரயானிக்க வேண்டும் என்ற கண்ணோக்கு கொண்ட மௌலானா அவர்கள், ' இஸ்லாமிய இலட்சியங்களுக்கு முரணாக நடந்து மற்றவர்களைத் திருப்திப் படுத்துபவர்களும், தமக்கு ஏற்படும் மிகச் சிறிய நஷடத்தைப் பொறுத்துக் கொள்ளும் அளவிற்கேனும் தமக்கு இஸ்லாத்தில் பற்றில்லை என்பதை செயல் மூலம் நிரூபித்துக் கொண்டிருப்பவர்களும் இந்த சமுக அமைப்பில் அங்கம் வகிக்கிறார்கள்'. (15) என குறிப்பிடுகிறார்.


     ஆஸாதின் செயலுக்கு வித்தியாசப்படும் மற்றுமொரு முக்கிய கட்டம்தான் சீர்திருத்த இயக்கமாகும். அதாவது, ஆஸாத் நீண்ட காலமாக 'லஸானுஸ் ஸித்க்', 'அல்ஹிலால்' ஆகிய சஞ்சிகைகள் மூலம் நடைமுறை விடயங்களை தெளிவு படுத்திய போதும் அவர் சீர்திருத்த இயக்கமொன்றை ஸ்தாபிக்கவில்லை. ஏற்கனவே உருவாக்கப்பட்ட தேசியவாதத்துக்கு சார்பான ஜம்இய்யது உலாமாஉ ஹிந்து, இந்திய தேசிய காங்கிரஸ் போன்ற அமைப்புக்களில் அங்கம் வகிப்பதன் மூலம் கருத்துக்கனை வெளியிட்டார். ஆனால், மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்கள் இந்நிலையிலிருந்து வித்தியாசப்படுகிறார். இருக்கக்கூடிய அமைப்புக்கள் முஸ்லிம் சமுகத்திற்கு பயனளிக்காமையையும், அவற்றின் மூலம் சமுகத்திற்கு கேடு விளையும் நிலையையும் கண்டு அவற்றிலிருந்து ஒதுங்கி தனது தர்ஜூமானுல் குர்ஆன் மூலமான நீண்ட கால கடும் உழைப்பின் விளைவாக தூய இஸ்லாத்தை சுமக்கும் உலகை வழிநடத்தும் தகுதிகொண்ட மாபெரும் 'ஜமாஅதே இஸ்லாமி' இயக்கத்தினைத் தோற்றுவிக்கிறார்கள். அவ்வியக்கத்தின் மூலமாக இஸ்லாமிய சமுகத்தினை மீளக் கட்டியெழுப்ப முயற்றிக்கிறார்கள்.


    இவ்வியக்கம் சிந்தனை ரீதியாக முஸ்லிம்களை வழிநடத்துவதில் பின்வரும் தாக்கங்களை ஏற்படுத்தியது.


1. இஸ்லாம் வெருமனே ஓரு மதமல்ல. ஒரு முழுமையான வாழ்க்கை முiறாயகும். இஸ்லாம் உலகில் தோல்வியடைய வரவில்லை. உலகிற்கு நேர்வழிகாட்ட வந்ததாகும். இந்த நூற்றாண்டில் வாழ்ந்த  பெரும் அறிஞர்கள் இஸ்லாத்தை குறுகிய ஒரு மதமாக அறிகப்படுத்திக் கொண்டிருந்த வேளையில் இஸ்லர்திற்கென தனியான தத்துவக் கோட்பாடு, தனித்துவம், நாகரிகம், சமுக அமைப்பு, பொருளாதார உண்டு என்பதை அது ஆணித்தரமாக நிறுவுகிறத.


2. இஸ்லாத்திற்கும் ஜாஹிலிய்யத்துக்கும் இடையிலான வேறுபாடு விளக்கப்பட்டது.


3. அல்லாஹ்வின் பிரபஞ்ச நியதிகளை ஏற்றுக் கொள்வதுடன், அவனது சட்டமியற்றும் அதிகாரத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லையேல் ஈமான் பூர்த்தியடையாது என இறைவனின் மேலான்மையை மௌலானா இதன் மூலம் தெளிவுபடுத்துகிறார்.


4. மேற்கத்தைய நாகரிக மோகம் முடிவுற்று இஸ்லாமிய நாகரிகத்தின் நிலையும், அதன் மேன்மையும் நிலைநிறுத்தப்பட்டது.

5. மதத்திற்கும் அரசியலுக்கும் இடையே காணப்பட்ட இடைவெளியை முடிவுறச் செய்தமை. (16)போன்ற சிந்தனா ரீதியான தாக்கங்களை இவ்வியக்கம் மூலம் மௌலானா மௌதூதி (ரஹ்) ஏற்படுத்தினார்.


     இவ்வியக்கம் நிறுவப்படும் வேளையில் இந்தியாவில் இரு இயக்கங்கள் செயற்பட்டன. முதலாவது இயக்கத்தின் அடிப்படையே தேசியம் அல்லது தேசியவாதம். அது நாட்டு மக்கள் அனைவரையும் ஓர் இனமாகக் கருதியது. எல்லாவற்றையும் விட நாட்டு நலனே முக்கியமானது என அது கருதியது. நாட்டுக்கு நலன்பயக்கும் எதுவாயினும் அதனைப் பொருத்தவரை சரியானதே. அதiனைப் பொருத்தவரை மக்களின் சிந்தனை,கருத்துக்களில், மற்ற நாடுகளில் எத்துணை இழப்புக்ககள் ஏற்பட்டாலும் அவையெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.


     இரண்டாவது இயக்கத்தின் அடிப்படை இனவாதமாகும். மற்றெல்லா சமுகங்களின் நலன்களை விட தனது சமுகத்தின் நலனுக்கே முதலுரிமை தரப்பட வேண்டும் என்பதே அதன் அடி நாதமாக விளங்கியது. சமுகத்திற்கு பயனளிக்கும் எதுவாயினும் எவ்வித தயக்கமும், சலனமுமின்றி செய்வது. அது பொய்யாகவோ, மோசடியாகவோ, அநீதியாகவோ, இரக்கமற்ற கல் நெஞ்சாகவோ இருந்தாலும் சரியே. தனது சமுகத்திற்கு தீங்கு, இழப்பு ஏற்படும் எனக்கருதும் சகலதையும் விலக்கி விடுதல். அது உண்மை, நீதி, நேர்மை, கருணை, கண்ணியம், மனதாபிமானம் எதுவாக இருப்பினும் சரியே.


     இத்தகைய இரு குழுக்களில் முதல் வகைக் குழுவில் அபுல் கலாம் ஆஸாத் செயற்பட்டுக் கொண்டிருந்தார். அவ்வேளையில், மூன்றாவது ஒன்றை நோக்கியே மௌலானா மௌதூதி (ரஹ்) நடைபோட்டார்கள்.


  நாட்டின் நடப்பு விவகாரங்களை நுனுக்கமாக ஆராய்ந்த இமாமவர்கள் 'இனி வரும் நாட்களில் பிளவுபட்டுவிடும் ஒரு புறம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு உருவாகும். மறுபுறம் அவர்கள் சிறுபான்மையாக வாழும் நாடு உருவாகும்' என தெளிவாக கணித்துக் கூறி சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த வழிகாட்டளையும் இந்திய முஸ்லிம்களுக்கு வழங்கினார். அவ்வேளை, அவர் நான்கு அம்சத் திட்டமொன்றின் மூலம் சமுகத்திற்கு வழிகாட்டுகின்றார்.


1. இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையே நடந்துவரும் வகுப்புவாத மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். முஸ்லிம்கள் இஸ்லாத்திற்காகப் பாடுபடாமல் தமது சமுதாய நோக்கங்கள் கோரிக்கைகளுக்காகப் போராடுவது முந்தைய சூழலிலும் தவறானதே. இனிவரும் காலத்தில் இது தவறு மட்டுமல்ல, அழிவுக்கு இட்டுச் செல்லக்கூடியதுமாகும். இன மோதலின் அடிப்படையிலான அரசியலை முஸ்லிம்கள் கைகழுவி விட வேண்டும்.


2. முஸ்லிம்களிடையே பாரிய அளவில் இஸ்லாமிய கல்வியை பரலவலாக்கிவிட வேண்டும். இஸ்லாமிய அழைப்புப்பணி புரிய வேண்டும் என்ற உணர்வையும், ஆர்வத்தையும் அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். அவர்களது ஒழுக்க, ஆன்மீக, தார்மீக, சமுக, பண்பாட்டு வாழ்வு எந்தளவு சீர்திருத்தப்பட வேண்டுமெனில், அவர்கள் இஸ்லாத்தின் அழகிய மாதிரிகளாக மலர வேண்டும்.மற்றவர்களுக்கும் சரியான இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் அளவுக்கு அவர்களது செயலிலும், நடத்தையிலும் தூய இஸ்லாம் மிளிர வேண்டும்.


3. முஸ்லிம்களில் சிந்தனை ஆற்றல் படைத்தவர்களை கல்வி, இலக்கிய, இதழியல் சேவையில் ஈடுபடுத்த வேண்டும்.


4. இந்தியாவில் பல்வேறு மொழிகளில் இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும், அவசிய, முக்கிய நூல்கள் யாவும் மொழிபெயர்க்கப்பட வேண்டும். ஜமாஅத் ஊழியர்கள் அனைவரும் தத்தமது பிரதேச ஷேமொழிகளைக் கற்று புலமை பெற வேண்டும். அதன் மூலம் சத்தியச் செய்திகளைப் பரப்பவும், அழைப்புப்பணி புரியவும் ஏதுவாகும் என தமது அன்றைய இந்திய சமுகத்திற்கு வழிகாட்டினார்கள்.(17)


     உண்மையில் 65 வருடங்கள் சென்றபோதும் இந்த வழிகாட்டல்களில் அவர் முன்வைத்த கருத்துக்களை சுதந்திர இந்தியாவுடன் ஒப்பு நோக்கிப் பார்க்கின்றபோது மௌலானா அவர்களது கணிப்பும், வரக்கூடிய சூழல் மாற்றங்கள் குறித்த அவரது கூர்ந்த பார்வையும், வழிகாட்டலும் பெருமளவு சரியாக இருந்துள்ளது.


     இஸ்லாமிய சமுக சீர்திருத்தப்பணியில் மௌலான மௌதூதி (ரஹ்) அவர்கள் ஈடுபட்டு சமுகத்தை தூய இஸ்லாத்தின் பால் அழைப்பு விடுத்துக்கொண்டிருக்க, ஆஸாத் போன்றவர்கள் ' நீர் ஒரு சமுதாய அங்கத்தவர். நமது சமுதாயக் கொடியின் கீழ் நின்று சமுதாயத்திற்காகப் போராடுவது உமது கடமை. அதை விடுத்து நீர் தனியாக ஒருகூட்டத்தைத் திரட்டிக் கொண்டு மார்க்கம், நற்குணம், சத்தியக் கொள்கை போன்ற பழைய செய்திகளை சொல்லவாரம்பித்து விட்டீரே! காலமரியாமல் நீர் எழுப்புகின்ற குரல் சமுதாயத்தைச் சிதரச் செய்துவிடும். மேலும் நம் இனத்தின் ஆதாயத்தையும் கெடுத்து விடும்' (18) என குறிப்பிடுவதாக அவர் குறிப்பிடுகிறார்.


    விரைவில் நாடு பிரியப் போகும் நிலை குறித்து விளக்கிய மௌலானா அவர்கள், அவ்வாறு பிரிய நேர்ந்த வேளையில் அபுல்கலாம் ஆஸாத், அவர் போன்றவர்களது கருத்துக்கள் இரு நாட்டவரதும் சுயாட்சியின் போது எவ்வித பலனும் தர மாட்டாது என்பதை தெளிவாக விளக்கினார். அக்காலத்தில் இந்து, முஸ்லிம், மற்றும் ஏனைய சமுதாயத்தவரின் பிரச்சினைகள் மற்றும் சிறப்பம்சங்கள் முற்றிலும் மாறுபட்டமையும். தனது இனத்தின் போக்கும், தன் இயக்கங்கள், கட்சியமைப்புக்களை இதுவரை எந்த பாங்கில் நிறுத்தியிருந்தார்களோ அதுவும் பெரும்பாலும் பொருளற்றதாக பொருளற்றதாகப் போய்விடும் எனக்கண்டார். எனவே, புதிய வாழ்க்கையின் காலகட்டத்தின் போது அவர்கள் செயற்படக்கூடிய வழிமுறை என்ன என்பது பற்றியதாகவே அவரது சிந்தனை அமைந்திருந்தது. அந்தவகையில், அவரது சமுகத்திற்கான வழிகாட்டல்கள் நீண்ட, தூர நோக்கு சிந்தனையுடையதாக காணப்பட்டது.


    பிரியப்போவது உறுதியாகிவிட்ட இந்தியாவில் பிரிந்து செல்லும் முஸ்லிம் பெரும்பாண்மை சமுகத்தில் இஸ்லாமிய அரசை நடைமுறைப்படுத்தும் இலக்கு கொண்டு பயணித்தார்கள். காரணம், கல்வி, செய்தி ஊடகங்கள், பொருளாதாரம் முதல் எல்லா விடயங்களும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. எனவே, மனித வாழ்வில் எந்தவொரு மாற்றத்தினை ஏற்படத்த விரும்பினாலும் அது ஒரு அரசாங்;கத்தின் உதவியின் மூலமே வெற்றியடைய முடியும் என்று அவர் கருதியமையேயாகும்.


    முஸ்லிம் லீக் முஸ்லிம்களுக்கென ஒரு தாயகம் தேவை என்ற ரீதியிலேயே தனி நாட்டுக் கோரிக்கையை முன்வைத்தது. மௌலானா மௌதூதி இக்கருத்திலிருந்து வித்தியாசப்பட்டார். முஸ்லிம்களது தாயகம் என்பதைத் தாண்டி இஸ்லாமிய சட்டத்தையும், ஷரீஆவையும் நடைமுறைப்படுத்தும், இறையாதிக்கம் மேலோங்கிக் காணப்படும் ஒரு நாட்டின் உருவாக்கத்தினையே அவர் இலக்காகக் கொண்டிருந்தார். முஸ்லிம் லீகிற்கும் மௌலானாவிற்கும் இடையே காணப்பட்ட பேராட்ட வித்தியாசம் இதுவாகவே காணப்பட்டது.


     முஸ்லிம்களுக்கான இஸ்லாமியக் குடியரசு என்ற பெயரில் பாகிஸ்தான் உருவாக்கப்பட்ட போதும் பாகிஸ்தானில் குடியேறியவுடன் அல்குர்ஆன், சுன்னாவை யாப்பாகக் கொள்வதை விட்டு இந்தியாவில் 1935 இல் உருவாக்கப்பட்ட யாப்பின் அடிப்படையிலேயே அது பரிபாளிக்கப்பட்டது. முஸ்லிம்களுக்கென ஒரு நாட்டைப் பெற்று ஐரோப்பிய சிந்தனையினாலான ஒரு அரசியல் திட்டம் அமுலுக்கு வந்தது. ஆனால் மௌலானாவின் எதிர்பார்க்கை இஸ்லாமிய சிந்தனையின் அடியான சமுகமும், அரசும் அமைய வேண்டும் என்பதுவே. எனவே, பாகிஸ்தான் உருவாக்கப்ட்டதக் பின்பு முதல் பணியாக யாப்பு சீர்திருத்தத்திற்கான போராட்டத்தினை நோக்கி மக்களை வழிநடத்தினார்.


      முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் தேவைதானா? என்ற வினாவிற்கு கட்டாயம் தேவைதான் என்று கருதிய இமாமவர்கள், அங்கு யாப்பு சீர்திருத்தம் அமையும் வரையில் அங்கு நடைபெற்ற எந்த வொரு தேர்தலிலும் கலந்து கொள்ள ஜமாஅதே இஸ்லாமியை அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


    அவரது அந்தப் போராட்டத்தின் விளைவாகவே இன்று வரை பாகிஸ்தானில் காணப்படும் யாப்பு மௌலானா அவர்கள் அறிமுகப்படுத்திய அல்குர்ஆன், சுன்னா அடிப்படையிலான யாப்பு முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும். எனவே, பாகிஸ்தானிய யாப்பு இஸ்லாமிய மயமாவதற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டது ஜமாஅதே இஸ்லாமியே என்பது குறிப்பிடத் தக்கதாகும். முடிவுரை


   மௌலானா செய்யித் அபுல் அஃலா மௌதூதி  (ரஹ்) இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய இஸ்லாமிய அறிஞர்களுள் சிறப்பிடம் பெறும் ஒருவர். அவரது அபாரமான ஆற்றலும், இஸ்லாத்திற்கான அவரது பாரிய பங்களிப்புக்களையும் கருத்திற் கொண்டு உலக அளவில் கலாநிதி யூசுப் அல்கர்ழாவி போன்ற மிகப் பெரும் அறிஞர்கள் கூட அவரை இமாம், மஜத்தித் என அழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தவிர இஸ்லாமிய பணிகளுக்கான மன்னர் பைஸல் உலகப்பரிசும் அன்னாருக்குக் கிடைத்தது. இருபதாம் நூற்றாண்டு இந்தியாவில் மேற்கத்திய இலட்சியவாதங்களும், பிற உலோகாயுதக் கொள்கைகளும்  இஸ்லாத்திற்கு பெரும் சவாலாக விளங்கிய சந்தர்ப்பத்தில் அவற்றைத் துணிவுடன் எதிர் கொண்டு வெற்றிகரமாக முறியடித்த பெருமை இமாமவர்களைச் சாரும்.


      இந்தியா காணப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் அதன் முஸ்லிமகளை சரியான வழிகாட்டலின் அடிப்படையில் வழநடத்த வேண்டிய அவசியத் தேவை உணரப்பட்டது. தலைவர்கள் பலர் உருவாகியிருந்தாலும் தூர நோக்குடன் சமுகத்தை அனுகும் வகையிலான தலைவர்களைக் காண்பது மிக அரிதாகவே காணப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் தூர நோக்குடன் சமுகத்தை அனுகி நிலைதடுமாறிய மக்களுக்கு வழிகாட்டிய பெரும் தலைவராக மௌலானாவைக் காண முடிகிறது.


     ஒருபுறம் இந்திய தேசிய காங்கிரஸ் என்றும், மறுபுறம் முஸ்லிம் லீக் என்றும், மறறைய புறத்தில் ஜம்இய்யதுல் உலமாஉ ஹிந்த், கிலாபத் இயக்கம் இவ்வாறு ஒவ்வொன்றும் தேசியவாதத்தின் பாலும், இனவாதத்தின் பாலும் ஒருபுறமும், முஸ்லிம் - ஹிந்து கலாசாரக் கலவை என்பதால் அவர்களை பிரித்து நோக்க முடியாதென முஸ்லிம்களது கலாசாரத் தனித்துவத்தைப் பாழாக்கும் விஷக் கருத்துக்களை மற்றெரு புறமும் கோஷமெலுப்பும் வேளையில், இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் விரோதிகளாக காணப்பட்டோரை இலகுவாக அடையாளம் கண்டு, அவர்களிலிருந்து பிரிந்து சமுகத்திற்கு அவர்களை அடையாளம் காட்டி, உண்மையான இஸ்லாத்தின் தேவையை இந்திய முஸ்லிம்களுக்கு உணர்த்தும் பணியை செய்தவர் என்றவகையில் மௌலானா அவ்கள் மெச்சத் தக்கவர்கள்.


     மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்கள் சமுகத்தின் குறைகளை அடையாளங் கண்டு வெளிப்படுத்திய தூரநோக்குடைய கருத்துக்கள் எதுவும் இன்றளவிலும் போற்றப்படுவதற்குக் காரணம், அவை அரை நூறற்றாண்டைக் கடந்த வேளையிலும் இன்றும், என்றும் பிழைக்காத அறிவிப்புக்களாக காணப்படுகின்றமையேயாகும்.


     அவர் அபுல்கலாம் ஆஸாதிற்கு முரண்பட்ட வித்தியாசமான கருத்துக்கள் கூட இன்றளவில் உண்மைப்படுத்தப்பட்டுள்ளது நிணைவு கூறத்தக்தாகும். உதாரணமாக, அவர் ஜம்இய்யது உலாமாஉ ஹிந்துடன் முரண்பட்ட நோக்கம் அது இந்திய காங்கிரசுக்கு கண்மூடித்தனமாக ஆதரவு வழங்கியதேயாகும். மௌலானா அவர்கள், காங்கிரஸ் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் விசுவாசமாக நடந்து கொள்வதாகவும், கிலாபத்திற்கு ஆதரவு வழங்குவதாகவும் முஸ்லிம்களிடத்தே நாடகமாடி முஸ்லிம்கள் மூலம் தமது இனத்துக்கு இலாபமடையவும், சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களை பங்குகொள்ளச் செய்யவும் முயற்சி செய்வதை தெளிவாகப் புரிந்து கொண்டமையே அதில் முரண்பட்டு பிரிந்து செல்ல அடிப்படைக் காரணமாகும்.


     இக்கருத்தை பின்னால் அபுல்கலாம் ஆஸாதே ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தான் கல்வியமைச்சராக இருந்த வேளையில் அவர் எழுதி தான் மரணித்து 30 வருடங்களின் பின்பு தான் வெளியிட வேண்டும். அதுவரை புதைக்கப்பட வேண்டும் என்று வஸிய்யத் எழுதிச் சென்ற அபுல்கலாம் ஆஸாதின் சுயசரிதையான ஐனெயை றுiளெ குசநநனழஅ  எனும் நூலின் 30 ஆண்டுகள் மறைத்து வைக்கப்பட்ட 30 பக்கங்களில்  காங்கிரஸின் சுய ரூபத்தினையும், துரோகத்தினையும் விலாவாரியாக கூறியிருக்கிறார்.

  

     எனவே, மௌலானா மௌதூதி(ரஹ்) அவர்கள் அபல்கலாம் ஆஸாதுக்கு மாற்றமான பல சிந்தனைகளை இந்திய முஸ்லிம் சமுகத்தினை வழிநடத்துவதி கொண்டிருந்த போதிலும் அவை மிகச் சரியானதும், தூர நோக்கு கொண்டதாகவும் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


அடிக்குறிப்புகள்


1. Syeda Saiyidain Hameed, India's Mawlana Abul kalam Azad, Indian  Council   for
     Cultural Relations, Vikas Publishing House Pvt. Ltd. P. 30
2. Syeda Saiyidain Hameed, India's Mawlana Abul kalam Azad, Indian Council for
     Cultural Relations, Vikas Publishing House Pvt. Ltd. P. 32
3. Syeda Saiyidain Hameed, India's Mawlana Abul kalam Azad, Indian Council for
     Cultural Relations, Vikas Publishing House Pvt. Ltd. P. 33
4. Syeda Saiyidain Hameed, India's Mawlana Abul kalam Azad, Indian Council for
     Cultural Relations, Vikas Publishing House Pvt. Ltd. P. 41
5. Syeda Saiyidain Hameed, India's Mawlana Abul kalam Azad, Indian Council for
     Cultural Relations, Vikas Publishing House Pvt. Ltd. P. 43
6. Syeda Saiyidain Hameed, India's Mawlana Abul kalam Azad, Indian Council for
     Cultural Relations, Vikas Publishing House Pvt. Ltd. P. 46
7. Syeda Saiyidain Hameed, India's Mawlana Abul kalam Azad, Indian Council for
     Cultural Relations, Vikas Publishing House Pvt. Ltd. P. 159
8. Syeda Saiyidain Hameed, India's Mawlana Abul kalam Azad, Indian Council for
     Cultural Relations, Vikas Publishing House Pvt. Ltd. P. 162
9. Syeda Saiyidain Hameed, India's Mawlana Abul kalam Azad, Indian Council for
     Cultural Relations, Vikas Publishing House Pvt. Ltd. P. 262
10. Syeda Saiyidain Hameed, India's Mawlana Abul kalam Azad, Indian Council for
     Cultural Relations, Vikas Publishing House Pvt. Ltd. P. 271
11. Syeda Saiyidain Hameed, India's Mawlana Abul kalam Azad, Indian Council for
     Cultural Relations, Vikas Publishing House Pvt. Ltd. P. 271
12. Syeda Saiyidain Hameed, India's Mawlana Abul kalam Azad, Indian Council for
     Cultural Relations, Vikas Publishing House Pvt. Ltd. P. 271


13. தாழை மதியன், சிறைப்பறவை மௌலானா மௌதூதி ,பக்கம் - 23

14. மௌலானா மௌதூதி, நம்பிக்கையும் கட்டுப்பாடும், பக்கம் -03

15. மௌலானா மௌதூதி, நம்பிக்கையும் கட்டுப்பாடும், பக்கம் -04

16. மௌலானா கலீல் ஹாமிதி, மௌலானா மௌதூதி(றஹ்) நேற்று இன்று நாளை,

   சமரசம், பக்கம் 13-14

17. மௌலானா மௌதூதி, சென்னைப் பேருரை, பக்கம் -ஒ

18. மௌலானா மௌதூதி, சென்னைப் பேருரை, பக்கம் -4



உசாத்துணைகள்



01. Syeda Saiyidain Hameed, (1990) India's Mawlana Abul kalam Azad, Selected Speaches
       and Writings, Centenary Volume ii, Indian Council for Cultural Relations,
       Vikas Publishing House Pvt. Ltd., New Delhi.

02.  Mawlana Abul Kalam Azad ,(1958), India Wins Freedom, Complete  Version , 
         (1988), First Published, Orient Longman Limited, Madras.


03. மெதூதி அபுல் அஃலா, (2008), இஸ்லாமிய மறுமலர்ச்சி, இஸ்லாமிய

   நிருவனம் ட்ரஸ்ட், சென்னை.


04. அஷ்ஷெய்க், றவூப் ஸெய்ன்,(2010), இஸ்லாமிய எழுச்சிப்

   போராளிகள், இலங்கை, சமுக விஞ்ஞானங்களுக்கான இப்னு

   கல்தூன் ஆய்வகம், திஹாரிய.


05. ஹூமைரா மௌதூதி, (2010), வேர்களை வாசிக்கும் விழுதுகள், இரண்டாம்

   பதிப்பு, அல்ஹஸனாத் வெளியீட்டகம், கொழும்பு-09.


06. தாழை மதியன், (2008), சிறைப்பறவை-மௌலானா மௌதூதி, முதற்பதிப்பு,

   தாழையான் பதிப்பகம், கென்னை.


07. மௌலானா மௌதூதி, (2003), சென்னைப் பேருரை, இரணடாம் பதிப்பு,

   இலங்கை ஜமாஅதே இஸ்லாமி, கொழும்பு.


08. அப்துர் ரஹ்மான் அப்த், (1985), தூக்குமேடை பார்த்து வந்த மௌலானா

   மௌதூதி (ரஹ்), முதற்பதிப்பு, இலங்கை ஜமாஅதே இஸ்லாமி, கொழும்பு.


09.  மெதூதி, அபுல் அஃலா,(1999), நம்பிக்கையும் கட்டுப்பாடும்,

    இரண்டாம் பதிப்பு, இலங்கை ஜமாஅதே இஸ்லாமி, கொழும்பு.


10.  செய்யித் அபுல் அஃலா மௌதூதி, (1974), அறப்போர், முதற்பதிப்பு,

    இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், சென்னை.


11.  செய்யித் அபுல் அஃலா மௌதூதி,(1994) ஜிஹாத் ஏன், நான்காம் பதிப்பு,

    இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், சென்னை.


12.  மௌலானா கலீல் ஹாமிதி, (2004), மௌலானா மௌதூதி, சமரசம்,

     16-30, செப்டம்பர்,2004.


13.  பேராசிரியர் குர்ஷித் அஹ்மத், (2010), நவீன இஸ்லாமிய எழுச்சியின்

    தந்தை மௌலானா மௌதூதி (ரஹ்), அல்ஹஸனாத், மலர் 36,  இதழ்-3,4.

    இலங்கை ஜமாஅதே இஸ்லாமி, கொழும்பு.


14.  அகார் முஹம்மத், யு.ஊ.,(2007ஃ2008), மௌலானா மௌதூதிக்கு

    எதிரான குற்றச்சாட்டுகள்-ஒரு விமர்சன நோக்கு, இஸ்லாமிய சிந்தனை,

    மலா 29-30, இதழ் 4-1, நளீமியா இஸ்லாமிய வெளியீட்டுப் பணியகம்,

    பேருவலை.

 

   

1 comment:

  1. Both had different perceptions and views on minority Muslims, Maulana Maududis ideas were later on based on narrow nationalism, but Maulana Azads was based on Islam based secularism, Ideas and interpretations keep changing about 70 , to 100 years later we find that creation of Pakistan was a failure as Muslims did not achieve what they expected from an Islam based nation and India in a way a success as a secular nation but at the same time not interfering in the religious principles of religious minorities

    ReplyDelete