இந்தியாவின் கல்வி, கலை வளர்ச்சிக்கு முஸ்லிம் மன்னர்கள் ஆற்றிய பங்களிப்பு
முஸ்லிம்கள் உலகிற்கு வழங்கிய அருற்பாக்கியங்கள் ஏராளம். இஸ்லாமிய நாகரிகத்தின் எழுச்சியின் விளைவாக உலகின் பெரும்பகுதியை ஆண்ட முஸ்;லிம்கள் தமது பிரதேசங்களில் கண்ட முன்னேற்றங்களை, நாகரிக சின்னங்களை அவர்கள் ஆட்சி கொண்ட பகுதிகளுக்கும் கடத்தினர்.
அறியாமை இருளில் மூழ்கிக்கிடந்த மக்களுக்கு அறிவொளி பாய்ச்சி அவர்களிடமிருந்த மூட நம்பிக்கைகளை ஒழித்து நாகரிகமற்றிருந்த மக்களுக்கு நாகரிகத்தினைக் கற்றுக் கொடுத்தனர். இந்தவகையில் உலகு முஸ்லிம்களுக்கு கடன்பட்டுள்ளது.
எனினும், முஸ்லிம்கள் உலகிற்கு வழங்கிய வெகுமதிகள் இன்று மறக்கப்பட்டு, அவர்கள் ஆட்சிபுரிந்த பகுதிகளில் மேற்கொண்ட முன்னேற்றங்கள் திரிபு படுத்தப்பட்டு நாகரிகத்தையும், நவீனத்துவத்தையும் உலகிற்கு வழங்கியோர் மேற்கத்தையர் என்றும், அவர்களிடம் நாகரிகம் கற்க வேண்டுமென்றும் எம் சகோதரர்களே பேசும் நிலை கண்டு மனம் வெதும்ப வேண்டியுள்ளது.
அந்தவகையில், உலகின் எல்லா பகுதிகளிலும் போலவே, இந்திய மண்ணிலும் முஸ்லிம் மன்னர்கள் மேற்கொண்ட பங்களிப்புகள் ஏராளம். கல்வி, கலை, கலாசார, பண்பாட்டு, மொழி ரீதியாக அவர்கள் மேற்கொண்ட பங்களிப்புக்களை இந்திய மக்கள் என்றும் மறந்துவிட முடியாது. ஆயினும் நடுநிலை தவறிய, காழ்ப்புணர்வு கொண்ட சில வரலாற்றாசிரியர்களால் அவர்களது வரலாறுகள் திரிபுக்குற்படுத்தப்பட்டு உண்மைக்கு புறம்பான தகவல்கள் வரலாற்றுப் பக்கங்களில் பதிந்து வைத்துள்ளனர்.
இந்நிலையில், இப்பங்களிப்புக்களில் முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் கல்வி, கலை வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்புகள் பற்றி இன்ஷா அல்லாஹ், இந்த ஆய்வில் சுருக்கமாக ஆராயப்படுகிறது.
அறிமுகம் :
இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி முஹம்மத் பின் காசிம் தலைமையிலான படையெடுப்பின் மூலம் கி.பி. 711 இல் முதன் முதல் இடம்பெற்றாலும், அதற்கு முன்னதாகவே வர்த்தகர்கள் மூலமும், சூபி ஞானிகள் மூலமும், உமையா வம்ச ஆட்சியில் அஹ்லுல் பைத்துகளுக்கெதிரான நடவடிக்கைகளினால் இந்தியாவில் வந்து குடியேறிய முஸ்லிம்கள் மூலமும் என இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாம் பரவி முஸ்லிம்கள் கணிசமான தொகையினர் வாழ்ந்து வந்தனர்.
இஸ்லாம் இந்தியாவுக்கு வரும்போது இந்திய மக்களிடையே பல்வேறு மூட நம்பிக்கைகளும், பழக்கவழக்கங்களும் காணப்பட்டன. கலாசார ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் இந்திய மக்கள் பின்தங்கிய நிலையில் காணப்பட்டனர். கல்வி ரீதியாக பண்டைய இந்தியா சற்று முன்னேற்றமடைந்து காணப்பட்டிருந்தாலும் முஸ்லிம்களின் வறுகையின் போது அவர்களது கல்வி நிலை பின்தங்கியிருந்தது.
அன்றைய இந்தியா பெரும்பாண்மையாக ஹிந்துக்களைக் கொண்டிருந்த அதேவேளை, பௌத்தர்கள், சமனர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், போன்றோரும் சிறிதளவில் வாழ்ந்து வந்தனர். இத்தகைய சமயப்பிரிவினரிடையே காணப்பட்ட பல்வேறு சமூக பிரிவுகள், சிலர் சிலரை அடக்கி, ஒடுக்கி வாழும் சூழ்நிலை காணப்பட்டது.
ஹிந்துக்களில் பிராமணர், வைசியர், சத்திரியர், சூத்திரர் என பாகப்பிரிவினைகளை வகுத்துக் கொண்டு மேல்சாதி கீழ்சாதியினரை அடக்கி ஒடுக்கி தீண்டத்தகாதவர்களாக கருதி வந்தனர். மேல்சாதிகளாக விளங்கிய பிராமணர், சூத்திரரை மிக்க கேவலமாக நடத்தினர். தமது வணக்கஸ்தளங்களுக்குக் கூட அவர்களை அனுமதிக்கவி;ல்லை. இந்து மத புரோகிதர்களின் கொடுமை மிக மோசமான நிலையில் காணப்பட்டது. ஆதி திராவிட மக்களை பார்த்தாலே பாவம் என்றும், அவர்கள் உயர்சாதிக்காரர்கள் இருக்கும் தெருக்களில் நடமாடக்கூடாதென்றும், அப்படி நுழைய நேர்ந்தால் அவர்கள் தங்களது வருகையை மற்றவர்களுக்கு அறிவிக்க தங்கள் கழுத்தில் ஒரு பறையைக் கட்டிக்கொண்டு அதைத் தட்டி தங்கள் நடமாட்டத்தை அறிவித்துக் கொண்டு வரவேண்டும் என்றும், தாழ்த்தப்ட்ட பெண்கள் மேலாடைகள் அணிந்துகொள்ளக் கூடாது என்றும் கூறியிருந்தனர். அததோடு, உயர்சாதிப் பிராமணர்களுக்கு ஆதி திராவிடப் பெண்கள் சேவகம் செய்ய செல்வது கடனென்றும் கருதியிருந்தனர். இத்தகைய மிகக் கொடூர அடக்கு முறைகளை ஹிந்துக்கள் தமது கீழ் வர்க்கத்தினருக்கு மேற்கொண்டு வந்தனர்.
அக்கால இந்தியாவில் மூட நம்பிக்கைகள் மலிந்து காணப்பட்டது. சோதிடம் பார்த்தல், சகுனம் பார்த்தல், சூனியம் செய்தல் போன்ற பழக்கவழக்கங்கள் மிகைத்துக் காணப்பட்டதோடு, கொலை, கொள்ளை, வழிப்பறி, குடி, சூதாட்டம், விபச்சாரம் போன்ற சமூகச் சீர்கேடுகளும் மலிந்து காணப்பட்டன. அத்தோடு, இறந்த மனிதருடன் சேர்த்து இறந்து போன மனிதரின் மனைவி அல்லது நெருக்கமானவரை உடன் கட்டையேற்றும் கொடூர நிகழ்வும் அன்றைய இந்தியாவின் அன்றாட நிகழ்வாக இருந்தது.
இத்தகைய சமூகச் சீர்கேடுகளுடன் சேர்த்து அன்றை ஜாஹிலிய்யாக்கால அரபிகளிடையே காணப்பட்டதைப் போன்று வறுமைக்குப் பயந்து குழந்தைகளை உயிருடன் புதைக்கும் பாதகச்செயலையும் இந்தியர்கள் விட்டுவைத்திருக்கவில்லை.
இந்நிலையில், ஆரம்பத்தில் குறிப்பிட்டதைப் போன்று, முஸ்லிம்களுக்குச் சொந்தமான கப்பலைக் கொள்ளையிட்ட இந்திய கடற்கொள்ளையினர் அக்கப்பலில் இருந்த முஸ்லிம்களை சிறைப்பிடித்ததோடு, அவர்களது பொருட்களையும் கொள்ளையிட்டனர். இவர்களை மீட்கும் நோக்கிலேயே ஆரம்பமாக இஸ்லாமிய படையெடுப்பு இடம்பெற்றது.
பின்பு இஸ்லாத்தின் வருகையைத் தொடர்ந்து அவர்களது நல்ல பண்பாடுகள், சகோதரத்துவம், சமத்துவம் போன்ற நற்குனங்களைக் கண்டு ஆகர்ஷிக்கப்பட்டு பலரும் இஸ்லாத்தைத் தழுவினர். முஸ்லிம்கள் இந்தியாவுக்கு வருகை தந்ததும் மேற்கத்தையர்களது படையெடுப்பைப் போன்று சூரையாடவில்லை, அநியாயமான மக்களை கொலை செய்யவில்லை, அவர்களது மதவழிபாட்டுத் தலங்களை சிதைக்கவில்லை. மதமாற்றத்துக்கு அவர்களை நிர்ப்பந்திக்கவுமில்லை.
முஹம்மத் பின் காசிம் இந்தியப் பகுதிகளை கைப்பற்றியபோது, ' இஸ்லாம் மார்க்கத்தில் சேர்ந்து கொள்ள விரும்புவோர் அதில் சேர்ந்து கொள்ளலாம். தங்கள் மதங்களைப் பின்பற்றுவோருக்கு முழுச்சுதந்திரமும் உண்டு. உங்கள் வணக்கஸ்தலங்கள் பாதுகாக்கப்படும். உங்களுடைய நிலங்கள் பரிமுதல் செய்யப்பட மாட்டாது. உங்களுடைய உயிருக்கும், செல்வங்களுக்கும் நஷ்டம் ஏற்படுத்தப்பட மாட்டாது'.என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
எங்கெல்லாம் முஸ்லிம்கள் படையெடுத்துச் சென்றார்களோ அங்கெல்லாம் நீதி நிலைநாட்டப்பட்டது. மக்கள் அநீதிகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர். அதற்கு இந்திய மன்னும் விதிவிலக்கல்ல. இந்தியாவிலும் கூட இஸ்லாம் வந்து இந்திய மக்களை ஆரம்பத்தில் கூறியது போன்ற சமுகக் கொடுமைகளில், மூட நம்பிக்கைகளைகளிலிருந்து பாதுகாத்தது.
அதுமட்டுமல்லாது, நாகரிகத்தின் உச்சத்தைத் தொட்டிருந்த முஸ்லிம்கள் தமது பிரதேசங்களில் காணப்பட்ட கல்வி, கலை, கலாசார, பண்பாட்டுப் பாரம்பரயங்களின் சிறப்புக்களை இந்திய மண்ணிலும் விதைத்தனர். இன்றும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாதவறான பல நாகரிகச் சின்னங்;களை இந்தியாவில் விட்டுச் சென்றுள்ளனர்.
அந்தவகையில், இந்திய முஸ்லிம் மன்னர்களால் இந்தியாவிற்கு மேற்கொள்ளப்பட்ட கல்வி மற்றும் கலை வளர்ச்சிக்கான பங்களிப்புக்களை இந்த ஆய்வில் நோக்கவிருக்கிறோம் 'இன்ஷா அல்லாஹ்'.
இந்திய முஸ்லிம் மன்னர்களது காலத்தில் கல்வி வளர்ச்சி
இஸ்லாம் இந்தியாவில் நிலைகொள்ளவாரம்பித்த காலப்பகுதியானது முஸ்விம்கள் அறிவியல் ரீதியாக உலகை வழிநடத்தும் காலப்பகுதியாக காணப்பட்டது. பைத்ததுல் ஹிக்மா நிறுவனம் மூலம் உலகம் வியக்கும் கண்டுபிடிப்புக்களில் முஸ்லிம்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலப்பகுதி.
இஸ்லாம் கல்விக்கும், ஆராய்ச்சிக்கும் வழங்கிய முக்கியத்துவத்தின் காரணமாக முஸ்லிம் பிரதேசங்களில் ஏற்பட்ட கல்வி மலர்ச்சியானது இஸ்லாமிய ஆட்சி இடம்பெற்ற எல்லா பிரதேசங்களையும் பாதிப்பை ஏற்படுத்தாமல் இல்லை. அந்தவகையில், இந்த அறிவுத்துறையானது இந்தியாவிலும் துரித வளர்ச்சி காணவாரம்பித்தது. இதற்காக முஸ்லிம் மன்னர்களது பங்களிப்பானது அளப்பரியதாகும்.
'இந்திய மன்னர்களது காலத்தில் தொடர்ச்சியான போர், அடிக்கடி மாறிய ஆட்சி, உள்நாட்டு, வெளிநாட்டுக் கலவரங்கள் என பல காரணங்களினாலும் கல்வித்துறை என்று தனித்துறை இயங்கவில்லை என்றாலும் கல்விக்கான அக்கறை சிறப்பானது' என பேராசிரியர். ளு.ஆ.ஜாபர் குறிப்பிடுகிறார்.
அன்றைய இந்தியாவின் முஸ்லிம் மன்னராட்சியில் கல்விக் கூடங்களில் பாரசீக மொழியே போதனா மொழியான விளங்கியது. இம்மொழி மூலமே பல்வேறு பாடங்களும் கற்பிக்கப்ட்டன. பாரசீக மொழியே அட்சி மொழியாகவும் காணப்பட்டதால் ஹிந்துக்களும் இம்மொழியை ஆர்வத்துடன் கற்கலாயினர். இதன் பயனாக அவர்களுக்கு உயர் அரசப்பணிகளும் கிடைத்தன. இந்துக்களில் சிலர் சமஸ்கிருத மொழி நூல்களை பாரசீக மொழிக்கு பெயர்க்கக்கூடியளவு பாரசீக மொழியாற்றல் பெற்றிருந்தனர். மேலும் சிலர் பாரசீக மொழியில் புதிய நூல்களை இயற்றுவதற்கும் திறமைபெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப காலங்களில் வடமேற்குப் பகுதிகளில் முஸ்லிம் அடிப்படைக் கல்வி நிலையங்களாக மத்ரஸாக்கள் காணப்பட்டன. ஆரம்ப காலப்பகுதிகளில் சிந்து, லாகூர், டெல்லி முல்தான் போன்ற இடங்களில் புகழ்மிக்க மத்ரஸாக்கள் காணப்பட்டன. இவை அக்காலப் பகுதியில் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியது. இஸ்லாமிய மன்னராட்சியின் ஆரம்ப காலகட்டங்களிலேயே கல்வி நிலையங்கள் இந்திய இராஜ்யத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக காணப்பட்டன.
அடிமை சுல்தான்களின் சிறப்பான ஆட்சியாளராக கருதப்படும் சுல்தான் ஷம்சுத்தீன் அல்துமிஷ் காலத்தில் கல்விக்கு கூடிய முக்கியத்துவம் வழங்கப்பட்டது. தம் நாட்டு மக்கள் கல்வி, கலை, பன்மொழிப் புலமை, கைவினைத் தொழில்நுட்பம் என்பனவற்றில் மேம்பட்டிருக்க வேண்டும் எனக் கருதினார். எனவே, லாகூர், பண்டா, பதாயோன், அயோத்தி, லக்னோ முதலிய இடங்களில் அரசுக் கல்லூரிகளும், தனியார் கல்லூரிகளும் அமையக் காரணமாய் இருந்தார். டெல்லியில் தனது சொந்த செலவில் ஒரு பெரிய கல்லூரியை நிறுவினார். அங்கு மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்பட்டது. அனைத்து சமய மாணவர்களும் இக்கல்வி நிலையங்கள் மூலம் பெரிதும் பயன் பெற்றனர்.
இவரது ஆட்சியின்போது ஜெங்கிஸ்கானின் கொடுங்கோன்மை காரணமாக ஈராக், ஈரான், குராசான், கோர், காரிஸிம் போன்ற நாடுகளிலிருந்து பன்மொழிப் புலவர்களும், பல்துறை சார்ந்த அறிஞர்களும், சமயப் போதகர்களும் தங்களது நாடுகளைத் துறந்து தமது பாதுகாப்பு கருதி இந்தியாவை நோக்கி படையெடுத்தனர். இல்துமிஷ் அவர்களை வரவேற்று தகுதிக்கேற்ற பதிவிகளையும் வழங்கி அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கியிருந்தார். இதனால் டெல்லி நகரில் வெளிநாட்டவர்களது புதிய குடியேற்றங்களும், நகர்களும் உருவாயின. பல்வேறு நாட்டு முஸ்லிம் அறிஞர்களும் டெல்லியில் கூடியதால் அங்கு கல்வி பெரு வளர்ச்சி கண்டது. இன்றைய இந்தியா நாகரிகமும், பண்பாடும், கலாசாரமும், பன்முகத்தன்மையுடையதாகவும் ஒரு புதிய கலப்புக் கலாசாரத்தின் வடிவமாகவும் தோற்றமளிக்கிறது என்றால் அதற்குக் காரணம் சுல்தான் அல்துமிஷன் கலை ஆர்வமும், கல்வித் தேட்டமும், அறிவுத் தாகமும் தான்.
இந்தியாவை ஆண்ட கில்ஜி மன்னர்களுள் சுல்தான் ஜலாலுத்தீன் கில்ஜி கல்வித்துறையில் குறிப்பிடத்தக்களவு சேவை புறிந்தார். இவர் கல்வியியலாளர்களை பெரிதும் போற்றினார். இவரது காலத்தில் புகழ்மிக்க பாரசீக, உருது கவிஞர் அமீர் குஸ்ரு, காஜா ஹஸன் தாஜூத்தீன் இராகி, முவைத்தஜாஜர்மி, முவைத் தீவானா, அமீர் அர்ஸலான் கலாமி போன்ற என்னற்ற பல்துறை சார் அறிஞர்கள் இவரது தர்பாரிலிருந்து கல்வி வளர்ச்சிக்கு துணையாக பாடுபட்டனர்.
கி.பி.1292-1316 வரை ஆட்சிபுரிந்த கில்ஜி சுல்தான் அலாவுத்தீன் கில்ஜி காலத்திலும் இந்திய கல்வித்துறைக்கு பாரிய சேவையாற்றப்பட்டது. அக்காலத்தில் மத்ரஸாவில் கல்வி கற்பிக்கும் 46 ஆலிம்கள் காணப்பட்டனர். இது தவிர எண்ணிலடங்காத பல்துறை சார் அறிஞர்கள் இவரது அரசவையை அலங்கரித்தனர்.
பொதுவாக, அறிவு வளர்ச்சி மொழி வளர்ச்சியில் தங்கியுள்ளது என்ற வகையல் பல திக்குகளிலிருந்து வந்த இராணுவ வீரர்கள் ஒருவருடன் மற்றவர் தொடாப்பு கொள்ள சமஸ்கிருதம், ஹிந்து, அரபி, பாரசீக மொழிகளை ஒன்றிணைத்த கலப்பு மொழியாக அறிமுகமாகிய உர்து மொழி கில்ஜிக்களின் தூண்டுதலினால் அரச மொழியாக பிரகடனப்படுத்தப்பட்;டமையால் பொரு வளர்சி கண்டது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்து போனபோது அங்கு ஆட்சி மொழியாக உருது மொழி அறிவிக்கப்பட்டது. எனவே, புதிய மொழியாக உருதை இந்தியாவில் அறிமுகப்படுத்தியோர் முஸ்லிம்களே.
துக்லக் மன்னர்களுள் சுல்தான் பைரோஜ்ஷா துக்லக் இந்திய கல்வி களர்ச்சிக்கு பங்காற்றியவர்களுள் முக்கியமானவர். இவர் தனது ஆட்சிக்காலத்தில் நாட்டின் பல பாகங்களிலும் பல கல்லூரிகளை நிறுவினார். இவர் பைரோஜாபாத்தில் உருவாக்கிய கல்லூரி மிகவும் பிரபல்யம் மிக்கதாக விளங்கியது. பல பாகங்களிலிருந்தும் பல இனத்தவரும் இங்கு வந்து கல்வி பயின்றனர். இவை தவிர ஆங்காங்கே 40 கல்லூரிகளை இவர் உருவாக்கியிருந்தார். அவற்றில் மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்பட்டது.
இவர் தனது இறந்து போன மகன் பதஹ்கான் நினைவாகவும் இவர் அவரது சமாதிக்கருகில் ஒரு கல்லூரியை நிறுவினார். இங்கு நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் பணியாற்றினர். ஆயிரக்கணக்கில் மாணவர்களுக்கு இலவச உணவும் உபகாரச் சம்பளமும் வழங்கப்பட்டன.
இவரது காலத்தில் கல்லூரிகளுக்கு மானியங்கள் வழங்கப்பட்டன. நூல்கள் எழுதியோருக்கு சுல்தன் ஆதரவு வழங்கினார். பல சமஸ்கிருத நூல்கள் பாரசிக மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்தன.
பைரோஜ்ஷா துக்லக் நாடுமுழுவதும் மத்ரஸாக்களை நிறுவி கல்வியில் ஆர்வமுள்ள ஏழை மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உதவித்தொகை வழங்கி கல்வியைத் தொடர வழி செய்தார். சிறைக்கைதிகளாக இருந்தவர்களுக்குக் கூட கல்வியும், கைத்தொழிலும் இவரது காலத்தில் கற்பிக்கப்பட்டன. சிறைக்கூடங்கள் சீர்திருத்தக்கூடங்களாக இவரது காலத்தில் மாறின.
சிறைக்கைதிகளுக்கு தொழில்கல்வி வழங்கி நாட்டிலுள்ள சிறந்த தொழிட்சாலைகளில் பயிற்சி தந்து சிறைவாழ்வுக்குப் பின்பு சுய சார்பு பெற்ற கைவினைஞர்களாக வாழ வழி ஏற்படுத்தும் வகையிலான தொழில் கல்வியைப் போதித்தார்.
இவரது காலத்தில் மத்ரஸாக்களில் தப்ஸீர், ஹதீஸ், பிக்ஹூ தவிர இலக்கணம், இலக்கியம், சமய தத்துவங்கள், தர்க்கவியல் போன்ற பாடங்களும் கற்பிக்கப்பட்டன. பாடங்கள் பாரசீக மொழியில் கற்பிக்கப்பட்டதோடு, முஸ்லிம்களுக்கு அரபு மொழி கட்டாயப் பாடமாக கற்பிக்கப்பட்டது.
கி.பி. 1489 - 1517 வரையான காலப்பகுதியில் ஆட்சி புரிந்த லோடி மன்னரான சிக்கந்தர் லோடியும் கல்வித்துறையில் கூடிய அக்கறை கொண்டிருந்தார். தமது அரசவையில் தர்க்க மன்றமொன்றை ஏற்பாடு செய்திருந்தார் .பெரும் அறிஞர்கள் அதில் கலந்து விவாதித்தனர். இவரது காலத்தில் பல சிறந்த அறிஞர்கள் வாழ்ந்தனர். அவர்கள் இஸ்லாமிய கலைகளையும், ஏனைய கலைகளையும் மாணவர்களுக்கு புகட்டினர்.
இவர் திப் சிகந்தரி என்ற பெயரில் 'அர்கம் மஹாவைதிக்' எனும் புகழ்மிக்க சமர்கிருத மருத்துவ நூலை பாரசிக மொழிக்கு பெயர்த்து வெளியிட்டார். இவர் காலத்தில் தலை நகரில் அரேபியா, ஈரான், புஹாரா போன்ற வெளிநாடுகளிலிருந்து அறிஞர்கள் வருகைதந்து இந்திய கல்வி வளர்ச்சியில் பெரும் பங்காற்றினர்.
கி.பி. 970-1036 காலப்பகுதியில் வாழ்ந்த அபூ ரைஹான் அல்பைரூனி என்பவர் இந்தியாவிற்கு வருகை தந்து நீண்டகாலம் தங்கி மக்களது வாழ்க்கை நிலை பற்றி ஆய்வு செய்து இந்திய வரலாற்றினை 'தாரீகுல் ஹிந்து' என்ற பெயரில் வழங்கி பின்வந்த வரலாற்றாசிரியர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். இவர் விஞ்ஞானம், கணிதம், அரசியல், வானவியல், மருத்துவம் போன்ற பல துறைகளிலும் காணப்பட்ட சமஸ்கிருத நூல்களை பாரசீக மொழியில் மொழிமாற்றம் செய்து இந்திய தொல்லியலை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளார்.
மொகலாய சக்கரவர்த்தி பாபர் சிறந்த இலக்கிய சிந்தனை கொண்டவர். பன்மொழிப் புலமை கொண்டவர். கல்வியில் அதிக நாட்டம் கொண்டவர். எனவேதான் அவர் கைப்பறிய இடங்களிலெல்லாம் பல கல்விக் கூடங்களைத் தொடங்குவதிலும், மொழிகளைப் பரப்புவதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். அவர் ஆட்சிபுரிந்த குறுகிய காலத்துக்குள்ளாகவே பல கல்வி நிலையங்கள் தோன்றின.
தமது வாழ்வின் பெரும்பகுதியை போராட்டத்தில் கழித்த ஹூமாயுன் கூட கல்வியாளர்களை மதிப்பவராகவும், கல்வி நிறுவனங்களை உருவாக்கி பராமரிப்பவராகவும் காணப்பட்டார். டெல்லியில் ஒரு கல்லூரியை நிறுவிய அவர் ஷேக் ஹூஸைன் என்ற பேராசிரியரை அதன் முதல்வராகவும் நியமித்திருந்தார். நூல்களைப் பராமரிப்பதில் தனி ஆர்வம் கொண்டிருந்த அவர் ஒரு மாபெரும் நூலத்தை உருவாக்கி பராமரித்தும் வந்தார். அவர் தனது நூலகத்திலிருந்து இறங்கும் வழி படிக்கட்டில் விழுந்து இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கல்விக்கு வழங்கிய முக்கியத்துவத்தின் காரணமாக அவரது கல்லறையும் ஒரு மத்ரஸாவில் அமைக்கப்பட்டுள்ளது நினைவுகூறத்தக்கது.
இந்திய முஸ்லிம் மன்னர்களில் ஜலாலுத்தீன் அக்பருடைய காலப்பகுதியானது கல்வியில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய காலப்பகுதியாகும். கல்வித்துறையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியவர் அக்பர் என்பதற்கு வரலாறு சான்றாக காணப்படுகிறது. அவரது சிறு பிராயத்தில் அவர் கற்கவில்லை, கல்வியாளராக அவரை அடையாளங் காண முடியாது என்பதாலோ என்னவோ நாடு முழுவதும் கல்வி அபிவிருத்திக்காக கங்கனங் கட்டி செயற்பட்டார்.
தொடக்கக் கல்வி, இடைநிலை, உயர் கல்வி, கல்லூரி என கல்வித்துறையின் அனைத்து மட்டங்களிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தினார். இவரது காலத்தில் 4 வகையான கல்வித் கூடங்கள் காணப்பட்டன. அவையாவன :-
1. மக்தப்கள்
2. கார்ன்ட் வாக்கள்
3. மத்ரஸாக்கள்
4. இந்துக் கல்லூரிகள்
இஸ்லாமிய நாடுகளில் நடைமுறையில் இருந்த கல்வி முறையை திறுத்தி சுல்தான்கள் தமது ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தினர். மேற்படி 4 வகைக் கல்விக் கூடங்களில் முதல் மூன்றும் இஸ்லாமியக் கல்வி நிலையங்களாகவும், மக்தப்களும் கார்ன்ட் வாக்களும் ஆரம்பக் கல்விக்கூடங்களாகவும் விளங்கின. மக்தப்கள் பள்ளிவாசல்களை ஒட்டியதாக அமைந்திருந்தன. இப்பாடசாலைகளில் அரேபிய, பாரசீக மொழிகளில் எழுத, வாசிக்க கற்றுக் கொடுக்கப்பட்டன. மேலும் அல்குர்ஆனை ஓதவும், மனனமிடவும் பயிற்றுவிக்கப்பட்டன.
மத்ரஸாக்கள் உயர்கல்வியைப் போதிப்பதற்கான கல்வி நிலையங்களான விளங்கின. இந்தியாவின் முக்கிய நகர்களில் மத்ரஸாக்கள் நிறுவப்பட்டிருந்தன. இஸ்லாமிய சமய நெறிகளில் அமைந்த இக்கல்லூரிகளில் பாரசீக, அரேபிய, மத்தியாசிய நாடுகளிலிருந்து வந்த ஆசிரியர்கள் கல்விப்பணியை மேற்கொண்டனர்.
இந்துக் கோயில்களிலும், பாடசாலைகளிலும் இந்துக்களுக்குத் தேவையான பாடநெறிகள் போதிக்கப்பட்டன. இன, சமய, கலாசார வேறுபாடுகள் இன்றி பொதுவானதொரு தேசிய இனத்தை இந்தியாவில் உருவாக்க விரும்பிய மன்னர் அக்பர் கல்வியில் சில சீர்திறுத்தங்களை அறிமுகப்படுத்தினார். பாடத்திட்டம், கற்பித்தல் முறை ஆகியவற்றை சீர்திறுத்த வேண்டும் என்று உணர்ந்த முதல் இடைக்கால மன்னர் அக்பரேயாவார்.
ஆரம்ப பாடசாலைகளில் கல்வி எவ்வாறு போதிக்க வேண்டும் என்பதில் மன்னர் அக்பர் விஷேட கவனம் செலுத்தினார். இவரது ஆட்சியில் ஒவ்வொரு மாணவரும் அறநெறி, சமூகவியல், கணிதம், வானவியல், பொருளியல், ஆட்சிமுறை, மருத்துவம், தர்க்கவியல், வரலாறு, பௌதீகம் முதலான பாடங்களை இன, மத பேதமின்றி சகலரும் கற்க ஏற்பாடுகளை செய்தார். இப்பாடங்கள் மத்ரஸாக்களிலும் போதிக்கப்பட வேண்டும் என அவர் கட்டளையிட்டார். இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கல்வி நிலையங்கள் நிறுவி கல்வி வளர்ச்சிக்கு ஊக்குவித்தார்.
முகலாய சக்கரவர்த்தி நூருத்தீன் ஜஹான்கீர் கல்வித்துறையில் அதிக நாட்டம் கொண்டவராக காணப்பட்டார். பன்மொழிப்புலமை பெற்றிருந்த இவர் காலத்தில் கல்வி வளர்சிக்கான முற்போக்கான அரசாணை ஒன்றை பிறப்பித்து செயற்படுத்தினார். அதாவது, வாரிசுகள் அற்று இறந்து போகும் பெரும் பணக்காரர்கள், வழியில் இறந்து போகும் பயணிகள் ஆகியோரின் சொத்துக்களை அரசு பெற்று அந்த வட்டாரத்தில் உள்ள கல்வி நிலையங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவது என்பதே அச்சட்டமாகும். இந்த ஆணையின் படி திரட்டப்பட்ட நிதி பொது மக்களின் கல்வி வளர்ச்சிக்கு முழுமையாக பயன்படுத்தப்பட்டன. கவனிப்பாரற்றுக் கிடந்த மத்ரஸாக்களை, கல்விக்கூடங்களை அடையாளங்கண்டு, அவற்றை பழுதுநீக்கி, பேராசிரியர்களையும் அங்கு நிரம்பச் செய்தார். சமஸ்கிருத நூல்கள் பல வெளிவரவும், அவை பாரசீக மொழியில் உடனுக்குடன் மொழிபெயர்க்கவும் பெரிதும் ஆர்வம் காட்டினார்.
ஒளரங்கசீப் காலத்தில் அவர் கல்வித்துறையில் பல மாற்றங்களைச் செய்து நடைமுறைக்கும், வாழ்க்கைக்கும் உகந்த கல்விமுறையை அறிமுகம் செய்தார். பிற்காலத்தில் மொகலாய சாம்ராஜ்யம் சிதைந்து போனாலும் கூட மொகலாய மன்னர்களான பஹதூர் ஷா, முஹம்;மது ஷா, இரண்டாம் ஷா, இரண்டாம் ககதூர் ஷா போன்றவர்களும் கல்வி வளர்ச்சி குன்றிவிடக்கூடாது என்பதில் கண்ணுங் கருத்துமாக இருந்தனர்.
பொதுவாக, இந்திய முஸ்லிம் மன்னர்களது காலத்தில் பாரசீக மொழியே பாடசாலைகளின் போதனா மொழியாக விளங்கியது. அதேவேளை பாரசிக மொழி அரச கரும மொழியாகவும் காணப்பட்டமையால் பெருவாரியாக ஹிந்துக்களும் அரச பதவிகளைப் பெறும் நோக்கில் ஆர்வத்துடன் கற்றனர். அதனால் அவர்களுக்கு உயர் பதவிகள் கிடைத்தன.
ஆரம்ப காலகட்டங்களில் வடமேற்குப் பகுதிகளில் அடிப்படைக் கல்வி நிலையங்களாக மத்ரஸாக் கல்வி நிலையங்கள் திகழ்ந்துள்ளன. சிந்து, முல்தான், லாகூர் டெல்லி ஆகிய பகுதிகளில் புகழ்மிக்க மத்ரஸாக்கள் கல்வியைப் பரப்பியதாக வரலாறு கூறுகிறது.
இந்திய இராஜ்யத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கல்விக் கலாசாலைகள் நிறுவப்பட்டன. மொகலாயர் ஆட்சிக்காலம் முழுவதும் ஆக்ரா உயர்கல்வியை வழங்கும் தலைநகராக விளங்கியது. மாமன்னர் அக்பர் நிறுவிய கல்லூரியில் தலைசிறந்த பேராசிரியர்கள் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கினர். அத்தொடு, டெல்லி நகரமும் கல்வி நிறுவனங்கள் நிரம்பிய நகரமாக உருவெடுத்தது. அதேபோன்று, குஜராத்திலும், ஜோன்பூரிலும் பல கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. காஷமீரின் வனப்பு மிக்க சூழலால் கவரப்பட்ட பல அறிஞர்கள் அங்கு சென்று தாங்களாகவே பல கல்வி நிலையங்களை உருவாக்கி கல்விப் பணிகளில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டனர்.
முஸ்லிம் மன்னர்களது ஆட்சியின் போது இந்தியாவின் ஆரம்பக் கல்வி சிறப்பாக வளர்ச்சி கண்டிருந்தது. ஆரம்பக் கல்வியானது மத்ரஸாக்கள் மற்றும் மக்தப்கள் மூலம் மக்களுக்கு போதிக்கப்பட்டன. பள்ளிவாசல்களும்கூட உயர்கல்விக் கூடங்களாக விளங்கின. இதுபற்றி வரலாற்றாசிரியர் பிக்தாஸ் என்பவர் கூறும்போது, ' இஸ்லாமிய ஆட்சியின்போது பள்ளிவாசலானது பல்கலைக்கழகமாக திகழ்ந்துள்ளது. அது பல்கலைக்கழம் என்று அழைப்பதற்கு மிகவும் பொருத்தமானதாக இருந்துள்ளது. அங்கு காலத்துக்குப் பொறுத்தமான சகல அறிவுகளும் வழங்கப்பட்டன...' என்ற கருத்தைக் குறிப்பிடுகிறார்.
மத்ரஸாக்களும், மக்தப்களும் பாரசீக மற்றும் மத்தியாசிய நாடுகளில் இயங்கி வந்த கல்வி நிறுவனங்களைப் போன்றே இயங்கி வந்தன. ஆயினும், பிற்காலத்தில் அவையே மிகப் பிரபலமான கல்விக்கூடங்களாக உருவெடுத்தன. இந்தவகையில் இந்ததியாவில் முதன்முதலில் மத்ரஸாவொன்றை அஜ்மீரில் நிறுவியவர் முஹமது கோரி ஆவார்.
பால்பனது காலத்தில் மத்ரஸாக்களில் இஸ்லாமியக் கல்வியுடன் ஷரீஅத் சட்டங்களுடன் மருத்துவம், வானவியல், கணிதவியல் போன்ற பாடங்களும் கற்பிக்கப்பட்டன.
முஹம்மத் பின் துக்லக் டெல்லியில் மேலும் ஒரு மத்ரஸாவை 1346 இல் நிறுவி அதை பள்ளிவாசலுடன் இணைத்தார்.
இப்றாஹீம் ஜோன்பூரில் பல அறிவியல் பள்ளிக்கூடங்களை நிறுவி கல்லூரிகளையும் உருவாக்கினார். அந்தவகையிலேயே இவர் 'இந்தியாவின் ஷிராஸ்' என்று பாராட்டப்படுகிறார். இவரது முயற்சியால் ஜோன்பூர் உயர்கல்வித் தலைநகராக நீண்டகாலம் விளங்கியது.
பாமினி ஆட்சியின்போது முதலமைச்சராக விளங்கிய முஹம்மது காவன் பல கல்விச் சாலைகளையும் , உயர்கல்விக்கூடங்களையும் இந்திய ராஜ்யம் முழுவதும் நிறுவி சுல்தானிடமிருந்து நிதியுதவி பெற்று கல்வி வளர்ச்சியில் சிறப்பாக பங்குகொண்டவராவார்.
இவர் ஆசிரியர்களுக்கும், அநாதை மாவர்களுக்கும் தாராளமான நிதி உதவிக்குரிய ஏற்பாடுகளைச் செய்தார். கி.பி. 1470 ஆம் ஆண்டு பீடாரில் ஒரு மதிரஸாவை நிறுவி அதன் முதல்வராக இப்றாஹீம் முல்தானி என்பவரை நியமித்து பெரிய நூலகம் ஒன்றையும் அங்கு நிறுவினார்.
பீஜப்பூரில் அடில்ஷா பாரசீக, துருக்கிய மொழியியல் அறிஞர்களைப் போற்றி வளர்த்தார். கோல்கொண்டாவில் குதாப்ஷா அடிப்படைக் கல்வி நிலையங்களையும், உயர் கல்வி நிறுவனங்களையும் நிறுவி இந்திய கல்வி வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றினார். வங்காலத்தில் குதுபுல் ஆலம் அவர்களது பெயரில் ஹஸன்ஷா புகழ்மிக்கதொரு கல்லூரியை நிறுவினார்.
இவர் பிற மொழி இலக்கியங்களை மொழிபெயர்ப்பதில் ஆர்வம் காட்டினார். இப்பணிக்காக தனது மேற்பார்வையின் கீழ் ஒரு மொழிபெயர்ப்புத் துறையை நிறுவினார். அதன் மூலம் பண்டைய கால இந்து தத்துவம், வரலாறு பற்றிய நூல்களை வட மொழியிலிருந்து பாரசீக மொழிக்கு மொழிமாற்றம் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவ்வாறே இஸ்லாம், இஸ்லாமிய சட்டக்கலை, சூபித்துவம் முதலான துறைகளுடன் தொடர்பான நூல்களை அரபி மொழியிலிந்து பாரசீக மொழிக்கு மொழிமாற்றம் செய்வித்து ஊக்குவித்தார்.
கி.பி. 1591 இல் மாலவத்தின் ஆளுனராக மூரத் நியமிக்கப்பட்டபோது மன்னர் அக்பருக்கு மகாபாரதத்தின் மொழிபெயர்ப்பு நூலொன்றைக் கொடுத்து அதில் காணப்படும் போதணைக்கு ஏற்ப வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ளுமாறு ஆலோசனை பகர்ந்தார்.
மன்னர் அறிவியல் நூல்களை சேகரிப்பதில் பேரார்வம் கொண்டிருந்தார். அவரது அரண்மனையில் காணப்பட்ட நூலகம் அக்கால உலகின் அற்புத நூலங்களிலில் ஒன்றாக விளங்கியது.
பல மத்ரஸாக்கள், கல்வி நிறுவனங்கள் செல்வமும், செல்வாக்கும் பெற்ற தனிநபர்களால் தனிநபர்களால் உறுவாக்கப்பட்டன. கியாசுத்தீன் கான், ஷரபுத்தௌலா, ஹூஸைன் ராஜா கான் போன்ற கல்வி ஆர்வளர்கள் டில்லி, பரூக்தாபாத், அஹமதாபாத், சூரத், ஒளராங்கபாத், ஹைதராபாத் போன்ற போன்ற இடங்களில் உறுவாக்கிய கல்வி நிலையங்கள் அக்கால கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் துணை நின்றன.
பெண்கள் புறக்கனிக்கப்பட்ட இந்தியாவில் பெண்களுக்கென தனி அந்தஸ்து வழங்கி அவர்களுக்கான தனியான கல்வி ஏற்பாடுகள் முஸ்லிம் மன்னர்களால் ஏற்பாடு செய்யப்பட்டன. ஆரம்பக் கல்வியைப் பொறுத்தவரை ஆண்,பெண் இரு பாலாருக்கும் ஒன்றாகவே கற்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் வசதியுள்ள பெற்றோர்கள் தமது பெண்களுக்கு பிரத்தியேக ஆசிரியர்களைக் கொண்டு வீடுகளில் கற்பித்தனர். பள்ளிவாசல்களில் சிலபோது பெண்களுக்கென பிரத்தியேக வகுப்புக்களை ஏற்பாடு செய்து நடத்தினர்.
கியாசுத்தீன் கில்ஜி பெண்களுக்கென தனியான கலை, கைவினைக்கல்வி கற்க ஏற்பாடுகளைச் செய்தார். அத்தோடு, 'முஸ்லிம் ஆட்சியாளர்களது காலத்தில் பெண்களுக்கு நடனம், இசை, தையல், கைத்தறி நெசவு, தச்சுத் தொழில், நகைசெய்யும் கலை, கருமார் தொழில், காலணிகள் தயாரித்தல், மல்யுத்தம், யுத்தப்பயிற்சி ஆகிய அனைத்துக் கலைகளும் கற்பிக்கப்பட்டன' என வரலாற்றாசிரியர் 'பெரிட்ஷா' குறிப்பிடுகிறார்.இந்நிலை அரச குடும்பத்து பெண்களுக்கு மட்டுமல்லாது சாதாரண நடுத்தர குடம்பப் பெண்களுக்கும் போதிக்கப்பட்டதை வரலாறு உறுதிப்படுத்துகிறது.
எனவே, இந்திய மன்னராட்சியில் கல்வித்துறைக்கு அவர்கள் வழங்கிய முக்கியத்துவத்தின் விளைவாக கல்வியில் போற்றத்தகு சிறந்த கல்விமான்கள் உருவாயினர். முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவுக்கு வழங்கிய இத்தகு பங்களிப்புகளை இலகுவில் குறைத்து மதிப்பிடவோ, மட்டந்தட்டவோ, மறுத்துவிடவோ முடியாது.

(தொடரும்)
மூலம் : அஷ்ஷெய்க். M.S. .றியாஸ் முஹம்மத் (Naleemi) M.A.Dip.in Edu.