Sunday, March 25, 2012

அறிவியல், நாகரிகம், ஒழுக்கம் என வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் உலகிற்கு வழிகாட்டியாக விளங்கியோர் முஸ்லிம்களே

அறிவியல், நாகரிகம், ஒழுக்கம் என வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் உலகிற்கு வழிகாட்டியாக விளங்கியோர் முஸ்லிம்களே 

                Ash Sheikh. M.S.Riyaz Mohamed (Naleemi) M.A., P.G.D.E.

முன்னுரை

   எல்லாப்புகழும் இப்பிரபஞ்சத்தை, அதிலுள்ள அனைத்தையும் படைத்து பரிபாளிக்கும் அல்லாஹ் ஒருவனுக்கே. அவன் தனித்தவன், நிகரற்றவன், அனைத்தினதும் ஆட்சி, அதிகாரத்தை தன்வசம் கொண்டவன்.

   முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனது இறுதித்தூதரும், மனித ஜின் இனங்களுக்கு மறுமை நாள் வரை வழிகாட்ட வந்தருமாவார் என சாட்சி கூறுவதுடன், அன்னார் மீதும், அன்னாரது குடும்பத்தவர்கள், தோழர்கள், நல்லடியார்கள், மறுமை நாள் வரை அல்லாஹ்வின் மார்க்கம் உயர பாடுபடும் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும், அவனது அருளும், ரஹ்மத்தும் உண்டாகட்டும்.

     உலக வரலாற்றில் கிரேக்கர்களுக்குப்பின்னர் புதிய நாகரித்தினைத் தோற்றுவித்து, அறிவிவயல், ஒழுக்க ரீதியிலான வளர்ச்சியில் முன்மாதிரியாகத் திகழ்ந்தோர் முஸ்லிம்கள். ஐரோப்பியரின் இருண்ட யுகம் என வர்ணிக்கப்படும் மத்தியகாலப்பகுதியில் முஸ்லிம் அறிவியல், ஒழுக்க, பண்பாட்டு ரீதியாக உச்ச நிலைக்குச் சென்று உலகிற்கொரு புதிய நாகரிகத்தை வழங்கினர்.

    கிரேக்கர் விட்டுச்சென்ற அடிச்சுவடுகளைத் தொடர்ந்து, தூசுபடிந்து கிடந்த அவர்களது அறிவுக்கருவூலங்களை தேடிக்கண்டுபிடித்து, அவற்றை மொழிபெயர்த்தும், ஆராய்ந்தும், விம்சித்தும், விளக்கமெழுதியும், மேலே சென்று புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு சாதனைகளைப் படைத்து உலக வரலாற்றில் அழிக்க முடியாத பல தடங்களைப் பதித்துவிட்டுள்ளனர். இருண்ட யுகத்தில் அறிவியல், நாகரிகம், ஒழுக்க ரீதியாக பாதாளத்தில் கிடந்து தத்தளித்த ஐரோப்பாவுக்கு அறிவொளி பரப்பி அதன் விஞ்ஞான முன்னேற்றத்துக்கும், நவீன கண்டுபிடிப்புகளுக்கும் அடித்தளமிட்டமிட்டனர்.

    இஸ்லாத்தை, முஸ்லிம்களை விமர்சித்தும், தூஷித்தும் வருகின்ற மேலைநாட்டவர்களிலும் கூட நடுநிலை நின்று ஆய்வு செய்கின்ற பலர் முஸ்லிம்களது இந்த அறிய பணியை பாராட்டி கட்டுரைகளை வரைந்துள்ளனர். பலர் நூதனசாலைகளிலும், பண்டைய நூல் நியைங்களிலும் கவனிப்பாரற்றுக் கிடந்த முஸ்லிம்களது அறிவுக்கருவூலங்களை மொழிபெயர்த்தும், அச்சிட்டும் உலகிற்கு வழங்கினர். ஆயின், இன்று ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் அதன் மூலப்பிரதியின் அமாழிபெயர்ப்புகள் காணப்பட்டபோதிலும், தமிழ் மொழியில் அதன் மொழிபெயர்ப்பு பிரதிகள் காணப்படாமை தமிழ்பேசும் முஸ்லிம்களது துரதிஷ்டமாகும்.

   எனவே, இத்துறையில் பல ஆய்வுகள், மொழிபெயர்ப்புகள், விளக்கங்கள் மேற்கொள்ளப்படுவது, முஸ்லிம்கள் தமது முன்னோர்களது பெறுமைகளை அறிந்து அதன்வழி செல்வதற்கு இன்றியமையததாகும். அடிப்படை வணக்கங்களை மாத்திரம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்ட இன்றைய சமுகத்தில், அறிவுத்துறை ஆய்வுகளும் ஒரு சுன்னா என்ற சிந்தனையை மக்களிடம் சேர்ப்பது இன்றைய புத்திஜீவிகளின் முக்கிய பணியாகும். அதற்காக, எமது முனனோர்களது பலம்பெருமைகளை சமுகத்தில் முன்னுதாரணமாக எடுத்துக்கூறுவது இன்றியமையாத ஒன்றாகும். 
இஸ்லாமிய அறிவியல், நாகரிகம், கல்வி வளர்ச்சி
      இந்த தலைப்பினை அனுகுவதற்கு முன்பு, இஸ்லாம் உலகில் உதிப்பதற்கு முன்பு அரேபியாவினதும், இதர பகுதிகளதும் அறிவியல், நாகரிகம், ஒழுக்க நிலை பற்றி நோக்குவது பொருத்தமானதாகும்.

   அரபு நாட்டைப் பொறுத்தவரையில், இஸ்லாத்திற்கு முற்பட்ட காலப்பகுதி 'அய்யாமுல் ஜாஹிலிய்யா' (அறியாமைக் காலம்) என அழைக்கப்படுகிறது. காரணம், அறிவு ரீதியாக, ஒழுக்க, பண்பாட்டு ரீதியாக, மிக பின் தங்கியோராக அவர்கள் காணப்பட்டனர். விரல் விட்டு எண்ணக்கூடிய 17 பேரே அன்றைய அரேபியாவில் எழுத, வாசிக்கத்தெரிந்தவர்களாக விளங்கினர் என்பது அரபு வரலாற்றாசிரியர்கள் தரும் தகவல்.

    இஸ்லாத்திற்கு முற்பட்ட அரேபியா, கலாசாரம், விஞ்ஞானம், அறிவுப்புலமை மற்றும் பொருளாதாரம் என்பனவற்றில் எதனையுமே கொண்டிருக்கவில்லை. பூகோல ரீதியிலான காரணங்களினால் அரேபியர்கள் ஏழ்மையிலும், இளி நிiயிலும் நாடோடிகளாக வாழ்ந்து வந்தனர். எனவேதான், உரோம, பாரசிக சாம்ராஜ்யங்கள் கூட அரேபியாவை எட்டிப்பார்க்க முன்வரவில்லை. அவர்களது நாகரிக, கலாசார, பண்பாட்டுப் பாரம்பரியங்களுக்கு அரபுலகம் உட்படவில்லை என்பதும் இதனாலேயாகும். எனவே, உலகப்போக்கிலிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவர்கள், மூட நம்பிக்கைகளுக்கும், கீழ்த்தரமான பாரம்பரியங்களுக்கும் பழியாகியிருந்தனர்.

    அன்றைய அரபு சமுகத்தினது கல்வி நிலையைப் பொருத்தவரையில், கவிதை புனைதல், கதை கூறல், கனவுகளுக்காக பொருள் கூறல், வின் பற்றிய தகவல்களைக கூறல், பரம்பறையியல் போன்ற துறைகளுடன் மட்டுப்படுத்தப்பட்டதாயும், தமது சொந்த பண்பாட்டைத் தழுவியதாயும் அமைந்திருந்தது. அக்காலத்தில் உச்ச நிலையை அடைந்திருந்த பாரசீக, உரோம நாகரிகங்களின் தாக்கம் அவர்கள் மீது ஏற்படாமை இதற்கு முக்கிய காரணியாக விளங்கியது.

    அத்தோடு, அங்கு 20 இற்கும் அதிகமான இடங்களில் ஆண்டுதோரும் திருவிழாக்கள் இடம்பெற்று வந்தன. இத்திருவிழா வைபவங்கள் நடைபெறும் தலங்களில் வேறு பேவாட்டிகளுடன் கவிதைப் போட்டிகளும் நடைபெற்றன. 'உக்காழ்' சந்தையில் நடைபெற்ற கவிதைப்போட்டியில் பல பிரபலமிக்க கவிஞர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றியீட்டிய கவிஞர்களுக்கு பெறுமதிமிக்க பரிசில்களும் வழங்கினர். வெற்றிபெற்ற கவிதைகளை பட்டுத்துணியில் தங்கத்தினால் நெய்து கஃபாவின் சுவர்களிலே தொங்கவிடப்பட்டன. இம்ரஉல் கைஸ், அபீத் பின் அல் அப்ரஸ், தரபா, அம் பின் குல்ஸூம், அல்ஹரிஸ் பின் இல்லிஷா, அல் நாபிக், ஸூஹைர் பின் அபூ ஸூல்மா, அன்தரா போன்ற பிரபலமிக்க கவிஞர்கள் இருந்துள்ளனர்.

   இத்திருவிழாக்களில் காணப்பட்ட அதுத்த முக்கிய அம்சம் கதை கூறல். புராணங்களையும், வீர வரலாறுகளையும் கூறி விழாவுக்கு வருகை தந்தோரை மகிழ்விப்பர்.

     இக்கால மக்கள் அறிவியல் துறை என்று கூறும் போது, வானியல் துறையில் ஓரளவு அறிவைப் பெற்றிருந்தனர். பாலைவனங்களில், கடல்களில் தமது போக்குவருத்துக்காகவும், வணங்குவதற்காகவும், வணக்க தினங்களை அறிந்துகொள்வதற்காகவும் என பல நோக்கங்களுக்காக இத்துறையில் ஓரளவு அறிவைப் பெற்றிருந்தனர்.

    இது தவிர வளிமண்டலவியல், மருத்துவம், போன்ற துறைகளிலும் ஓரளவு அறிவைப் பெற்றிருந்தனர். அத்தோடு, கனவுக்கு விளக்கம் கூறத்தக்க அறிஞர்களென சிலரும் காணப்பட்டனர். தமது சொந்தப் பரம்பறை பற்றி பெருமையடிப்பதற்காக தமது பரம்பறை பற்றிய அறிவை அவர்கள் பெற்றிருந்தனர். உனவேதான் நபி (ஸல்) அவர்களது பரம்பறை பற்றிக்கூட தெளிவாகவும் ஆதாரபூர்வமாகவும் எமக்குக் கிடைக்கக்கூடியதாக உள்ளது.

      ஆயினும், இத்துறைகளில் அவர்கள் பெற்றிருந்த அறிவானது ஆராய்ச்சியின், பரிசோதனைகளின் அடிப்படையிலான அறிவன்று. மாறாக, அவை வெறும் ஊகங்களின் அனுபவங்களின் அடிப்படையில் அமையப்பெற்ற அறிவாகவே காணப்பட்டன. அத்தோடு, வெறும் அனுபவங்களை வைத்தும், பாரம்பரியமாகவும் பெற்ற குழந்தைப்பருவ அறிவினையே அவர்கள் பெற்றிருந்தனர். 

       மழைக்கும், காற்றுகளுக்கும் சில வகை வின்மீன்கள் காரணமாக அமைவதாக் கருதிய அவர்கள், அந்த வின்மீன்கள் இருந்த இடங்களைக் கொண்டு வளிமண்டலத்தில் நிகழவிருந்த மாற்றங்களை அறிந்துகொண்டனர்.

      மருத்துவத்துறையிலும் கூட ஓரளவு ஆரம்ப அறிவினை மட்டுமே பெற்றிருந்தனர். மிருகங்கள், தாவரங்கள், கற்கள், மந்திரித்தல், சூனியம் செய்தல் போன்ற மருத்துவ முறைகளை அவர்கள் அறிந்திருந்ததுடன் இந்திய, சீன மருத்துவ முறைகளாக காணப்பட்ட இரத்தம் குத்தல், சூடு போடல், பத்தியம் காத்தல், சில மூலிகைளின் பயன்பாடு போன்றவற்றை அறிந்து பின்பற்றி வந்தனர்.

      அந்தவகையில் அறிவியல் துறைகளைப் பொறுத்தவரையில் ஜாஹிலிய்;ய அரபு சமுகம் மிக சொற்பமான அறிவை மாத்திரமே பெற்றிருந்தனர் என்பதோடு, அவ்வகை அறிவையும்கூட விஞ்ஞான ரீதியான அறிவாக அவர்கள் பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

     இந்நிலையில், அரேபியாவிற்கு வெளியே அன்று செல்வாக்கு செலுத்திய உரோம, பாரசீக சாம்ராஜ்யங்களைப் பொருத்தவரையில், அவர்கள் அறிவியல் துறைக்கு எத்தகைய முக்கியத்துவத்தினையும் வழங்கவில்லை. அறிவியல் பேசும் அறிஞர்களை, விஞ்ஞானிகளை தமது வேத நூலுக்கு முரணாக பேருவதாகக் கூறி கடுமையாக சித்திரவதைப்படுத்தினர். பலரை நெருப்பிலிட்டும், நீரில் மூழ்கடித்தும், சிறையிலடைத்தும் கொலையும் செய்தனர்.

    இந்நிலையில், அவர்களுக்கு முன்பிருந்த கிரேக்கர்களது அறிவுக்கருவூலங்கலெல்லாம் தூசு படிந்து, கவனிப்பாரற்று காணப்பட்டன. இஸ்லாம் உலகில் உதயமாகி அறிவொளி பரப்பும் போது அவை தேடிக் கண்டுபிடிக்கபப்பட்டு புத்துயில் வழங்கப்படும் வரையல் அவை அவ்வாறே காணப்பட்டன.

இஸ்லாத்தின் வருகையின் பின்பு அறிவியல் வளர்ச்சி
     இஸ்லாம் உலகில் அவதரித்த பின்பு அல்குர்ஆனும், நபி (ஸல்) அவர்களது வழிகாட்டல்களும் காரணமாக முழு உலகிற்கும் அறிவொளி பரப்பியது. அல்குர்ஆன், அதன் முதல் வார்த்தையே 'இக்ரஃ' 'வாசிப்பீராக' என்ற சொல்லுடன் ஆரம்பித்த இஸ்லாம் குறுகிய காலப்பகுதியிலேயே எழுத வாசிக்கத்தெரியாத அந்த சமுகத்தில் புரட்சிகரமான மாற்றத்தினை ஏற்படுத்தியது. வெறும் மூட நம்பிக்கைகளாகவும், ஊகங்களின் அடிப்படையிலும் அமைந்திருந்த  அன்றைய அறிவியலை ஆய்வாகவும், விஞ்ஞானமாகவும் மாற்றியமைத்தது இஸ்லாமே.

     அல்குர்ஆன் மனிதரிடையே ஏற்படுத்திய அறிவுப்புரட்சிக்கு முதல் வசனங்களே அடிகோலின. 'வாசிப்பீராக (நபியே!) படைத்த உம் இறைவனின் பெயர் கொண்டு! (உறைத்த) இரத்தக்கட்டியிலிருந்து மனிதனை அவன் படைத்தான். வாசிப்பீராக! உம்து இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில், அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக்கொடுத்தான். மனிதருக்கு அவன் அறியாதிருந்ததையெல்லாம் கற்றுக்கொடுத்தான்' (96: 1-5)

    இவ்வாரம்ப வசனமே மனிதக்கருவியல் தொடர்பான விஞ்ஞானத்தைப் பேசுகிறது. அறிவின் மேன்மையையும் மனிதன் மூலம் அல்லாஹ் இவ்வுலகில் நிகழ்த்தப்போகும் அறிவியல் புரட்சி தொடர்பாகவும் பேசுகின்றது.

    இது தவிர அல்குர்ஆன் பல வசனங்களின் மூலம் கற்கத் தூண்கின்றதை அவதானிக்கலாம்.

    'உங்களில் எவர்கள் இறை நம்பி;க்கை கொண்டிருக்கின்றீர்களோ, மேலும், எவர்களுக்கு ஞானம் வழங்கப்பட்டிருக்கின்றதோ அவர்களுக்கு அல்லாஹ் உயர்ந்த பதவிகளை வழங்குவான்' (58:11)

   'அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா?' (39:9)

  'என் இறைவனே! எனக்கு அதிகமாக அறிவு ஞானத்தை வழங்குவாயாக! என்று இறைஞ்சுவீராக!' ( 20:114)

    'நிச்சயமாக அல்லாவின் அடியார்களில் அறிவுடையோரே அவனை அதிகம் அஞ்சுகின்றவர்கள்' (35:28)

    'எழுதுகோலின் மீது சத்தியமாக! எழுதுவுவோர் அதனைக்கொண்டு எதனை எழுதிக்கொண்டிருக்கிறார்களோ அதன் மீது சத்தியமாக' (68:1)

    இது போன்ற ஏராளமான அல்குர்ஆன் வசனங்கள் எழுத்தை, வாசிப்பை, அறிவை, அறிஞர்களின் சிறப்பை வலியுறுத்துகின்றன. இவைதவிர, நபி (ஸல்) அவர்கள் அறிவுக்கு வழங்கிய முக்கியத்துவமும் அதற்கு காரணமாக விளங்கியது.

      'யார் அறிவைத்தேடி பயணிக்கிறாரோ அவருக்கு அல்லா சுவனத்திற்கான பாதையை இலகுபடுத்திக் கொடுக்கிறான்' ( முஸ்லிம்)

    'எவர் அறிவுதேடுவதற்காக வீட்டை விட்டு வெளியேறுகின்றாரோ அவர் வீடு திரும்பும் வரையில் இறை பாதையில் இருக்கிறார்' (திர்மிதி)

   'சுவனம் செல்லும் வரையில் ஒரு முஃமின் பயன்தரும் அறிவு தேடுதலில் திருப்தி காண்பதில்லை' (திர்மிதி)

   'எவர் அறிவைத்தேடி பயணம் மேற்கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் சுவனத்தில் பாதையை எளிதாக்குகிறான். அவர்களின் செயல்களைப் பாராட்டி, வானவர் அவருக்கான தங்களது சிறகுகளை விரிக்கின்றனர். கடலில் வாழும் மீனினம் உட்பட, வானம், பூமியிலுள்ள அனைத்துப் படைப்பினங்களும் அவருக்கு பாவமன்னிப்பு தேடுகின்றன. பூரண சந்திரனை விட சிறந்து விளங்குவதைப் போன்று உபரியான வணக்கத்தில் ஈடுபட்டிருக்கும் ஒர் இறையடியானை விட ஓர் அறிஞன் மேலானவன்' (அபூதாவுத், திமிதி)

    இவ்வாறு, இஸ்லாம் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் இஸ்லாமிய பார்வையில் மறுமையுடன் தொடர்ணபடைய இபாதத்தான செயற்பாடாக அறிமுகப்படுத்தியமையினால் அச்சமுகத்திலிருந்த பெரும்தொகையினர் இப்பணிக்காக தம்மை அர்ப்பணிக்கத் தொடங்கினர்.

    இஸ்லாத்தின் வருகையானது அதுவரைகால வரலாற்றில் ஒரு மாபெரும் புரட்சியை உருவாக்கியது. கருத்திலும், உணர்ச்சியிலும், சிந்தனையிலும், அறிவுத்திறனிலும் தனி நபர்கள்தொடர்பாகவும், சமூகங்கள் தொடர்பாகவுமென மனித வாழ்வின் அனைத்துத் தறைகளிலும் மாபெரும் புரட்சியைத் தோற்றுவித்தது.

     இஸ்லாத்தின் தோற்றத்தின் முதலாவது ஆயிரமாவது ஆண்டு நிறைவடையும் போது மேற்கில் ஆபிரிக்காவின் அத்லாந்திக் கரையிலிருந்து, கிழக்கில் சீனப்பெருஞ்சுவர் வரையில், மத்திய தரைக்கடலிலிருந்து ஆபிரிக்காவின் சஹாராப் பாலைவனம் வரையில் இஸ்லாம் வியாபித்திருந்தது. இஸ்பெயினில் முதலில் அந்தலூசியாவைக் கைப்பற்றிய இஸ்லாமிய துருப்புக்கள், பின்பு பயர்னீஸ் வரையிலான முழு இஸ்பெயினையும் தம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. மேலும் தென் பிரான்ஸின் 'டுவர்ஸ்' வரையில் ஊடுறுவிச் சென்றன. சில நூற்றாண்டுகளுக்குள்ளாகவே ஈரான், ஆப்கானிஸ்தான், பஞ்சாப், சிந்து, கோபி போன்ற பிரதேசங்களைக் கைபற்றி தமது ஆதிக்கத்தினை நிலைநாட்டிக்கொண்டது.

    இந்த அனைத்துப் பிரதேசங்களிலும் தமது ஆதிக்கத்தின் கீழ் வந்த புதிய சமுகங்கள் தொடர்பாக அரேபிய தாயகத்தில் உருவாக்கப்பட்ட கோட்பாடுகள் பிரயோகிக்கப்பட்டன. குறிப்பாக, இஸ்லாத்தின் நீதி, சமத்துவம், சகோதரத்துவம் போன்றவற்றுடன் அறிவியல், நாகரிகம், ஒழுக்கம் என்பன திறம்பட இப்பிரதேசங்களில் வேருன்றின.

     இந்நாடுகளில் காணப்பட்ட கொடுங்கோல் ஆட்சிகளைத் தூக்கியெறிவது முஸ்லிம்களது முதல் பணியாக விளங்கியது. எனவேதான், பல பகுதிகளில் முஸ்லிம் படைகளை அவர்கள் வரவேற்றனர். அத்தோடு, இஸ்லாமிய ஆட்சிமுறையை ஸ்தாபித்து மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பது அதன் இரண்டாவது முக்கிய பணியானது. அறிவு, ஆய்வு, சிந்தனை  என்பனவற்றிற்கு புத்தொளி பாய்ச்சுவது அதன் அடுத்த முக்கிய பணியாக விளங்கியது.

    
   
      இதன்மூலம் மூட நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுந்த சகல நடவடிக்கைகளும் அழிக்கப்பட்டு, மனிதனின் பகுத்தறிவுக்கும் சிந்தனைக்கும் வேலை வழங்கப்பட்டது. அறிவைத் தேடிப்பெறுவது அனைவர் மீதும் கடமையாக்கப்பட்டது. இயற்கையையும், அதன் அற்புதங்களையும் ஆராய்ந்து அறிவு பெறுமாறு மக்களை அல்குர்ஆனும், சுன்னாவும் தூண்டுகின்றன. ஆராய்ச்சி, பரிசோதனை முறைகள் என்பனவற்றின் அடிப்படையில் அமைந்த அறிவியல் இயக்கத்திற்கு அது வித்திட்டது.

      அரேபியர் இஸ்லாத்தின் போதனைகளால் தூண்டப்பட்டு கல்வியின்பால் தீவிர ஈடுபாடு கொண்டனர். அறிவைத்தேடும் ஆர்வமும், ஆராய்ச்சிகளின் பாலான ஆர்வமும் அவர்களது இதயங்களில் குடிகொள்ளலாயிற்று. ஆயினும், இஸ்லாத்தின் ஆரம்ப காலகட்டத்தில் அவர்களது அறிவுத்துறை ஈடுபாட்டையும், ஆர்வத்தையும் விருத்திசெய்யக்கூடிய வாய்ப்புகள் பெருமளவில் அவர்களுக்குக் கிடைக்காதபோதும், பிற்காலத்தில் இஸ்லாமிய ஆட்சிப் பரம்பறையான அப்பாசியர்களது ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்கள் நாகரிக, அறிவியல் வளர்ச்சியின் முன்னோடிகளாக மாறினார்கள்.

     உமையாக்களது ஆட்சியின் போது விதைக்கப்பட்ட அறிவுத்துறை வித்துக்கள் அப்பாசியரின் காலத்தில் மரங்களாக வளர்ந்து முழு உலகிற்கும்
காய்களும்,கனிகளும் தரத்தொடங்கின. பிலிப் கே. ஹிட்டி குறிப்பிடுவது போல், 'அவர்களுடைய ஆட்சிக்காலம் இஸ்லாத்தின் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த அறிவியல் விளிப்பு ஏற்பட்ட காலமாகவும் சிந்தனை, பண்பாடு ஆகியவற்றின் வரலாற்றில் மிகச் சிறப்பு வாய்ந்த காலமாகவும் விளங்கியது'.

    கி.பி. 750 தொடக்கம், கி.பி.1258 வரையிலான காலப்பகுதியில் சாம்ராஜ்யத்தை ஆண்டு அரசோச்சிய அப்பாசியர் தாத்தாரியத் தளபதி 'செங்கிஸ்கான்' தலைமையிலான படை அதனை அழிக்கத் தொடங்கும் வரையிலான சுமார் 5 நூற்றாண்டு காலப்பகுதியில் அவர்கள் ஆய்ந்து விட்டுச்சென்ற விஞ்ஞான தொழிநுட்பத்தைத் தான் இன்றைய ஐரோப்பா, வளர்ச்சியடைந்த மேலை நாடுகளின் பூதாகரமான விஞ்ஞான, தொழிநுட்ப விருத்திக்கு வாரிசாகப் பெற்றுள்ளனர் என்பதை அவர்களே ஏற்றுள்ளனர். அவர்களது விஞ்ஞானமும், அறிவியலும் முஸ்லிம்களது விஞ்ஞானிகள் அமைத்துக்கொடுத்த அடித்தளத்தின் மீதே அமைந்துள்ளன என்பதை எவராலும் மறுக்க முடியாது.
 
    மேலை நாட்டு அறிஞர்களுள் ஒருவரான 'ராபர்ட் ப்ரிபோல்ட்' (Robert Briffault) என்பவர் 'ஆயமiபெ ழக ர்ரஅயninவைல' என்ற நூலில் கூறும் போது, 'அராபியரில் வானவியல் ஒரு கொப்பனிகஸையோ அல்லது நியூற்றனையோ உருவாக்கவில்லை. எனினும், அராபியர்களது பங்களிப்பின்றி ஒரு கொப்பனிகஸோ அல்லது நியூற்றனோ பிற்ந்தே இருக்க முடியாது' என குறிப்பிடுகிறார். (Making of Humanity. P -295)

      இந்திய முன்னைநாள் பிரதமர் ஜவஹல்லால் நேரு குறிப்பிடும் போது, ' ஐரோப்பா அன்று கல்வியில், விஞ்ஞானத்தில், கலையில், வாழ்வின் அடிப்படை வசதிகளில் பின்தங்கியிருந்தது. அரபு இஸ்பெயினே, அதிலும் குறிப்பாக, அங்குள்ள கொரடோவா பல்கலைக்கழகம் ஐரோப்பாவின் இருண்ட காலகட்டங்கள் முழுவதும் கல்வி மற்றும் அறிவு பேரார்வம் எனும் ஒளி விளக்கை தொடர்ந்து எரியச்செய்தது. அதனுடைய ஒளிக்கதிர்களில் சில ஐரோப்பாவை மூடியிருந்த இருளைக் கிழித்துச் சென்றன. (The Discovery of India. P.223-224)

     இந்தவகையில் உமையாக்கள் தூவிய வித்து அப்பாசிய ஆட்சியாளர்களது காலத்தில் முளைத்து பெருவிருட்சமாக வளர்ந்தது. அப்பாசியர் அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் வழங்கியதோடு, அவர்களுள் மஃமுன் போன்ற பலர் அறிவுத்தாகம் கொண்டவர்களாகவும் இருந்தனர். அவர்கள் தமது பேரரசு எங்கும் கல்லூரிகளையும், ஆராய்ச்சி நிலையங்களையும் நிறுவினர். சமயம் சார்ந்த கலைகளுடன் மருத்துவம், கணிதம், வானியல், புவியியல், இயற்கை விஞ்ஞானம் முதலான அறிவுத்துறைகளும் சேர்ந்து வளர்ச்சிகாண அவர்கள் தூண்டுகோலாய் விளங்கினர்.

     இவர்களது ஆட்சியின்போது இஸ்லாமிய பேரரசைச் சேர்ந்த சிற்றூர்களில் கூட பாடசாலைகள் நிறுவப்பட்டிருந்தன. இந்தகைய பாடசாலைகள், பள்ளிவாயில்களிலும், தனியார் வீடுகளிலும் சில சமயங்களில் ஆசிரியரின் சொந்த இல்லங்களிலும் பாடசாலைகள் இயங்கி வந்தன. 6 வயதுவரையில் பிள்ளைகள் தத்தமது வீடுகளிலேயே பெற்றோரிடம் அல்லது வேறு ஆசிரியரிடம் கல்விபயின்றனர். பிள்ளைகள் ஆறாம் வயதை அடைந்தபோதுதான் அவர்களது
   முறைசார் கல்வி ஆரம்பமானது. பின்பு அவர்கள் 'மக;தப்' என அழைக்கபட்ட ஆரம்பப்; பாடசாலைகளில் சேர்ந்து கல்வி பயின்றனர்.

      ஆரம்பகால அப்பாசிய கலீபாக்களின் காலத்தில் வழங்கப்பட்ட கல்வி அதே காலத்தில் ஐரோப்பாவில் வழங்கப்பட்ட தேவாலயக் கல்வி ஓரளவுக்கு ஒத்ததாக விளங்கியது.

    ஐரோப்பாவில் வேத நூல்களே எல்லாவற்றிற்கும் இறுதிப் பிரமாணமாக விளங்கியது. தத்துவமும், விஞ்ஞானமும் கூட கிருஸ்தவ வேத சாஸ்திரத்துக்கு முரண்படாதவகையிலேயே போதிக்கப்பட்டன. அவ்வாறே, முஸ்லிம்களுக்கும் அல்குர்ஆனும், சமயப்போதனைகளுமே அனைத்துக்கும் அடிப்படைகளாக விளங்கியது.

      ஆரம்பப்பாடசாலைகளின் பாடத்திட்டம் வாசிப்பு, எழுத்து, இலக்கனம், ஹதீஸ், ஆரம்பக் கணிதம், பக்தி கவிதைகள் ஆகியனவற்றை உள்ளடக்கியதாக அமைந்திருந்தது. பேராசிரியர் பிலிப் கே. ஹிட்டியின் கருத்துப்படி பாடத்திட்டம் முழுவதிலும் மனனம் செய்யும் வேலைக்கே அதிக அழுத்தம் வழங்கப்பட்டிருந்தது. ஆரம்பக் கல்வியை பூரணப்படுத்தியோர் உயர்கல்விக்கு  சேர்த்துக்கொள்ளப்பட்டனர். உயர் வகுப்பு மாணவர்களுக்கு அல்குர்ஆன் விரிவுரை, ஹதீஸ்கலை, சட்டம், சமய சித்தாத்தங்கள், சொற்கோப்புக்கலை, இலக்கியம் ஆகிய கலைகள் கற்பிக்கப்பட்டன. பல்வேறு துறைகளில் ஆற்றலும், அனுபவமும் பெற்ற அறிஞர்கள் வானியல், தத்துவம், கணிதம், மருத்துவம், புவியியல், வரலாறு, பௌதீகவியல், இரசாயனவியல் முதலான அறிவியல் துறைகளை தாமே விரிவாகக் கற்பதிலும், ஆராய்வதிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர்.

    அப்பாசிய கலீபாக்கள் ஆரம்ப பாடசாலைகளை நிறுவியதோடு நின்றுவிடவில்லை. உயர்கல்லூரிகளையும், பல்கலைக்கழகங்களையும் நிறுவி உயர்கல்வி வளர்ச்சிக்கும், அறிவுத்துறை ஆராய்ச்சிகளுக்கும் அவர்கள் வழயமைத்தனர். பிற்காலத்தில் ஐரோப்பாவில் நிறுவப்பட்ட கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் அப்பாசியர்கால கலாநிலையங்களே முன்னோடிகளாக விளங்கின.

       கலீபா ஹாரூன் அர்ரஷீத், மஃமுன் போன்றோரது ஆட்சியின் போதும் பெருந்தொகையான உயர்கல்வி நிலையங்கள் முஸ்லிம் பேரரசின் முக்கிய நகரங்களிலெல்லாம் நிறுவப்பட்டன. இவர்களது காலத்தில் பல்கலைக்கழகம் ஒன்றும், வானோக்கு நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டது. இவர்களது காலத்திலேயே மொழிபெயர்ப்புப் பணி தாபண ரீதியாகவும், ஒழுங்கான முறைமையுடனும் ஆரம்பிக்கபட்டது.

     கலீபா அல்மஃமூன் பக்தாத் நகரில் 'பைத்துல் ஹிக்மா' எனும் அறிவு நிலையம் ஒன்றை நிறுவினார். இந்த நிறுவனமே முஸ்லிம்களின் அறறிவியல் ஆராய்ச்சிக்கு நிலைக்களமாக விளங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனமே கி.பி. 15 ஆம் நூற்றாண்டின் இறுதி அரைப்பகுதி வரையில் அறிவுப்பாரம்பரியத்தினை உலகிற்கு வழங்கிக் கொண்டிருந்த பக்தாத் அறிவியல் மரபின் அத்திபாரமாக விளங்கியது. இந்நிறுவனம் மொழிபெயர்ப்புப் பணியில் மாத்திரம் சுருங்கி நிற்காது, ஆராய்ச்சிக்கூடமாகவும் பொது நூல் நிலையாமாகவும் விளங்கியது.

     அப்பாசியர் ஆட்சியின்போது முஸ்லிம்கள் அறிவியலின் சகல துறைகளிலும் ஆராய்ச்சிப் பணியை தொடங்கிவிட்டனர். மருத்துவம், பௌதீகவியல், இரசாயனவியல், புவியியல், வானவியல், கணிதவியல், வரலாறு, உயிரியல், இஸ்லாமிய சமயக் கலைகள் முதலான சகல துறைகளும் செழிப்புற்று வளச்சி கண்டன.

      அப்பாசியக் கலீபா அல்மன்ஸூரின் ஆட்சிக்காலத்தில் (கி.பி. 754 - 775) வளர்ச்சிகாணவாரம்பித்த அறிவியல் கலைகள், கலீபா ஹாரூன் ரஷீத், அல்மஃமூன், அல்முதவக்கில் ஆகியோரது காலங்களில் அறிவியல் வளர்சியின் உச்சத்தையே எட்டியிருந்தன.

    வானியல் துறையில் உச்ச நிலைக்கு சென்ற முஸ்லிம்களுக்கு அப்பாசிய கலீபா மன்;ஸூரின் காலத்திலேயே இந்திய வானியல் பற்றி அறிமுகப்படுத்தப்பட்டது. 'சித்தாந்த' எனும் நூல் அரபுக்கு 'ஸின்ந் ஹிந்து' எனும் தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டது. இது அரபுலகில் வானியல் ஆராய்ச்சிகள், புதிய கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையாக அமைந்தது. நூற்றுக்கணக்கான வானோக்கு நிலையங்கள் இஸ்லாமிய உலகில் பல பகுதிகளிலும் நிறுவப்பட்டு வானியல் துறையில் முஸ்லிம்கள் பெரும் புரட்சியைத் தோற்றுவித்தனர்.

     கிரேக்கரின் தூசுபடிந்து, தொழைந்து கிடந்த அறிவியல் நூல்களை முஸ்லிம் அறிஞர்கள் தேடிக்கண்டுபிடித்து  அவற்றை அரபுக்கு மொழிபெயர்த்து அவற்றைப் பாதுகாத்தனர். அவை இன்று மூல மொழிகளில் இல்லாதபோதும் அரபு மொழிபெயர்ப்புகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. கலீபா மன்ஸூருக்காக அபூ யஹ்யா பின் அல் பத்;ரீத் என்பவர் கிரேக்க அறிஞர் கெலன், ஹிப்போக்ரடீஸ் ஆகியோரின் பிரதான கிரேக்க நூல்களை மொழிபெயர்த்துக் கொடுத்தார். இவை தவிர கிரேக்க அறிஞர் பிலேட்டோவின் Timaeus எனும் நூலும் இவரால் மொழிபெயர்க்கப்பட்டது. அத்தோடு, இயூக்கிலீட்டின் 'மூலகங்கள்' ((The Eliments), தொலமியின் 'அல்மஜெஸ்ட்' ஆகியன மொழிபெயர்க்கப்பட்டன. கலீபா ஹாரூன் காலத்தில் ஈரானிய வானியல் விஞ்ஞானிகளது நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன.  மொழிபெயர்ப்பாளர்களாக முஸ்லிம்கள் மாத்திரமன்றி கிருஸ்தவ, யூத மத அராபியர்களும், சிரியர்களும் பணியாற்றினர்.

     அப்பாசிய கலீபாக்களில் கலீபா மஃமுனின் காலம் அறிவியல் துறையின் பொற்காலமாக விளங்கியது. இவரது காலத்திலேயே செயன்முறை வானியல் முதன்முதலாக மேற்கொள்ளப்பட்டது. இரு வானிலை அவதான நிலையங்கள் இவரால் நிறுவப்பட்டன. பூமி உருண்டையானது என நிறுவி, அதன் சுற்றளவைக் கணிக்கும் முயற்சி இக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இதே காலப்பகுதியில் இன்று அறிவியலில் கொடிகட்டிப்பறக்கும் ஐரோப்பாவின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை நோக்கினால், ஸையித் அமீர் அலி அவர்கள் குறிப்பிடுவது போன்று, 'கிருஸ்தவ ஐரோப்பா பூமி தட்டையானது என கருதிக்கொண்டிருக்கும் முஸ்லிம்கள் செங்கடற்கரை மீது ஒரு பாகையின் அளவீட்டிலிருந்து பூமியின் பருமனைக் கணித்தனர்' என குறிப்பிடுகிறார்.

     கலீபா மஃமூனின் காலத்திலேயே அபுல் ஹஸன் என்பவர் முதன்முதலாக தொலைக்காட்டியைக் கண்டுபிடித்து உருவாக்கினார். இது பின்பு திருத்தியமைக்கப்பட்டு வெற்றிகரமாக கையாளப்பட்;டன. இக்காலப்பகுதியில் அறிவியலின் சகல துறைகளுடனும் தொடர்பான பல நூல்கள் தொகுக்கப்பட்டு மக்களை சென்றடைய வழிவகுக்கப்பட்டன.

     அப்பாசியருக்குப் பின் தோன்றிய சிற்றரசுகளிலும்கூட தோன்றிய சில ஆட்சியாளர்கள் அறிவுத்துறை வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினர். ஒவ்வொரு சிற்றரசும் தமது பலத்தை நிறுவ போட்டிக்காக வேண்டி பல வானோக்கு நிலையங்களை நிறுவி அறிவியலில் தாம் பலமிக்கவரென காண்பிக்க முனைந்தன.

   வட ஆபிரிக்காவிலும் எகிப்திலும் நிலைகொண்டிருந்த பாதிமி ஆட்சி கலீபாக்களும் கூட அறிவுத்துறை ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கினர். இதனைக் குறிப்பிடும் அமீர் அலி அவர்கள், 'எகிப்தை ஆண்ட பாதிமியரின் கீழ் கெய்ரோ நகரம் ஒரு புதிய அறிவியல் நிலையமாயிற்று' என குறிப்பிடுகிறார்கள். இக்காலப்பகுதியில் பல வானோக்கு நிலையங்களும் நிறுவப்பட்டு வானியல் ஆய்வுகள் இடம்பெற்றன.

   இரண்டரை நூற்றாண்டுவரையில் எகிப்தையும், சிரியாவையும் ஆட்சிபுரிந்த மம்லூக்கிய ஆட்சியர்களாலும் சிறந்த அறிவுப்பணி மேற்கொள்ளப்பட்டது. இஸ்பானியாவை ஆண்ட உமையா ஆட்சி வம்சத்தினர் மூலமாக வரலாறு மறுக்க முடியாதளவு அறிவுப்பணி மேற்கொள்ளப்பட்டது. இஸ்பானிய கலீபா மூன்றாம் அப்துர்ரஹ்மான் ஆட்சிக்காலம் இஸ்பானியாவின் அறிவியல் துறை பொற்காலமாக விளங்கியது. இவரது காலத்தில் குர்துபா நகரம் ஐரோப்பாவின் அறிவியல் துறைக்கு பெயர்போன நகரமாக விளங்கியது. அரச திறைசேரியிலிருந்து ஆண்டுதோறும் மூன்றிலொரு பகுதியை கல்வி, அறிவு விருத்திக்காக செலவிட்டார். பேரரசின எல்லாப் பகுpதிகளிலும் பாடசாலைகளும் கல்விக்கூடங்களும் இவரால் நிறுவப்பட்டன. குர்துதபா நகரில் இவரால் நிறுவப்பட்ட பல்கலைக்கழம் நீண்டகாலம் பெயர் போன பல்கலைக்கழகமாக விளங்கியது. கீழைத்தேய நாடுகள் மாத்திரமன்றி, ஐரோப்பிய நாடுகளின் யூத, கிருஸ்தவ மாணவர்களும் கூட இங்கு வந்து தமது அறிவுத்தாகத்தைத் தீர்த்துக்கொண்டனர். கிருஸ்தவ உலகின் தலைவராக விளங்கிய பாப்பரசர் இரண்டாம் ஸில்வெஸ்டர் இப்பல்கலைக்கழகத்தில் கல்விபயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இரண்டாம் அப்துர்ரஹ்மானைத் தொடர்ந்து ஆட்சிபீடமேரிய இரண்டாம் ஹகமும் அறிவுத்துறைக்கு பெரும் பங்காற்றினார். அவரது காலத்தில் குர்துபா பல்கலைக்கழகம் உலகில் சிறந்த பல்கலைக்கழகமாக விளங்கியது. தலைநகரில் மாத்திரம் 27 பாடசாலைகளை இவர் அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது காலத்தில் இஸ்பெயினில் வாழ்ந்த ஒவ்வொருவரும் எழுத வாசிக்கத் தெரிந்தோராக மாறும் அளவுக்கு அங்கு பண்பாட்டுப் பாரம்பரியம் மிக்கதாக மாறியிருந்தது. கலீபாவின் சொந்த நூல் நிலையத்தில் மாத்திரம் சுமார் 4 இலட்சம் நூல்கள் காணப்பட்டன. நூல்களது பெயர்பட்டியல் மாத்திரம் 44 தொகுதிகளில் தொகுக்கப்பட்டிருந்தன. இவரது காலத்தில்  குர்துபாவில் மாத்திரம் 70 நூல் நிலையங்கள் இருந்துள்ளன.

   அவரைத் தொடர்ந்து ஆட்சிபீடமேறிய கலீபா இரண்டாம் ஹிஷாமின் காலத்திலும் அறிவியல் துறைக்கு கூடுதல் ஊக்கமளிக்கப்பட்டது. அடுத்து முஹம்மத் பின் அபூ ஆமிர் என்பவார் அறிவியலுக்கு பெரும் ஊக்கத்தை வழங்கினார். வானியல், கணிதம், மருத்துவம் போன்ற அறிவியல் துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கிய அவர் வானியலையும் சோதிடத்தையும் கற்பிப்பதற்காகவென தனிக்கல்லூரி ஒன்றையும் நிறுவினார்.

     இவரைத்தொடர்ந்து ஆட்சிசெய்த சிற்றரசுகளின் ஆட்சியாளர்கள் பலரும் அறிவுத்துறைக்கு அரிய பங்காற்றினர்.  இதன் விளைவாக அன்றைய இஸ்பானியாவின் செவில்லி, கிரநாடா, ஸரகோஸா ஆகிய நகர்கள் பண்பாட்டுக்கும் நாகரிகத்துக்கும் புகழ்பெற்ற நகர்களாக விளங்கின. இதன் விளைவாக இஸ்பானியாவை மையமாகக் கொண்டு பல புகழ்மிக்க அறிவியலாளர்;கள் குழாம் தோற்றம் பெற்றது. இஸ்லாத்தின் உத்வேகத்தைப் பெற்று வளர்ச்சியடைந்த அந்த குழவானது, சுமார் 1500 வருடங்களுக்கு முன்னர் கிரேக்கர்கள் எட்டியிருந்த சிந்தனை வளர்ச்சிக்கு புத்துயிரூட்டுவதற்கும் மனதகுலம் இதுவரையில் எட்டியிராத சாதனைகளை விஞ்ஞான உலகில் எய்துவதற்கும் முயன்றது.

    இதே காலப்பகுதியில் ஐரோப்பாவில் உரோம, பாரசிக நாகரிகங்கள் வழுவிழந்திருந்தன. கி.பி. 529 இல் அரச ஆணையொன்றின் காரணமாக ஐரோப்பாவின் எதென்ஸ் நகரில் காணப்பட்ட கல்லூரி மூடப்பட்டது. பின் கிருஸ்தவ ஐரோப்பாவில் கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் தான் மீண்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இவையும் இஸ்லாமிய கல்விக்கூடங்கள், கல்வி மரபை பின்பற்றியே ஆரம்பிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  முஸ்லிம் உலகில் வக்பு சொத்துக்களைக் கொண்டே கல்விக்கூடங்கள் பரிபாளிக்கப்பட்டன. இதே அமைப்பைப் பின்பற்றியே ஐரோப்பிய கல்விக்கூடங்கள் தாபிக்கப்பட்டன. இவ்வக்பு சிந்தனை பிரான்ஸில் 'பொன்டேஷன்' எனவும், இங்கிலாந்தில் 'தர்ம நிதியம்' என்ற பெயரிலும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

     இருண்ட யுக கிருஸ்தவ ஐரோப்பாவில் மிகச்சிலரே கல்வியறிவு பெற்றிருந்தனர். அவர்களும்கூட பெரும்பாலும் மதகுருமாராகவே காணப்பட்டனர். இருண்டகால ஐரோப்பாவில் கிருஸ்தவ திருச்சபை பல்வேறு சமுகங்கள் மீது தனது அதிகாரத்தைப் பிரயோகித்தது. அவர்களைத் தேக்கநிலையில் விலங்குகளால் பிணைத்திருந்தபோது, இஸ்லாம் பல்துறை சார் அறிவியல் கலாசாரமொன்றைக் கட்டியெழுப்பிக்கொண்டிருந்தது. கலாசாரம், விஞ்ஞான அறிவு என்பவற்றின் மறுமலர்ச்சிக்கும் கலைத்துறை, தொழில்நுட்பம் என்பவற்றின் ஆக்கத்திறனுக்கும் அது வழிகோலியது.

     கலாநிதி கஸ்டர் லீ பொன் என்பவர் 'இஸ்லாம் மற்றும் அரபு வரலாறு' எனும் நூலில் இது பற்றிக் கூறும்போது, ' நூற்கள் மற்றும் நூலகங்கள் என்பனவற்றை ஐரோப்பியர் அறிந்திராத அந்தக் காலப்பகுதியில் பல இஸ்லாமிய நாடுகளில் நூல்களும் நூலகங்களும் பெருகிக் காணப்பட்டன. பக்தாதில் அமைந்திருந்த 'பைத்துல் ஹிக்மா'வில் 40 இலட்சம் நூல்கள் இருந்தன. கெய்ரோவில் சுல்தானியா நூல் நிலையத்தில் 30 இலட்சம் நுல்கள் இருந்தன. இஸ்பெயினில் முஸ்லிம் ஆட்சியின் கீழ் ஆண்டுதோரும் 70000 - 80000 நூல்கள் வெளியிடப்பட்டன' (தொகுதி 3. பக் -329)

    இந்நிலையில், 'பூமி சூரியனைச் சுற்றி வருகின்றது' என்ற கொப்பனிகஸின் கருத்தை உறுதிப்படுத்தியமைக்காக இக்காலத்திலேயே கலிலியோ கலிலி பைபிலுக்கு முரணாக கருத்துக்கூறுவதாகக் கூறி திருச்சபையினரால் நிந்திக்கப்பட்டார். 'கலிலியைச் சேர்ந்த கலிலியோ ஆகிய நான், எனது 70 ஆவது வயதில் (கி.பி.1633) உங்கள் திருநிலை (பாப்பரசர் மற்றும் ஆயர்கள்) முன்னால் மண்டியிட்டு, புனிதக்கிரந்தங்களை என் கண்முன்னால் வைத்துக்கொண்டு, 'பூமி சுற்றிவருகின்றது' என்ற அறிவீனமான கருத்தை வெறுக்கத்தக்க ஒரு போலி நம்பிக்கையாகக் கருதுவதுடன், இதனை நான் மறுதலித்து, அதற்காக வருந்தும் இவ்வேளையில், புனித நூலை என் கைகளில் எடுத்து முத்தமிடுகிறேன்' என பகிரங்கமாக பிரகடணம் செய்ய அவர் நிர்ப்பந்திக்கப்பட்டார். (Western Civilisation Through Muslim Eyes. P.71-72)

    இந்நிலையில், 'அந்நிகழ்வுக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னரே முஸ்லிம் வானிவியல் விற்பன்னராகவும் கணித மேதையுமாக  விளங்கிய உமர் கையாம் ஈரானுக்கு ஜலாலி நாட்காட்டியை வழங்கினார். அது இன்றும்கூட எமது புத்தாண்டை சரியான தினத்தில் மட்டுமன்றி, சரியான மணியில், நிமிடத்தில், நொடியில் ஆரம்பிப்பதற்கு உதவி வருகின்றது. இந்நொடியில் பூமி ஒரு கோளப்பாதையை முடித்துக்கொண்டு, சூரியனைச்சுற்றி மற்றொரு பாதையை ஆரம்பிக்கிறது. உமர்கையாமை ஒரு கவிஞராகவே மேலை நாட்டு மக்கள் கருதி வருகின்றனர். ஆனால் அவரது அறிவு ஞானத்தைப் பயன்படுத்திக்கொண்டால், அவர்கள் தம் வசமிருக்கும் ஜூலியன் நாட்காட்டியின் கிரக மாற்றங்களையும், 11 நாட்களின் இழப்பினையும் தவிர்த்துக்கொண்டிருக்க முடியும்' என்ற கருத்தினை ஸையித் முஸ்தபா ருக்னி மூஸாவி லாரி அவர்கள் தனது Western Civilisation Through Muslim Eyes         (   P.72)  எனும்  நூலில் குறிப்பிடுகிறார்.

     ஐரோப்பிய மருத்துவ மேதை 'ரோஜர் பேக்கர்' (கி.பி. 1214 - 1292) காலப்பகுதியில்) இங்கிலாந்தின் முதலாவது எட்வர்ட் மன்னனது ஆட்சியின்போது விஞ்ஞானத்தில் பரீட்சார்த்தமான ஆராய்ச்சிகளைக் கைவிடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார். அரிஸ்டோட்டிலின் நூற்கள் குறித்து பாரிசில் அவர் நிகழ்த்திய உரைகள் இந்த ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு வழிகோலியிருந்தன. ஒக்ஸ்போர்டிலிருந்து அவர் மீண்டும் பாரிசுக்குத் துரத்தியடிக்கப்பட்டு திருச்சபையின் கண்காணிப்பில் விடப்பட்டார். திருச்சபையின் பார்வை குறுகியதாக இருந்து வந்ததுடன் அவர் முன்வைக்கும் விஞ்ஞானப் பொக்கிஷங்களின் மதிப்பைக் கண்டுகொள்ள முடியாத அளவிற்கு மதவெறி அவர்களது கண்களை மறைத்திருந்தது.

  அவர், 'சாத்தானிய ரசவாதத்தில் விளையாடும் ஒரு சிறு பிள்ளை' என நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். ' இந்த சூனியக்காரரன் கை துண்டிக்கப்பட வேண்டும்' என்றும், 'இந்த, முஸ்லிம் நாடு கடத்தப்பட வேண்டும்' என்றும் கூக்குரலிடுவதற்கு மக்கள் கும்பல் தூண்டப்பட்டனர்.

    ஆயினும், நவீனகாலத்தில் ஐரோப்பிய மறுமலர்ச்சியின் தந்தை என பாராட்டப்படும் இவரைப்பற்றி பிரித்தானியக் கலைக்களஞ்சியம் அறிமுகப்படுத்தும் போது, 'சந்தேகமற அரேபியக் கலைகளில் புலமை பெற்றவர். தனது கோட்பாடுகளுக்கான வித்துக்களை அரேபியக் கலைகளில் இருந்தே பெற்றுக்கொண்டார்' என குறிப்பிடுவது நோக்கத்தக்கதாகும். முஸ்லிம் கலைகளையும், ஆய்வு வழிமுறைகளையும் ஐரோப்பாவுக்கு கொண்டு சென்ற தூதுவர் என இவரை 'பிரிபோல்ட்' அறிமுகம் செய்கின்றார்.

     அரபிகளது அறிவுப்பாரம்பரியத்தினைப் பெற்றிடுவதற்காக அன்றைய அறிஞர்கள் என கருதப்பட்ட அனைவரும் அரபு மொழியை கற்றிருந்தனர். இன்று ஆங்கில மொழி பெற்றிருக்கும் அந்தஸ்தை அன்று அரபு மொழி பெற்றிருந்தது. அறிவியல் கருவூலங்கள் யாவும் அரபு மொழியிலேயே காணப்பட்டன. எனவே, தன்னை அறிஞராக அறிமுகப்படுத்தும் எவரும் இன்று ஆங்கில மொழியில் பாண்டித்தியம் பெறுவது போல் அன்று அரபு மொழியை கற்றுக்கொண்டனர். எனவேதான், புகழ்பூத்த ஐரோப்பிய அறிஞாகளுள் ஒருவரான கிரிகோரி என்பவர் 50 வருடங்கள் கொரடோவாவில் தங்கி அரபு மொழியில் புலமை பெற்று 85 அரபு நூல்களை இலத்தீன் மொழிக்கு மொழிமாற்றம் செய்துள்ளார்.

     இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்தை ஐரோப்பாவுக்கு வழங்கவென தென் பிரான்ஸில் 12, 13 ஆம் நூற்றாண்டு காலப்பகுதிகளில் பல நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையங்களில் கிருஸ்தவர்களும் யூதர்களும் கூட மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இம்மொழிபெயர்ப்புப் பணி இடை நிறுத்தமின்றி 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரையில் தொடர்ந்தன. 

    அந்தவகையில், விஞ்ஞானம், கணிதம், தொழிநுட்பம், தத்துவஞானம் ஆகிய அனைத்துத் துறைகளினதும் நவீன முன்னேற்றத்துக்கு இஸ்லாம் பல்வேறு வழிகளிலும் வழங்கி வந்துள்ள அடிப்படையான பங்களிப்புகளை தற்கால ஐரோப்பிய, அமேரிக்க வரலாற்றாசிரியர்களும், நடு நிலை நின்று ஆய்வு மேற்கொள்ளும் அறிஞர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

      நபி (ஸல்) அவர்களது காலம் முதல் தொடக்கிவைக்கபட்ட அறிவியல் பணிகள், குலபாஉர் ராஷிதீன்களது காலத்தில் தொடர்ந்து, உமையாக்களது காலத்தில் வித்தியாசமான போக்கை அடைந்து, அப்பாசியர்களது ஆட்சிக்காலத்தில் உச்ச நிலையை அடைந்து உலகம் முழுக்க அறிவொளி பரப்பிய பின்னர், கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மங்கோலியர் படையெடுப்பைத் தொடர்ந்து சிதைவடைந்து, தேக்கமடைந்து, வீழ்ச்சியடையத் துவங்கியது. அது இஸ்பானியா, சிஸிலியின் ஊடாக 15 ஆம் நூற்றாண்டாகின்றபோது ஐரோப்பாவை அடைந்து அங்கு விருட்சமாக வளரவாரம்பிக்கிறது.

     முஸ்லிம் சிசிலியும், முஸ்லிம் இஸ்பானியாவும் 11 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் கிருஸ்தவர் வசமானது. அங்கு நிறுவப்பட்டிருந்த கல்விக்கூடங்கள், நூல் நிலையங்கள், வானோக்கு நிலையங்கள் என்பனவற்றின் ஏக உரிமையாளர்களாக மாறினர். அவற்றை முன்மாதிரியாகக் கொண்டு கிருஸ்தவ ஐரோப்பாவில் கல்விக்கூடங்களை நிறுவினர். கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸில் மொன்ட்பிலியர், பரிஸ் ஆகிய இரு நகர்களில், இத்தாலியில் சலேனா, பொலோக்னா எனும் இரு நகர்களிலும் கல்வி நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டன. புவியியல் ரீதியாக பிரான்ஸ் இஸ்பெயினுக்கும், இத்தாலி சிசிலிக்கும் அயல் நாடுகளாகும். அங்கு தோற்றுவிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் அரேபிய மருத்துவம், கணிதம், விஞ்ஞானக் கலைகள் போதிக்கப்பட்டன. இஸ்பெயினின் கொர்டோவோ, கிரனாடா, டேலேடோ போன்ற முக்கிய நகர்களில் காணப்பட்ட கல்விக்கூடங்களில் கல்வி பயின்ற பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து முதலான நாடுகளிலிருந்த மாணவர்களே ஐரோப்பாவின் இப்புதிய போதனா நிலையங்களில் போதனாசிரியர்களாக பணியாற்றினர். முஸ்லிம் இஸ்பானியாவில் காணப்பட்ட யூத, கிருஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் தாம் வெளியேறிச் சென்ற ஐரோப்பிய நாடுகளிலெல்லாம் கல்விக் கூடங்களை ஏற்படுத்தினர். இவ்வாறு வெளியேறிச் சென்ற ஒரு குழு இங்கிலாந்தில் வில்லியம் என்பவருடன் சேர்ந்து உருவாக்கிய ஒரு கல்வி நிறுவனமே ஒக்ஸ்போர்ட் கல்வி நிறுவனமாகும். அங்கு அராபிய விஞ்ஞானக் கலைகள் போதிக்கப்பட்டன.

      ஐரோப்பிய கல்விப்பாரம்பரியத்தைத் தோற்றுவிக்க முஸ்லிம் நாடுகளில் கல்விபயின்ற அல்லது அவர்களது மாவர்களாகத் திகழ்ந்தவர்கள் முன்னின்று உழைத்தனர். இஸ்பெயினில் கல்விகற்ற விலேனரும், ரேமன்ட் என்பவரும் பிரான்ஸில் மொன்பிலியர் கல்லூரியிலும், கொரடோவாவில் கற்ற நோவோராவைச் சேர்ந்த கம்பனூஸ் என்பவர் வியன்னாவிலும், கொர்டோவாவில் கல்வி பயின்ற டார்னியல் டி மோரலி என்பவர் ஒக்ஸ்போர்டிலும் போதனாசிரியர்களாக இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

     இஸ்லாத்தைப் பிழையாக அறிமுகப்படுத்தத் திட்டமிட்ட கீழைத்தேய ஆய்வாளர்களுள் சிலர் நடுநிலை தவறி, முஸ்லிமல்லாதவர் மத்தியில் மட்டுமன்றி முஸ்லிம்களின் மத்தியிலும் கூட இஸ்லாம் அறிவியலுக்கு எதிரானது! முஸ்லிம்களது ஆட்சிக்காலம் இருண்ட யுகம்! என்ற கருத்துக்களை தூவி வருகின்றனர். மாத்திரமன்றி, முஸ்லிம்களது அறிவுப்பணியை கிரேக்க, பாரசிய அறிவு முயற்சிகளின் மொழிமாற்றம் என குறை மதிப்பீட்டை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இஸ்லாம் உலகிற்கு வழிகாட்டத் தகுதியற்றது. அது ஆன்மீக மார்க்கம் என்ற சிந்தனையை முன்;வைத்துள்ளதை அவதானிக்கலாம். அதேபோன்று, இஸ்லாம் முதலில் சமயமாகவும் அதனையடுத்து அரசாகவும் தொடர்ந்து நாகரிகமாகவும் விரிவடைந்தது என்ற கருத்தையும் கூறியுள்ளனர்.

     இதற்கு விளக்கமளிக்கும் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள், 'ஷரீஆ இன்றி பகுத்தறிவு நேர்வழி பெற முடியாது. பகுத்தறிவின்றி ஷரீஆ தெளிவாக விளங்காது. பகுத்தறிவு அத்திபாரத்தையும் ஷரீஆ கட்டிடத்தையும் போன்றது. கட்டடமில்லாத அத்திபாரம் பயனளிக்காது. அத்திவாரமில்லாத கட்டடமும் உறுதிபெறாது' என குறிப்பிடுகிறார். எனவே, இஸ்லாம் பகுத்தறிவுக்கு இடமளிக்காத மார்க்கம் என்பது எவ்வகையிலும் வரலாற்றுக்கு முரணான குற்றச்சாட்டாகும்.எனவேதான், 'மேற்கத்தைய உலகம் ஆழமான அறிவைப் பெற விரும்பியபோது கிரேக்க மூலாதாரங்களை நோக்காது அரபு மூலாதாரங்களை முதலில் நோக்கியது' என்ற கருத்தை 'ஜோர்ஜ் சார்ட்டன்' என்பவர் குறிப்பிடுகிறார்.

   நவீன கைத்தொழில் நிலைமாற்றம், விஞ்ஞான முன்னேற்றம், தத்துவஞானம் என்பவற்றிலும் மேற்கு நாகரிகம் இஸ்லாத்திற்கு கடன்பட்டுள்ளது என்பதை நடுநிலைநின்ற மேலைத்தேய ஆய்வாளர்கள் பலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 
உலக நாகரிகங்களிடயே இஸ்லாமிய நாகரிகத்தின் செல்வாக்கு

      நாகரிகம் என்று கூறும்போது, நகர ஒழுக்கம், நகர மாந்தரின் தன்மைகள் என்பன இப்பதத்தின் பொருள் என்பதை சென்னைப்பல்கலைக்கழக பேரகராதி பொருள் தருகின்றது. நகரவாழ்வின் விளைவுகள் அல்லது பெறுபேறுகளையே நாகரிகம் குறிப்பதாக இப்னு கல்தூன் கருதுகிறார்.

   'நாகரிகம் என்பது ஒரு இனத்தின் அல்லது வர்க்கத்தின் பண்புகளைக் குறிக்கும் பொதுச்சொல். அது கண்களுக்குப் புலப்படக்கூடிய சடப்பொருட்களின் அபிவிருத்தியையும், பொதுவாழ்வின் முன்னேற்றத்தையும் காட்டுகிறது' என கலாநிதி அமீர் ஹஸன் சித்தீகி குறிப்பிடுகிறார். பொதுவாக, நாகரிகம் என்பது சமுக வளர்ச்சியின் முன்னேற்றமடைந்த முக்கிய கட்டங்களைக் காட்டுகிறது. நடை, உடை, பாவனைகள், அறிவியல் முயற்சிகள், அழகியற் கலைகள், சட்டம், சமூகப் பழக்கவழக்கங்கள் முதலியவற்றை உள்ளடக்கிய மனித இனத்தின் வளர்ச்சியை நாகரிகம் எனும் பதம் சுட்டுவதாக சமுகவியலளர்கள் கருதுகின்றனர்.

     இந்தவகையில், வரலாற்றுக் காலங்களில் பல நாகரிகங்கள் இருந்தன. அவற்றுள் கிரேக்க, உரோம, பாரசீக, இந்திய, சீன நாகரிகங்கள் இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன்பே செல்வாக்கு செலுத்தியுள்ளன. ஆயின், அவை துவண்டு போயிருந்தவேளை கி.பி. ஏழாம் நூற்றாண்டு துவங்கிய இஸ்லாமிய நாகரிகமானது அனைத்துலக மனித சமுகத்திற்கும் புத்துயிர் வழங்கியிருப்பதை அவதானிக்கலாம்.

    இஸ்லாமிய கலாசாரமும், நாகரிகமும் மனித வாழ்வின் முன்னேற்றத்தை இலட்சியமாகக் கொண்டது. இஸ்லாம் விதைந்துரைத்துள்ள முன்மாதிரியான வாழ்க்கைப் போக்கையே இஸ்லாமிய கலாசாரம், இஸ்லாமிய நாகரிகம் எனும் பதங்கள் சுட்டி நிட்கின்றன. அதன்றி, ஒரு குறித்த கால முஸ்லிம் சமுகம் உரிமையாக்கிக் கொண்டிருந்த கலாசாரத்தை அல்லது நாகரிகத்தை இஸ்லாமிய கலாசாரம், இஸ்லாமிய நாகரிகம் எனும் பதங்கள் குறிப்பதில்லை. இஸ்லாமிய சிந்தனைப் போக்கிற்கும் உளப்பாங்கிற்கும், வாழ்க்கைப் போக்கிற்கும் முழுமையாகவே இயைபான நாகரிகம் மட்டுமே இஸ்லாமிய நாரிகம் என்றழைக்கப்படத் தகுதியானவையாகும்.

    உலகின் பிரசித்திபெற்ற நாகரிகங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு முக்கிய பண்பு அடிப்படையாக அமைந்திருந்தது. அப்பண்புதான் அந்நாகரிகத்தின் உந்துசக்கியாகவும் சவால்களை எதிர்கொள்ளும் கேடயமாகவும் அதன் வளர்ச்சிக்கான நடைபாதையாகவும் அமைந்திருந்தது.

    கிரேக்க நாகரிகத்தின் அடிப்படைப்பண்பு அறிவியலாகும். ஆதலால் அந்நாகரிகம் வளர்ச்சி கண்டபோது அப்பண்பை அடியொட்டி கணிதவியல், மருத்துவவியல், இரசாயனவியல் முதலான அறிவியற் கலைகளும் அழகியற் கலைகளும் வளாச்சி கண்டன.

    உரோம நாகரிகத்தின் அடிப்படைப் பண்பு இராணுவப் பலமாகும். அதன் மலாச்சிக் காலத்தில் போர்ப்பயிற்சி முறைகள் விருத்திகண்டதையும் பெரும் படைகள் உருவாக்கப்பட்டதையும் காண முடிந்தது. இந்த இராணுவ பலத்தைப் பிரயோகித்து ஸ்தீரமான ஆட்சி அமைக்கப்பட்டது. அயல் நாடுகளைக் கைப்பற்றி உரோம சாம்ராஜ்யம் உருவாக்கப்பட்டது. அவற்றின் நிருவாகத்தை மேற்கொள்ள உள்ளுராட்சி மன்றங்கள், உரோமன் டச்சுச் சட்டங்கள் என்பனவும் அறிமுகப்படுத்தப்பட்டன.

    இந்தியாவில் தோன்றிய நாகரிகம், துறவை அடிப்படைப் பண்பாகக் கொண்டிருந்தது. இதன் விளைவாக உடலியல் தேவைகள் புறக்கணிக்கப்பட்டு, ஆசைகள், உணர்வுகள் அடக்கப்பட்டு துறவு மார்க்கம் வளர்ச்சி கண்டதுடன் ஆன்மீகம் பற்றிய அறிவு வளர்சி கண்டது. இஸ்லாமிய நாகரிகத்தைப் பொருத்தவரையில், அது ஆன்மீக எழுச்சியை மையமாக் கொண்டு கட்டி எழுப்பப்பட்டுள்ளது. ஆயினும், மனித வாழ்வின் உலகியல் தேவைகளைக் கருத்தில் கொண்டு மனித வாழ்வுடன் தொடர்புடைய அனைத்துத் துறைகளையும் அது வளர்த்துச் செல்கின்றது. அது ஆன்மீகத்தை உலகியலுக்காகவோ, உலகியலை ஆன்மீகத்துக்காகவோ அர்ப்பணித்து எந்த ஒரு தனித்துறைக்கும் முக்கியத்துவம் வழங்கவில்லை. இதற்காகவே, அது இஸ்லாமிய சமுகத்தை நடு நிலை பேணும் சமுகமாக வழி நடத்திச் செல்கின்றது.

        மேநாட்டு நாகரிகத்தை வளர்க்கத் துணை செய்த விஞ்ஞானக் கல்வி, பகுத்தறிவு ஆகிய இரண்டையும் இஸ்லாமிய நாகரிகமும் தமது வளர்ச்சிக்கு உதவும் ஆயுதமாகக் கொண்டுள்ளது. இதனால், இஸ்லாமிய நாகரிகம் வளர்ச்சியுற்றிருந்த காலத்தில் ஆன்மீகக் கலைகளுடன் விஞ்ஞானக் கலைகளும் பெரு வளர்ச்சி கண்டன.

      இஸ்லாத்தின் நாகரிகம் மூட நம்பிக்கைகளின் மீது கட்டியெழுப்பப்படாது இயற்கை நியதிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதால் மேற்குலகில் போன்றே சமயப் போதனைகளுக்கும் விஞ்ஞானத்துக்குமிடையே முரண்பாடு, பகைமை, பொறாமை, மோதல் என்பன தோன்றவில்லை. பதிலாக ஒன்றின் வளர்சிக்கு மற்றொன்று துணையாக அமைந்துள்ளது.

       வாழ்வின் அனைத்துத் துறைகளும் சமய சிந்தனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளதால் சமய சார்பற்ற சிந்தனைப்பாங்கு இங்கு வளர்ச்சியடையும் சூழல் உருவாகவில்லை. இதனால், சமய சார்பற்றது என்று மேலை நாடுகளில் கருதப்படும் அரசுக்கும் சமய தாபனங்களுக்கும் இடையே அங்கு வளர்ந்தது போல இஸ்லாமிய நாகரிகத்தின் தோற்ற காலத்திலோ, வளர்ச்சிக் காலத்திலோ அவற்றுக்கிடையே பகைமை வளரவில்லை. பதிலாக அரச தாபனம், சமய தாபனங்களை வளர்க்கத் துணையாகியது.

     பொதுவாக, எந்தவொரு நாகரிகமும் சுயமாக தன்னிலை கொண்டு வளர்வதில்லை. மாறாக, அவை கடந்து சென்ற நாகரிகங்கள், நாகரிகத்தின் கருவறையிலிருந்தே அது பிறக்கிறது. இதற்கு இஸ்லாமிய நாகரிகமும் விதிவிலக்கன்று. முன் கடந்து சென்ற கிரேக்க, உரோம, பாரசீக, இந்திய நாகரிகங்களில் காணப்பட்ட நல்லவைகளை பெறுவதில் அது தயங்;கவில்லை. ஆனால், அவற்றை கண்மூடித்தனமாக ஏற்றுக்காள்ளாமல், அல்குர்ஆன், அல்ஹதீஸ் வழங்கும் சிந்தனை, இலட்சியம், கண்ணோட்டம் என்பவற்றிற்கு அவற்றை இயைபாக்கியது. உன்னதமானதொரு உயர் நிலைக்கு அவற்றை வளர்த்துத் தனதாக்கியதன் மூலம் இஸ்லாமிய நாகரிகமும், பண்பாடும் தனித்துவம் வாய்ந்தனவாக மிளிர்வதனைக் காண முடிகிறது.

     எனவேதான், விஞ்ஞானத் தொழிநுட்பத்துறைகளிலும் ஒப்புவமையற்ற விதத்தில் வளர்ச்சி கண்டுள்ள இன்றைய நவீன ஐரோப்பிய நாகரிகத்தில் புலப்படும் இஸ்லாமிய நாகரிகத்தின் செல்வாக்கு குறித்து பல தரப்பினராலும் ஆராயப்பட்டுள்ளது. அவர்களுள் சிலர் ஐரோப்பிய அறிஞர்கள் முஸ்லிம் கல்வித்தாபனங்களுடன் கொண்டிருந்த தொடர்பை எடுத்துக் காட்டி, இஸ்லாமிய நாகரிகத்தின் செல்வாக்கை எடுத்துக்காட்டுகின்றனர்.

      'அரேபியர்களின் பங்களிப்பு இன்றேல் ஐரோப்பியரின் நாகரகம் தோன்றியிருக்க முடியாது. இஸ்லாமிய நாகரிகத்தின் செலடவாக்கை இனங்காண முடியாத எந்தவொரு துறையும் ஐரோப்பிய நாகரிகத்தில் இல்லை குறிப்பாக, விஞ்ஞான மனப்பாங்கிலும், இயற்கை விஞ்ஞான மனப்பாங்கிலும், இயற்கை விஞ்ஞானத்திலும் தெளிவாகக் காண முடியும்' என்ற கருத்தை ஆர்.பிரிபோல்ட் என்பவர் 'த மேகிங் ஒப் ஹியுமனிடி' எனும் நூலில் முன்வைத்துள்ளார்.

      இஸ்லாமிய நாகரிகம், ஐரோப்பிய நாகரிகத்தின் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான உதவி புரிந்துள்ளது என்ற கருத்தைக் கொண்டிருக்கும் கீழைத்தேய ஆய்வாளர்களில், 'ஜோர்ஜ் ஸார்டன்' என்பவரும் ஒருவராவார். அவர் தனது 'Introduction to the history of Science"எனும் நூலில் மனித இன வரலாற்றை 50 ஆண்டுகளைக் கொண்ட அலகுகலாக வகுத்து, அவற்றுக்கு அவ்வக்காலங்களில் புகழ் பெற்றிருந்த பாராட்டத்தக்க அறிஞர்களின் பெயர்களைச் சூட்டியுள்ளார்.

    கி.மு. 450-400 இற்கு இடைப்பட்ட 50 ஆண்டு காலத்திற்கு 'பிலேட்டோ காலம்' என்று பெயரிட்டுள்ளார். இதேபோல் அடுத்தடுத்து வந்த காலங்களுக்கு அரிஸ்டோட்டில் காலம், இயூக்லிட் காலம் என கிரேக்க அறிஞர்களின் பெயர்களைச் சூட்டியுள்ளனர். முஸ்லிம் ஆட்சிக் காலப்பிரிவில் கி.பி. 750 - 800 இடைபட்ட காலத்திற்கு, இரசாயனவியற் துறை அறிஞரான ஜாபிர் பின் ஹையானின் ஞாபகர்த்தமாக அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவ்வாறே, பின்வந்த காலங்களுக்கு, குவாரிஸ்மி, அர்ராஸி, மஸ்ஊதி, பீரூனி போன்ற மற்றும் பல இஸ்லாமிய அறிஞர்களின் பெயர்களைச் சூட்டியுள்ளார்.

     சர்வதேச வானவியற் கழகம் 1935 இல் சந்திரனின் தரைத்தோற்றத்தை இனங்காட்ட விஞ்ஞான, அறிவியல் துறைக்கு பணிபுரிந்த அறிஞர்கள் 609 பேரின் பெயர்களைச் சூட்டியது. அவர்களுக்குள் 13 பேர் முஸ்லிம் விஞ்ஞானிகளாவர் என்பது குறிப்பிடத்தக்கது.

     மேற்குறித்த தகவல்கள் மனித நாகரிக வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் ஆற்றிய பணிகளை நடுநின்று ஆராய்வோர் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதையே காட்டுகின்றது.

     இஸ்லாமிய இராஜ்ய விஸ்தரிப்பு காரணமாக கீழைத்தேய உரோம சாம்ராஜ்யத்தின் ஆட்சிக்குற்பட்டிருந்த சிரியா, பலஸ்தீனம், எகிப்து, வட ஆபிரிக்கா கரையோரங்கள், சிசிலி, இஸ்பெயின் என்பனவற்றில் இஸ்லாமிய குடியரசு உதயமாகி ஒரு நூற்றாண்டுக்குள் முஸ்லிம்களின் ஆளுகைக்குட்பட்டன. அங்கு வாழ்ந்த குடிமக்களில் ஒரு தொகுதியினர் இஸ்லாத்தின் பால் ஈhக்கப்பட்ட போதும், யூத, கிருஸ்தவ மதத்தைச் சார்ந்த சிறு தொகுதியினர் தமது பண்டைய கலாசாரத்தைப் பேணி வாழ்ந்தனர். அத்தோடு, இஸ்பெயினிலும் சிசிலியிலும் முஸ்லிம்கள் நீண்டகாலம் ஆட்சி செலுத்தியமையினால் ஐரேர்பியர் முஸ்லிம்களின் பொருளாதாரம், சமுகவியல், கலை, கலாசாரம் என்பவற்றுடன் தொடர்பு கொள்ள வழியேற்பட்டது. புவியியல் ரீதியாக இஸ்பெயின் பிரான்ஸூக்கு அருகிலும், சிசிலி இத்தாலிக்கு அருகிலும் இருந்தமை முஸ்லிம் உலகின் செல்வாக்கு ஐரோப்பியரின் பல்வேறு துறைகளிலும் வலுவடைய உதவியது.

      அதேபோன்று, ஐரோப்பிய போர்வீரர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் நேரடியாக தொடர்பு கொள்வதற்கு சிலுவை யுத்தங்கள் வாய்ப்பளித்தன. இதனால் இஸ்லாமிய நாகரிகத்தின் பலன்களை நேரடியாகவே அனுபவிக்கும் வாய்ப்பினை அவர்கள் பெற்றனர்.

     உரோமப்பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஐரோப்பாவின் நாகரிக வளர்ச்சி குன்றியது. அது முதல் ஐரோப்பிய மீளெழுச்சிக் காலம் வரையான வரலாற்றினை வரலாற்றாசிரியர்கள் 'இருண்;ட காலம்' என்றே வர்ணிப்பர். இக்காலப்பகுதியல் இஸ்லாமிய உலகு தனது நாகரிக வளர்ச்சியின் உச்ச நிகை;கே சென்றிருந்தது.

      வளர்ச்சியடைந்த நாகரிகம் ஒன்றும், பின்தங்கிய நாகரிகம் ஒன்றும் பக்கத்தில் இருந்தால் முன்னையதன் தாக்கத்துக்கு பின்னையது உட்படாது தன்னைக் காத்துக்கொள்ள முடியாது என்பதை வரலாற்றாசியர்கள் எவரும் ஏற்றுக்கொள்வர். இன்று சீரழிந்து போயுள்ள ஐரோப்பிய நாகரிகம் பின்தங்கிய நாகரிகங்களில் செலுத்தும் செல்வாக்கினை எவராலும் கட்டுப்படுத்த முடியாது.  ஐரோப்பிய கல்விகூடங்களில் கல்விபயிலும் ஆசிய ஆபிரிக்க மாணவர்கள் தமது நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கக்கூடியவர்களாக இன்று இருப்பதை எவராலும் மறுக்க முடியாது. இதே போன்று, அன்று இருண்ட யுகத்தில் வாழ்ந்த மக்களிடையே முஸ்லிம் கல்விக்கூடங்களில் கல்வி பயின்ற ஐரோப்பிய மாணவர்கள் அங்கு சென்று இஸ்லாமிய நாகரிகத்தைப் பரப்பினர். இந்தப்பின்னணியிலேயே ஐரோப்பிய நாகரிகத்திலேயும், அன்றிருந்த ஏனைய நாகரிகங்களிடையேயும் இஸ்லாமிய நாகரிகம் செல்வாக்கு பெறுவதற்கு ஏதுவாகியது.

    கிரேக்க நாகரிகத்திலோ, ஏனைய நாகரிகங்களிலோ கண்டிராத பல அம்சங்களை இஸ்லாமிய நாகரிகம் உலகிற்கு வழங்கியது.

ஒழுக்க வாழ்வின் முன்னோடிகள்

    ஒழுக்க ரீதியல் நோக்கினாலும், இஸ்லாத்துக்கு முன்னைய சூழ்நிலையில் அரபு சமுகத்தில் மக்கள் பொதுவாக, ஒழுக்க ரீதியாக  பாதாளத்தில் இருந்தனர். என்னென்ன தீய குனங்கள் வேண்டுமோ, அத்தனைக்கும் மொத்த வடிவமாகவே அறியாமை கால சமுகம் விளங்கியது. அரபு சமுகத்தில் மாத்திரமல்ல, அன்றைய  உலக சமுகங்களிடையே இறைத்தூதுகள் புறந்தள்ளப்பட்டு, மறக்கடிக்கப்பட்டு ஒழுக்க விழுமியங்கள் என்ற பெயரில்  மக்கள் மத்தியில் இருந்தது. மிக மோசமான துர்க்குணங்களும் அநாச்சாரங்களும் மூட நம்பிக்கைகளுமாகும். பெண்கள் சம்பந்தமாக உலக சமுகங்கள் அன்று கொண்டிருந்த நம்பிக்கைகள், அவர்களுக்கெதிரான நடத்தைகள், பெண்குழந்தைகளை உயிருடன் புதைத்தல், பெண்களை உடன் கட்டையேற்றல் போன்ற இன்னோரன்ன செயற்பாடுகளை குறிப்பிடலாம்.

          அத்தோடு, மனிதர்களை மனிதர்கள் அடிமைகளாகக் கருதி, அவர்களை மிருகங்களை விட கேவலமானவர்களாகவும், பண்டமாற்றுப் பொருட்களாகவும் கருதும் நிலைப்பாடு அன்றைய சமுகங்களில்  காணப்பட்டது. இந்நிலையினை ஒழித்துக்கட்டி 'யார் ஒரு மனிதனை அடிமைப்படுத்தி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்துகிறானோ அவனுக்கு சார்பாக நான் மறுமையில் பரிந்துரைக்க மாட்டேன்' என நபி (ஸல்) அவாகளால் வழிகாட்டிய மார்க்கமாக இஸ்லாம் விளங்குகிறது.

     இந்தியா போன்ற நாடுகளைக் கைப்பற்றிய போது அப்பிரதேசங்களில் நிலவிய மனைவியை இறந்த கணவனுடன் உடன் கட்டையேற்றும் மரபினை ஓழித்துக்கட்டியதும் இஸ்லாமே. பெண்களுக்கான தனியான அந்தஸ்தினை வழங்கி, அவர்களையும் உலகில் மனிதப்பிரவிகளாக மதிக்கக் கற்றுக் கொடுத்ததும் இஸ்லாமே.

        ஒழுக்க, பண்பாட்டு ரீதியாக பின்தங்கியிருந்த ஐரேப்பியருக்கு சுத்தத்தைக்கற்றுக் கொடுத்தவர்களும் முஸ்லிம்களேயாகும். ஐரோப்பாவில் குளிப்பது பாவமெனக் கருதி வந்த காலப்பகுதியில் இஸ்பெயினில் முஸ்லிம்கள் பொதுக்குளியலறைகளில் உல்லாசமாகக் குளித்து வந்தனர்.

   
      ஆரம்பத்தில் கூறியதைப்போன்று, இஸ்லாம் உலகை ஆளவாரம்பித்த வேளை இஸ்லாத்தில் காணப்பட்ட ஒழுக்கம், தார்மீக, ஆன்மீக விழுமியங்களை தாம் ஆட்சிசெலுத்திய பகுதிகளுக்கு எடுத்திச் சென்றமை அவர்களது அடுத்த முக்கிய பணியாக விளங்கியது.

   இந்த உயரிய நடைமுறைகளே உலகெங்கும் வாழ்ந்த, அனைத்துச் சமயங்களையும் சேர்ந்த மக்களின் பொதுவான அந்தஸ்தை மேலுயர்த்தியது மாத்திரமன்றி, அரேபியரது விக்கிரக வழிபாட்டாளர்கள், ஆபிரிக்க ஆவியுலக வழிபாட்டாளர்கள், ஈரானின் மந்திரவாதிகள், எகிப்து, சிரியாவைச் சேர்ந்த கிருஸ்தவர்கள், இந்தியாவின் வகுப்பு வாதிகள் போன்ற பெரும்தொகையான மக்களை இஸ்லாத்தின்பால் கவரச்செய்தது.

    இஸ்லாம் அரசோச்சிய  காலப்பகுதியில் ஐரோப்பிய உலகிலும், ஏனைய இஸ்லாமிய ஆட்சிக்குட்படாத கீழைத்தேய நாடுகளிலும் ஒழுக்கம் என்ற பெயரில் காணப்பட்ட மூட நம்பிக்கைகளை இஸ்லாம் களைந்தெரிந்தது.

     சுய ஒழுக்கக் கோட்பாடு, இச்சைகளைக் கட்டவிழ்த்து விடும் சிற்றின்ப நாட்டத்தைத் தவிர்த்தல், மற்றும் சிருஷ்டி உணர்வுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் போன்றவற்றின் உடனிகழ்வாகவே முழு மனித குலத்துக்குமான இந்த ஒழுக்கவியல் கோட்பாட்டை இஸ்லாம் நடைமுறைப்படுத்தியது. இதுவே கலைத்துறையில், அறிவுத்துறையில், சமுக ஆக்கத்துறையில் மனிதர்களுக்கேற்ற ஆக்கங்களைப் படைக்க, அழிவுதரும் ஆக்கங்களைத் தவிர்க்க அவர்களுக்கு துணை நின்றது.  தொலைநோகற்ற மதவெறியர்களாலும் குறுகிய மனப்பான்மை கொண்ட வெறித்தனத்தாலும் இழைக்கபப்பட்டுவந்து அட்டூழியங்களை அது முடிவுக்கு கொண்டுவந்தது.

      இஸ்லாம் வழங்கிய ஒழுக்கப்பண்பாடுகளின் விளைவாகவே உமர் (ரழி) ஜெரூஸலத்தைக் கைப்பற்றியபோது அங்கு வாழ்ந்த கிருஸ்தவர்களுக்கு பரிவுடன் கூடிய கவனிப்பை வழங்கினார். இந்தப் பின்னணியில் வளர்க்கப்பட்ட முஹம்மத் அல் பாதிஹ் அவர்கள் கொன்ஸ்தாந்துநோபிலை வென்றதும் அங்கிருந்த சகல கிருஸ்தவர்களையும் மன்னித்து, பரிவுகாட்டி, அங்கேயே அச்சமின்றி வாழச்செய்தார்.

      லூயி மன்னனின் கீழான சிலுவைப் போர் வீரர்களின் முகாமிலிருந்து எல்லை கடந்து தன்பக்கம் வந்த முனிவரான பிரான்ஸிஸ் உடன் இந்தப்பின்னணியிலேயே சுல்தான் மலிக் அல்காமில் மிக்க சாதாரணமாக உரையாடினார். ஆனால் சிலுவை வீரர்கள் அதற்குப் பிறகும் கூட ஒரு குறுகிய காலத்துள் ஜெரூஸலத்தைக் கைப்பற்றியபோது அங்கிருந்த முஸ்லிம்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்தனர். இந்நிலைக்குப் பிறகும்கூட முஸ்லிம்கள் அவர்களுக்கு ஒழுக்கத்துக்கு எடுத்துக் காட்டாய் இருந்துள்ளனர். இதுபற்றி 'ஒலிவரஸ்' என்பவர் குறிப்பிடும் போது, 'இத்தகைய நனடமையும், நட்பும், கருணையும் இறைவனிடமிருந்து மட்டுமே கிடைக்கின்றன என்பதை யார்தான் சந்தேகிக்க முடியும். எந்த மக்களின் தாய் தந்தையர், பிள்ளைகள், சகோதர சகோதரிகள் வேதனையால் துடிக்கத்துடிக்க எங்களால் கொலை செய்யப்பட்டார்களோ, எந்த மக்களின் நில புலன்களை நாம் சூரையாடினோமோ, எந்;த மக்களை நாம் அவர்களது நிலங்களிலிருந்து விரத்தியடித்தோமோ, அதே மக்கள் நாம் பசியால் வாடி, வதங்கி அவர்களது கரங்களுக்குள் சிக்குணட் போது எங்கள் மீது இரக்கத்தையும், பாசத்தையும் பொழிவார்கள் என யாரால்தான் எதிர்பார்க்க முடியும்' என்று முஸ்லிம் மக்களது நிலை குறித்து தனது அனுபவத்தினைக் கூறுகின்;றார்.

      இவ்வாறு, முஸ்லிம் உலகிற்கு கற்பதற்காக மாணவர்களாக வந்தவர்கள் மூலமாவும், போராட்டத்துக்காக வந்த  சிலுவை வீரர்கள் மூலமாகவும், பின்பு தாம் கைப்பற்றிய இஸ்லாமிய ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆட்சியாளர்கள் தாம் பெற்ற அடைவுகளின் மூலமும் ஐரோப்பா உலகும், ஏனைய உலக நாடுகளும் அறிவியல், நாகரிகம், ஒழுக்கம் போன்ற சகல துறைகளிலும் முன்னுதாரணமாக முஸ்லிம்களையே கொண்டு செயற்பட்டுள்ளனர் என்பதையும் இஸ்லாமிய நாகரிகமே அவர்களில் செல்வாக்கு செலுத்தியுள்ளது என்பதையும் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

முடிவுரை
    இந்த தலைப்பினுடாக நாம் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியும். அதுதான் இன்றைய நவீன உலகு கண்டுள்ள பாரிய முன்னேற்றங்கள், நாகரிக, கலாசார, பண்பாட்டு விழுமியங்களில் பெரும்பாலனவை இஸ்லாமிய நாகரிகத்திலிருந்து பெற்றுக்ககொண்ட  பொக்கிஷங்களேயன்றி வேறல்ல.

    இன்று காழ்ப்புணர்வு கொண்ட சில விமர்சகர்கள். இஸ்லாத்திற்கென்றொரு நாகரிகம் கிடையாதெனவும், முஸ்லிம்கள் பிறருடைய நாகரிக விழுமியங்களை தமதாக்கிக் கொண்டுள்ளனர் என்ற வாதத்தை முன்வைத்தபோதும். இஸ்லாம், அதற்கென தனியானதொரு நாகரிகம் உண்டு, அதற்கொன தனியானதொரு பண்பாட்டுப் பாரம்பரியம் உள்ளது. அது உலகில் தோன்றிய  நாகரிகங்களில் சிறந்தது என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை.

     காரணம், உலகில் தோன்றிய நாகரிகங்கள் ஒன்றில் ஆன்மீகப் பரிமானத்தை மாத்திரம் கொண்டதாக விளங்கும் அல்லது உலகியல் நோக்கை மையமாகக் கொண்டு விளங்கும். உதாரணத்திற்கு, இந்தியாவில் தோன்றிய நாகரிகம் ஆன்மீகப் பரிமானத்தை மாத்திரம் குறிக்கோளாய் கொண்டிருக்க, கைத்தொழில் புரட்சிக்குப் பின்னர் ஐரோப்பாவில் உருவாகிய நாகரிகத்தின் பின்புலமாக இருப்பது வெரும் இந்த சட உலகு மாத்திரமே.

    ஐரோப்பிய உலகு இஸ்லாத்திடமிருந்து அதன் அறிவு,நாகரிகம், கலாசாரப்பாரம்பரியம்,  ஒழுக்கம் போன்றனவற்றை கடன் வாங்கியிருந்தாலும், அவர்கள் இஸ்லாம் இயம்பும் ஆன்மீகத்துடன் கூடிய அறிவை, நாகரிகத்தினைப் பெறாததன் விளைவினை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.

     சூழல் சமநிலை குழைந்தும், முன்பில்லாத இயற்கை அனர்த்தங்களாலும் துண்புறுகிறான். மனிதனுக்கு பயன்தரவல்ல கண்டுபிடிப்புகளை அவர்கள் அடைந்திருந்தாலும் மனித இனத்தை வேரோடு கழைவதற்குரிய அழிவு தரும் ஆயுதங்களையும் அவன் படைத்து  வைத்துள்ளான். ஆயின், இந்நாகரிகம் ஆன்மீக விருத்தி, குணப்பண்பு விருத்தி, நன்நடத்தை, ஒழுக்க வாழ்வு போன்றனபற்றிய எந்தக் கவலையும் அவர்களுக்கு காணப்படவில்லை.

       ஆனால், இஸ்லாம் கொண்டுள்ள அறிவு, நாகரிகம், பண்பாடு, ஒழுக்கம்  சமநிலையான மனித ஆளுமைகளை உருவாக்கவல்லது. அது மனித இனத்தை அழிவின்பால் இட்டுச்செல்லக்கூடியனவல்ல என்பதை வரலாறு கூறுகின்றது.

      அநாச்சாரங்களும், குழப்பங்களும் மலிந்துள்ள மேலை நாடுகள், இஸ்லாம் விட்டுச் சென்ற ஆன்மீகப்பரிமானத்துடன் கூடிய அறிவையும், கல்வி, கலாசராம், நாகரிகம், ஒழுக்கம் போன்ற சகல துறைகளின்பாலும் நோக்கி விரைவதுவே அது பெற்றுள்ள மோசமான சமுக சீர்கேடுகளிலிருந்து மீள்வதற்குரிய ஒரே வழியாகும்.

     ஒழுக்க வீழ்ச்சியென்பது ஒரு சமுக வீழ்ச்சிக்குரிய அடிப்படை என்பது முன்னைய வரலாறுகள் எமக்குக் கற்றுத்தரும் பாடம்  என்றவகையில் எதிர்காலம் இஸ்லாத்திற்கே. எதிர்காலத்தில் உலகை வழிப்படுத்தப்போவது இஸ்லாமிய நாகரிகமே என்பதை இங்கு தெளிவாக குறிப்பிட முடியும்.


உசாத்துணைகள்

01. அபூபக்கா, ஏ.எம், அறிவியல் வளர்த்த முஸ்லிம்கள், முதலாம் பாகம்,
   இரண்டாம் பதிப்பு, 2001,இஸ்லாமிய ஆராய்ச்சிக் கழகம், சாய்ந்தமருது.

02. முஹம்மது முகையதீன், எஸ்.எச், உலகின் அறிவியல் முன்னோடிகள்
   முஸ்லிம்கள், முதல் பதிப்பு, 1998, நேர்வழி பதிப்பகம், சென்னை.

03. கமால்தீன் இர்ஷாத், அறிவியல் உலகில் முஸ்லிம் முன்னோடிகள், முதல்
   பதிப்பு, 2005, ஷாஹூல் ஹமீது புக் டிப்போ, கொழும்பு.

04. அமீன், எம்.ஐ.எம், இஸ்லாமிய நாகரிகம், மூன்றாம் பதிப்பு, 2009,
   இஸ்லாமிக் புக் ஹவுஸ், கொழும்பு.

05. நாளிர், எம்.எச்.எம், இஸ்லாமிய நாகரிகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்,
   இரண்டாம் பதிப்பு, 1991, ஹாதி புத்தக நிலையம் வெயியீடு, கொழும்பு.

06. அஸீஸ், ஆ.ளு.யு, இஸ்லாமியக் கலை, முதல் பதிப்பு, 2006, இளம்பிறை
   பதிப்பகம், சென்னை.

07. சியாத், ளு.டுஇ அல்ஜாமிஆ, மருத்துவத்துறை வளர்ச்சிக்கு முஸ்லிம்களின்
   பங்களிப்பு, நளீமியா வெளியீட்டுப்பணியகம், பேருவலை.

08. கலாநிதி. சுக்ரி,எம்.ஏ.எம்., மதமும் அறிவியலும், முதல் பதிப்பு, 1994,
   அல்கலம் வெளியீடு, பேருவல.

09. நாளிர், எம்.எச்.எம், வைகறை, முஸ்லிம்கள் வளர்த்த அறிவியல் கலை,
   இதழ்: 15-17, 2009, மீள்பார்வை மீடியா சென்டர், கொழும்பு.

10 Rukni Musawi Lari, Sayid Mujtaba, Western Civilisation Through
      Muslim Eyes, (Translated by F.J.Goulding), Qum Islamic Rep, 1977,
      Tehran.

11. Philip K. Hitty, History of the Arabs, 3rd Edition, 1946, Macmillan and
      co. Limited, London.

12. Haidar Bammate, Muslim Contribution to Civilization, First Edition, 1962,
      The Crescent Pulications, Geneva.
  
  
13. கலாநிதி. நதீர் அல்உழ்மா, அத்தவ்ருல் அரபி பித்தாரீக் அல்அவ்ருப்பி
   லில்குரூனில் வுஸ்தா, (ebook)


14. நவாஸ் ஸநூர்தீன், எம், ஐரோப்பிய நாகரிகத்தில் இஸ்லாமிய நாகரிகச்
   செல்வாக்குகள், இஸலாமிய சிந்தனை, மலர் :33, இதழ் :02, 2011,
   நளீமியா வெளியீட்டுப் பணியகம், பேருவல.
        
    

Sunday, March 4, 2012

இஸ்லாம் வழங்கும் மனித உரிமைகள் 2

இஸ்லாம் வழங்கியுள்ள அடிப்படை மனித உரிமைகள் 2

   அடிப்படை மனித உரிமை என்று கூறும் போது, முதலாவது அடிப்படை விடயம் இஸ்லாம் மனிதனை, மனிதனாக மதிக்கிறது. அதன்விளைவாக அவனுக்கு பல உரிமைகளை வழங்கியுள்ளது. ஒவ்வொரு மனிதனும், அவன் எந்த நாட்டை, இனத்தை சார்ந்தவனாக, எந்த மொழி பேசுபவனாக இருப்பினும் அவர் ஒர் இறை நம்பிக்கையாளனாக இருந்தாலும் இறை மறுப்பாளனாக இருப்பினும், காட்டில் வாழ்பவனாக இருப்பினும் பாலைவனத்தில் வாழ்ந்தாலும் மனிதன் என்ற காரணத்தினால் பல அவன் பல அடிப்படை உரிமைகளை அவன் பெறுகிறான். அந்த உரிமையை இஸ்லாத்தைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் ஏற்று, மதித்து நடப்பது கடமையாகும். அந்தவகையில், இஸ்லாம் வழங்கியுள்ள அடிப்படை மனித உரிமைகளை  சுருக்கமாக நோக்கினால் பின்வருமாறு கூறலாம்.

 வாழும் உரிமை
    இஸ்லாம் மனிதனுக் எத்தகைய தலையீடுகளுமின்றி சுதந்திரமாக உலகில் வாழும் உரிமையை வழங்கியுள்ளது. இஸ்லாமிய நோக்கில், படைப்புகளில் சிறப்பும் மேன்மையும் கண்ணியமும் கொண்ட படைப்பாக மனிதன் காணப்படுகிறான். அவனுக்கு, 'கலீபதுல்லாஹ்' அல்லாஹ்வின் பிரதிநிதி என்ற உயர் அந்தஸ்தை இஸ்லாம் வழங்கியுள்ளது. அல்குர்ஆன் பல சந்தர்ப்பங்களில் மனிதனின் உயர்ந்த நிலை பற்றியும், ஏனைய படைப்புகளை விட மேலான அவனது சிறப்பு பற்றியும் குறிப்பிடுவதைக் காணலாம். ' நிச்சயமாக  நாம் ஆதமுடைய சந்ததியை கண்ணியப்படுத்தினோம். கரையிலும்(வாகனங்கள் மீதும்) கடலிலும் (கப்பல்கள் மீதும்) நாம் அவர்களை சுமந்து செல்கின்றோம். நல்ல ஆகாரங்களையும் நாமே அவர்களுக்கு அளிக்கின்றோம். நாம் படைத்த (மற்ற சீவராசிகளில்) அனேகமானவற்றின் மீது (பொதுவாக) நாம் அவர்களை மேன்மையாக்கி வைத்துள்ளோம்'. (17:70)

     அல்குர்ஆன் மனிதனின் உரிமையினை பெறுமதியானதாக மதித்து அதனைப் புனிதமானதாகக் கருதுகிறது. அது முஸ்லிமின் உயிர் என்பதற்காகவல்ல. மனிதன் என்ற கண்ணோக்கிலேயானும்;. அந்தவகையில், மனித உயிர் அழிக்கப்படுவதை அது தடுப்பதோடு, தற்கொலையை மிக வன்மையாகக் கண்டித்து தடை செய்துள்ளது. 'உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக்க அன்புடையவனாக இருக்கின்றான்' (4:29)

     நியாயமான காரணமின்றி மனித உயிர் அழிக்கப்படக் கூடாது என குறிப்பிடும் அல்குர்ஆன், இவ்வாறு நியாயமான காரணமின்றி ஒரு தனி மனிதனைக் கொலை செய்வதானது, மனித சமுகம் முழுவதையும் செய்வதற்கு சமமானதாகக் கருதுகின்றது. 'எவனொருவன் மற்றொரு ஆத்மாவைக் கொலை செய்ததற்குப் பிரதியாகவோ அல்லது பூமியில் குழப்பத்தைத் தடை செய்வதற்காகவோ அன்றி (அநியாயமாகக்) கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவன் போலாகின்றான். அன்றி எவன் ஒரு ஆத்மாவை வாழ வைக்கிறானோ, அவன் மனிதர்கள் யாவரையும் வாழ வைத்தவன் போவான்'. (5:32)

     எனவே, ஒரு மனிதனின் உயிரை இன்னொரு மனிதன் தன்னிச்சையாகப் பறிப்பதற்கு எவ்வித உரிமையோ, அதிகாரமோ கிடையாது. எனவேதான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், 'இணைவைப்பதற்கு அடுத்தபடியான மிகப்பெரிய குற்றம் மனிதக் கொலையாகும்' எனவும்,
   'இறைவனுக்கு இணை கற்பிப்பதும் மனிதர்களைக் கொள்வதும் பெரும் பாவமாகும்' எனவும் நவின்றார்கள்.

    ஒரு தனிமனிதன் அடுத்தவரின் வாழ்வுக்கு பங்கம் ஏற்படுத்தி, கொலை செய்வது, அடுத்த மனிதர்களின் வாழ்வுக்கும் உரிமைகளுக்கும் அவரது அமைதிக்கும் பங்கம் விளைவிப்பதன் மூலம் ஒருவன் தான் வாழும் உரமையை இழந்து விட்டான் என்பதை அதற்கென அமைக்கப்பட்ட நீதிமன்றம் மட்டுமே முடிவு செய்யும். இதனை அல்லாஹ், 'அல்லாஹ் புனிதமாக்கிய (மனித) உயிரை முறையான நீதி விசாரணையின்றி கொலை செய்யாதீர்கள்' (6:151)

     மேலுள்ள அனைத்து வசனங்களும் 'உயிர்' என்பது பொதுவாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. எதில் முஸ்லிம்களுக்கென சிறப்புப் பொருளும், பாகுபாடுகளும் காணப்படவில்லை. அவ்வாறு பயன்படுத்தப்பட்டிருந்தால் அது இஸ்லாத்தை ஏற்ரோரின் சார்பாக வந்த சட்டமாகக் கொள்ள இடமுன்டு.

    மனிதனுக்கு வாழும் உரமையை வழங்கியது இஸ்லாம் மட்டுமே.  மனித உரிமை பற்றி பேசுவோரின் ஏனைய தரப்பினரை நோக்கினால், மனித உரிமைகள் அவர்களது அரசியல் சாசனத்தில் அல்லது பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் அவ்வுரிமைகள் அவர்களது குடிகளுக்கு மட்டுமே அல்லது இனத்தவர்களுக்கு மட்டுமே என்ற நிலை காணப்படும்.

    எனவேதான், அவஸ்திரேலியாவில் வெள்ளையர்கள்களை குடியமர்த்துவதற்காக அங்கு காணப்பட்ட பழங்குடி மக்களை மிருகங்களைப் போல் வேட்டையாடப்பட்டு அழித்தொழிக்கப்பட்டார்கள். அமேரிக்காவில் வெள்ளையர் குடியமர்வதற்காக அங்கு காணப்பட்ட செவ்விந்தியர்களை வெறித்தனமாக கொன்று குவித்தனர். செவ்விந்தியர்கள் குறிப்பிட்டதொரு சிறு பகுதியில் தமக்கென அமைத்து வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆபிரிக்க நாடுகளில் வெள்ளையர் ஊடுருவி, காட்டு விலங்குகளை வேட்டையாடுவதைப் போல அங்கிருந்த கருப்பர்களை வேட்டையாடினர்.

     இந்த வரலாறுகள் அவர்களுக்கு மனித உயிர்கள் மீது எவ்வித அக்கறையும் இல்லை என்பதை நிரூபிக்கிறது. அவர்கள் மதிப்பளித்தாலும் கூட தேச, இன, நிற வேறுபாடுகளுக்கமைய அவை பேனப்படுகின்றவே தவிர ஒட்டுமொத்த மனித சமுகத்துக்குமல்ல.

    ஆனால் இஸ்லாமிய உரிமைகளைப் பொருத்தவரையில், ஒரு மனிதன் காட்டில் வசிப்பவனாக இருப்பினும், நாகரிகத்தின் உச்சத்தில் வாழ்பவனாக இருப்பினும் அனைவருக்கும்  சமனே.

உயிர் பாதுகாப்புக்கான உரிமை
    மனித உரிமை பற்றி பேசும் போது, இஸ்லாத்தில் வாழும் உரிமை இல்லை என்ற விமர்சனம்  முன்வைக்கப்படுகின்றது. 'மனித உரிமைச்சட்டம் வாழும் உரிமை பற்றி பேசுகிறது. ஆனால் இஸ்லாத்தில் இஸ்லாமிய நம்பிக்கையை ஏற்றுக்கொள்லாதவர்களும், கடவுள் மறுப்பாளர்களும் இஸ்லாமிய நாட்டில் வாழத் தகுதியற்றவர்கள்' என்ற விமர்சனத்தை மாற்று மத சகோதராகள் முன்வைக்கின்றனர்.
  
   ஆனால், உண்மையில் இஸ்லாம் மனிதனுக்கு வழங்கும் உரிமைகளில் பிரதானமான அடுத்த உரிமையாக இதனைக் கருதலாம். இஸ்லாம் மனிதனுக்கு உலகில் சுதந்திரமானவனாக வாழும் உரிமையை வழங்குகிறது. எந்த ஒரு மனிதனாலும் அவனது உயிர்வாழும் அவ்வுரிமையை பறித்துவிட முடியாது.

   'அன்றி எவன் ஒரு ஆத்மாவை வாழ வைக்கிறானோ, அவன் மனிதர்கள் யாவரையும் வாழ வைத்தவன் போவான்'. (5:32) என அல்குர்ஆன் இவ்வுரிமை பற்றி குறிப்பிடுகிறது.

    இக்கருத்தை யூதர்களின் 'தல்மூத்' வேதத்திலும் இக்கருத்தைக் காணலாம், 'எவனொருவன் ஒரு இஸ்ரவேலரின் உயிரைக் கொல்கின்றானோ, அவன் இவ்வுலகையே அழித்தவன் போலாவான். மேலும், எவனொருவன் ஒரு இஸ்ரவேலரின் உயிரைப் பாதுகாக்கின்றானோ, வேதத்தின் பார்வையில் அவன் உலகம் முழுவதையும் காப்பாற்றியவன் போலாவான்' என்று கூறும் வேதத்தில், 'இஸ்ரவேலர் அல்லாதவர் நீரில் மூழ்கிக்கொண்டிருக்கும்போது நீங்கள் காப்பாற்றினால் நீங்கள் ஒரு பாவியாவீர்கள்' என்ற மனிதர்களது கையாடலும் அதே வேதத்தில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

     இவ்வாறே, அவர்களது மத இலக்கியத்தில் காணப்படும் 'கோயிம்' என்ற வார்த்தை ஆங்கிலத்தில் 'புநவெடைந' என்று பிரயோகிக்கப்படுகிறது. அதாவது, 'எழுத வாசிகத்தெரியாத' என்ற கருத்தில் பிரயோகிக்கப்படும். இக்கொள்கையின் படி படிப்பறிவில்லாத மனிதர்கள் மீது அவர்களுக்கு எது வேண்டுமானாலும் செய்ய முடியும். அவர்கிடம் என்ன வகையில் வேண்டுமானாலும் உரிமைகளை மீற முடியும் என்று யூதர்கள் கருதியிருந்தனர். இதனை அல்குர்ஆனும் கண்டிப்பதனைக் காணலாம், 'படிப்பறிவில்லாதவர்(உம்மி)கள் மீது (நாம் செய்யும் எந்த செயலுக்கும்) நம்மீது குற்றம் பிடிக்க வழியில்லை. என்று அவர்கள் கூறுகின்ற காரணத்திலாகும். அவர்கள அறிந்துகொண்டே (தங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான் என்று) அல்லாஹ்வின் மீது பொய்யையும் கூறுகின்றனர்' (3:75) இவ்வாறு நோக்கும் போது, இஸ்ரவேலர்கள் அல்லாதோரை அவர்கள் மனிதர்களாகவே கருதுதுவதில்லை. அவர்கள் பிறரிடம் உதவி கோறுவதற்கு எந்த அருகதையும் அற்றவர்கள், என்ற கருத்தையே அவர்கள் கொண்டுள்ளனர் என்ற நிலையை அறிந்து கொள்ள முடிகிறது. 
இவ்வாறு இன வெறியுடன் இஸ்லாம் மனித உரிமைகளைப் பேசவில்லை. மனிதன் நீரில் மூழ்குபவகாக இருக்கலாம், நோயுற்றவனாக இருக்கலாம், காயப்பட்டவனாக இருக்கலாம் எவ்வாறு இருந்தபோதிலும் அவன் மனிதன் என்ற ரீதியில் அவனுக்கு சுதந்திரமாக வாழவும் தனது உயிரைகாக்கவுமான உரிமைகளை இஸ்லாம் வழங்கியுள்ளது.

       எனவேதான், உமர் (ரழி) அவர்கள், 'யூப்ரடீஸ் நதிக்கரையில் ஒர் ஒட்டகக்குட்டி சங்கடத்துக்குள்ளானாலும் இந்த உமர் மறுமையில் அல்லாஹ்விடத்தில் பதில் சொல்லியாக வேண்டும்' என்ற கழுத்து இஸ்லாம் முஸ்லிமல்லாதாருக்கான வாழும் உரிமையை மறுக்கிறது என்ற வாத்தினை முன்வைப்போரை வாயடைக்கச் செய்து விடுகிறது.

இஸ்லாத்தல் தனிமனித சுதந்திரத்திற்கான உரிமை
   அடிமைத்தனம் கூடாது என்று மனித உரிமைகள் சட்டம்கூற, இஸ்லாம் அதனை அனுமதிக்கிறது. அல்குர்ஆனின் சூரா நிஸாவின் 25 ஆவது வசனத்தில் அல்லாஹ் இதனை அனுமதிப்பதாயும், அவர்களுடன் இணைந்து வாழ முடியும் என்று கூறுவதாவும் விமர்சிப்பதுண்டு. ஆனால் அல்குர்ஆனின் வசனங்கள் இறங்கிய பின்னணியும், அது இறக்கப்பட்டமைக்காக காரணங்களையும் விளங்க முடியாதவர்களாளேயே இத்தகை விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றனர்.
      
         இஸ்லாம் மனிதர்கள் சுதந்திரமானவர்களாப் பிறக்கின்றனர், அவர்கள் சுதந்திரமானவர்களாக வாழ வேண்டுமென எதிர்பார்க்கிறது. மனிதர்களை அடிமையாக்கும் நோக்கத்துடனோ, அடிமையாக விற்றுவிடும் நோக்கத்துடனோ, மனிதனை சிறை பிடிக்கும் ஆரம்ப காலத்து பழக்கத்தினை இஸ்லாம் கண்டிப்பாக தடை செய்துள்ளது. இந்த விடயத்தில் நபி (ஸல்) அவர்கள் திட்டவட்டமாகவும், தெளிவாகவும் கூறியதுடன் தான் ஒரு முன்மாதிரியாகவும் நடந்து கொண்டார்கள். 'மூன்று விதமான மக்களுக்கு எதிராக நான் மறுமை நாளில் வாதிடுவேன். அவர்களுள் ஒருவர் மனிதர்களை அடிமைப் படுத்தி விற்று அந்தப் பணத்தில் சாப்பிடுபவர்' (புஹாரி, இப்னுமாஜா) என்று கூறிய நபியவர்கள் தனது வாழ்நாளில் 63 அடிமைகளை வாங்கி விடுதலை செய்துள்ளார்கள்

      நபியவர்களது இந்த முன்மாதி நடைமுறைகளையும் வார்த்தைகளையும் உடன் செயற்படுத்திய ஸஹாபாக்கள் மூலம் குறுகிய காலத்துக்குள் அரபு தேசத்துக்குள் அடிமைத்துவம் இல்லாத சூழல் உருவாகியிருந்தது. ஆயிஷா (ரழி) அவர்கள் 67 அடிமைகளையும், அப்பாஸ் (ரழி) 70 அடிமைகளையும், அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) 1000 அடிமைகளையும், அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ப் (ரழி) 30000 அடிமைகளையும் விலைக்கு வாங்கி விடுதலை செய்தனர் என இஸ்லாமிய வரலாறு கூறுகிறது.

   இந்தப்பின்னணியிலேயே, ரப்ஈ இப்னு ஆமிர் (ரழி) அவர்கள் பாரசீக மன்னனிடம், 'எதற்காக நீங்கள் வந்திருக்கிறீர்கள்' என்று கேட்டமைக்கு, 'அல்லாஹ் தான் நாடியோரை, அடியார்களுக்கு அடிமைப்படுவதிலிருந்து மக்களை வெளியேற்றி, அல்லாஹ்வுக்கு மாத்திரம் அடிமைப்படச் செய்வதற்கும், இவ்வுலகின் நெருக்கடிகளிலிருந்து, மறுமை எனும் சுபீட்சத்தின்பால் இட்டுச்செல்வதற்கும், மதங்களின் அநீதியிலிந்து இஸ்லாம் எனும் நீதியின் பால் அழைத்துச் செல்வதற்காக அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட ஒரு கூட்டம்' என பதில் கூறினார்கள்.

,  இவைதவிர, இஸ்லாம் முஸ்லிம்கள் செய்த தவறுகளுக்கு பரிகாரமாகவும், தன்டணையாகவும் முதன்மைப் படுத்தியது அடிமை விடுதலையையேயாகும்.

     இஸ்லாமிய வரலாற்றில் அதன் பின்பு அடிமைத்துவம் என்பது காணப்பட்டது போர்க்கைதிகள் விடயத்திலாகும். கைதிகளாகப்பிடிபட்டவர்களுக்குப் பகரமாக எதிரிகளிடமிருந்து பிடிபட்ட முஸ்லிம் வீரர்களை விடுவிக்கப்பயன்படுத்தும் அல்லது பனயத் தொகையைப் பெற்று அவர்களை விடுவிக்கும் நிலை காணப்பட்டது. அதுவும் சாத்தியப்படாதபோது பிடித்த இராணுவ வீரர்களிடம் ஒப்படைத்து விடும் நிலை காணப்பட்டது. இஸ்லாமிய வரலாற்றில் அவ்வாறு பிடிபட்ட கைதிகளை இராணுவ வீரர்கள் கொடுமைப் படுத்தினார்கள் என்றோ, அவர்களை பலாத்காரப் படுத்தினார்கள் என்றோ காண முடியாது. மேற்கு நாடுகளில் போன்று அவர்களை சிறையில் தள்ளி சித்திரவதை செய்வதை விட மனிதர்களோடு மனிதர்களாக இருந்து வருவது எவ்வளவோ மேலானதாகும். அவர்களுக்குரிய அடிப்படை வசதிகள் அனைத்தையும் வழங்கி அவர்களை நல்ல முறையில் நடத்துமாறு இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது. 'மேலும், அ(ல்லாஹ்வாகிய அ)வன் மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைக்கும், அநாதைக்கும். சிறைப்பட்டவர்களுக்கும் அவர்கள் உணவளிப்பார்கள்' (76:8)

    இது இவ்வாறிருக்க, முற்கால எகிப்திய ஆட்சியாளர்கள், பிரமட்டுக்களை கட்டுவதற்காக அடிமைகளைக் கொடுமைப்படுத்தி வேலைவாங்கியதை விட, சீன ஆட்சியாளர்கள் அடிமைகளைக் கொடுமைப்படுத்தி சீனப்பெரும்சுவரைக் கட்டியதை விட கொடூரமான முறையில் இரண்டாம் உலகப்போரில் தோற்றுப்போன ஜெர்மன் யப்பான் போன்ற நாடுகளின் கைதிகளை ரஷ்யா நடத்தியது. தாம் சிறை பிடித்த பல்லாயிரக்கணக்கான கைதிகளை அவர்கள் சைபீரியாவையும், இதர பின தங்கிய பகுதிகளையும் வளப்படுத்த பயன்படுத்தினர். இரத்தத்தை உறையச் செய்திடும் 'சீரோ' டிகிரிக்கும் குறைவாக உஷ்ன நிலையில் உண்ண உணவு வழங்காமல், உடுக்க ஆடையின்றி நிலக்கரி சுரங்கங்களில் மேற்பார்வையாளர்கள் மூலம் Nவை வாங்கப்பட்டனர்.  இவ்வாறுதான் இன்று மனித உரிமை பற்றிப் பேசும் நாடுகள் நடந்து கொண்டுள்ள வரலாற்றைப் பார்க்கிறோம்.

    தாம் தான் மனித சுதந்திரம் பற்றி முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியோர் தாம் என வாதிக்கும் மேலை நாடுகளில் மனித சுதந்திரம் எந்தளவு பேணப்பட்டது என்ற வரலாற்றை நோக்கினால், அமேரிக்காவும், மேலை நாடுகளது தீவுகளும் கைப்பற்றப்பட்ட பின்பு, வெள்ளையர்கள் அங்கு ஊடுருவி, சுமார் 350 ஆண்டுகளாக அடிமை வியாபாரம் நடைபெற்றது. ஆபிரிக்க கடற்கரைக்கு அதன் உற்புறங்களிலிருந்து கருப்பின மக்களை அடிமைகளாக்கி  வெள்ளையர் தமது குடியேற்ற நாடுகளுக்கு  சரக்குகளைப் போன்று ஏற்றுமதி செய்தனர்.

     1680-1786 வரையிலான ஒரு நூற்றாண்டு காலப்பகுதியில் பிரித்தானியா அடிமைப்படுத்திய அடிமைகளின் எண்ணிக்கை ஆங்கிலேய வரலாற்றாசிரியர்களின் கருத்துப்படி 20 மில்லியன்களாகும். 1790 ஆம் ஆண்டு மட்டும் அடிமையாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75000 ஆகும். மிக அழுக்கடைந்த, அடிப்படை வசதிகள் அற்ற சரக்குக் கப்பல்களில் மிருகங்களை விட கேவலமான நிலையில் 18 அங்குலமே கொண்ட கூடுகளில் அசைய முடியாவண்ணம் அடைக்கப்பட்டும், ஒருவருக்கு மேல் மற்றொருவர் கிடத்தப்பட்டும் அவர்கள் கொண்டு செல்லப்பட்டார்கள். சென்று சேறும் வழியில் 20 விகிதத்தினர் வழியிலேயே இறந்து போயினர்.

     1781 ஆம் ஆண்டு அடிமைகளை ஏற்றிக்கொண்டு மேற்கு ஆபிரிக்காவிலிருந்து அமேரிக்கா நோக்கி பிரயாணித்த கப்பலில் 400 அடிமைகள் இருந்தனர். அவர்களுக்குள் 132 பேருக்கு கொலரா ஏற்பட்டதை அறிந்த வெள்ளைக்கார வியாபாரி, ஏனைய அடிமைகளுக்கும் பரவிவிடாமல் இருப்பதற்காக ஒவ்வொருவராக 132 பேரையும் கதரக்கதர நடுக்கடலில் வீசிவிட்டான். வேடிக்கை என்னவென்றால்,  நாடு திரும்பிய அவன் அதற்காக (தனது வியாபாரப் பொருட்களுக்கு ஏற்பட்ட நட்டத்துக்காக) காப்புறுதி நிருவனத்திடம் நட்டஈடு கோரினான். அக்கோரிக்கையை அவை நிராகரிக்கவே, நீதிமன்றத்தில் அவன் வழக்குத் தொடர்ந்தான். 'அவன் அவர்களை வீசியது ஒரு பாதுகாப்பு நடவடிக்கை. எனவே, காப்புறுதி கம்பனி நட்டஈடு வழங்க வேண்டும்' என நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. உண்மையில், நீதிமன்றம் அவன் செய்த கொலைகளுக்காக அவனுக்கு மரண தன்டணை வழங்கியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அவனுக்கு நட்ட ஈடு வழங்க தீர்ப்பளித்தது வேடிக்கைக்குரிய விடயமல்லவா.

      ஐரோப்பியரிடையே அடிமை வியபாரம் இருக்கும் காலத்தில் மாத்திரம் அவர்களால் பிடிக்கப்பட்ட கருப்படிமைகளின் எண்ணிக்கை 100 மில்லியன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மனித சுதந்திரம் பற்றி பேசுவதற்கு அவர்களுக்கு  என்ன அருகதை இருக்கிறது என்பது முதல் கேள்வியாகும்.

இஸ்லாத்தில் நீதி பெறும் உரிமை

   இஸ்லாம் மனிதனுக்கு வழங்கியுள்ள அடுத்த முக்கிய உரிமையே அவர் சமுகவாழ்வின் போது நீதி பெறும் உரிமையைக் குறிப்பிட முடியும். மனிதன் மற்றொரு மனிதனின் மீது கொண்ட வெறுப்பு, குரோதம், பகைமை போன்றன அந்த மனிதனுக்கு எதிராக செயற்படுவதற்கு, அந்த மனிதனுக்கு விரோதமாக தீர்ப்பு கூறுவதற்கு இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டாது. அல்குர்ஆன் கூறுகிறது, 'ஒரு சாரார் மீது நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு உங்களை அத்துமீறலுக்கு இட்டுச்செல்லக்கூடாது'. (5:2).  'விசுவாசிகளே! நீதியை நிலைநாட்டுவதில் அல்லாஹ்வுக்காக உறுதியான சாட்களாக இருங்கள். மக்களின் ஒரு கூட்டத்தார் மீது நீங்கள் கொண்டுள்ள தவறான எண்ணம் நீதியாக நடப்பதிலிருந்து உங்களைத் தவறச்செய்து விடக்கூடாது. நீதியதக நடந்து கொள்ளுங்கள். இதுவே இறையச்சத்துக்கு மிக்க நெருக்கமானதாகும்'. (5:8) போன்ற வசனங்களின் ஊடாக அல்லாஹ் எந்தக் காரணம் கொண்டும் நீதிக்கு மாற்றமாக நடப்பதைத் தடை செய்கின்றான்.

    'விசுவாசிகளே! நீங்கள் நீதத்தின் மீதே உறுதியாக நிலைத்திருங்கள். (நீங்கள் சாட்சிகூறினால் அது) உங்களுக்கோ, அல்லது உங்களது பெற்றோருக்கோ (அல்லது) உங்களது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருந்த போதும் (அல்லாஹ்வுக்காக) உண்மையையே சாட்சி கூறுங்கள். (நீங்கள் யாருக்காக சாட்சி கூறுகின்றீர்களோ அவர்கள் பணக்காரராக இருந்தாலும், ஏiயாக இருந்தாலும் சரியே உண்மையையே கூறுங்கள்)' (4:135) எனக்கூறுவதன் மூலம் சமுக நீதியை நிலைநாட்டுகிறது.

    எனவே, முஸ்லிம்கள் தங்களோடு நல்லுறவுள்ள மனிதர்களிடம் மட்டுமல்லாது, தமது எதிரிகளுடனும் கூட நீதியாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை அல்குர்ஆனின் இத்தகைய வசகங்கள் தெளிவுபடுத்துகின்றன. இஸ்லாம் வழங்கும் சமுக நீதியானது முஸ்லிம்களுக்கு மட்டுமோ, தன் நாட்டு மக்களுக்கு மட்டுமோ, தன் ஆதரவாளர்களுக்கு மட்டுமோ அல்ல மாறாக உலகில் பிறந்து வாழும் அனைத்து மனிதர்களுக்காகவுமே என்பதை பொதுப்படையாக முன்வைக்கும் இந்த வசனங்கள் தெளிவுபடுத்துவதாய் அமைகின்றன.

   மனித இனம் ஆரம்ப்தில் ஒரு சமுகமாக இருந்ததையும், கால வளர்சியின் போது அது பல இனங்களாகவும் குழுக்களாகவும், பல்வேறு மொழிகளைப் பேசுவோராகவும், பல பூகோலப் பிரதேசத்தைச் சார்ந்த பல்வேறு நிறத்தினர்களாகவும் பிரிந்தது என்பதையும் அல்குர்ஆன் மிகத்தெளிவாகக் குறிப்பிடுகிறது. 'மனிதர்கள் அனைவரும் ஆரம்பத்தில் ஒரே சமுகத்தவராகவே இருந்தனர். பின்னர் பல வகுப்பினராகப் பிரிந்து விட்டனர்.(10:19)

    நபி (ஸல்) அவர்கள் இதுபற்றிக் கூறும்போது, 'நீதியாக நடப்பவர்கள் அல்லாஹ்விடத்தில் ஒளியிலான மிம்பர்களில் இருப்பார்கள். அவர்கள் தமது ஆட்சியில் குடும்பத்தில், தங்களின் பொறுப்பில் இருந்தவர்களுடன் நீதியாக நடந்து கொண்டிருப்பார்கள்' (முஸ்லிம்) எனக்கூறினார்கள். நீதி என்பது சமுகத்தின் சகல மட்டத்தினருக்கும் பொதுவானதாகும். 'உங்களுக்கு மன்சென்ற சமுகம் அழிக்கப்பட்டமைக்குக் காரணம், அவர்கள் கீழ்மட்ட மக்களுக்கு சட்டங்களை செயற்படுத்துவார்கள். உயர் குடியினரை விட்டுவிடுவார்கள். முஹம்மதின் ஆத்மா எவன் கைவசமிருக்கிறதோ, அவன் மீது சத்தியமாக, முஹம்மதின் மகள் பாதிமா திருடினாலும் அவளது கையை வெட்டுவேன்' (புஹாரி) என நபியவர்களிடம் களவுக்குற்றத்திற்காக பரிந்து பேசவந்த 'ஸைத் பின் ஹாரிதா' (ரழி) அவர்களை நோக்கி கூறினார்கள்.

  பொதுவாக, 'இஸ்லாமிய நாட்டில் வாழும் முஸ்லிமல்லாதார், இரண்டாந்தரமாகவே மதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு நீதி மஸ்லிம்களுக்கு வழங்கப்படுவதைப் போன்று வழங்கப்படுவதில்லை' போன்ற விமர்சனங்களை அண்மைக்; காலத்து முஸ்லிம் நாடுகளின் நிலையைக் கண்டு இஸ்லாத்தை விமர்சிப்பதுண்டு. ஆனால், இஸ்லாமிய வரலாற்றை, அதன் ஆட்சிக் காலத்தை சற்று ஆராய்ந்தால், முஸ்லிம்கள் எந்தளவு நீதியான முறையில் நடந்துகொண்டுள்ளார்கள் என்பதை விளங்கலாம். அலி (ரழி) அவர்கள் கலீபாவாக இருக்கும் போது அவரது போர்க்கவசத்தை ஒரு யூதன் திருடிவிட்டான்;. அதற்கு சாட்சியாக அவரது மகன் ஹஸன் (ரழி) அவர்கள் மாத்திரம் இருந்த ஒரே காரணத்திற்காக கேடயம் யூதனுக்குச் சொந்தமென கலீபாவுக்கெதிராக தீர்ப்பு வழங்கிய மார்க்கம் இஸ்லாம்.

   ஒரு தடவை எகிப்தில் கவர்னராக இருந்த அம்ரிப்னுல் ஆஸ் (ரழி) அவர்களது மகன் அவர்கள் குதிரை ஓட்டப்போட்டியொன்றில் ஒரு ஏழை குடிமகனிடம் தோல்வியடைந்ததை தாங்கிக் கொள்ள முடியாத அம்ரிம்னுல் ஆஸ் (ரழி) அவர்களது மகன் அந்த ஏழைச் சிறுவனது முதுகில் சாட்டையால் அடித்து விட்டார்கள். அவன் தான் கலீபாவிடம் முறையிடுவதாகக் கூறி அழுதான், ஹஜ் காலப்பகுதியில்  கலீபாவை சந்தித்து நடந்த விடயத்தைக் கூறவே, உமர் (ரழி) அவர்கள், ' மக்களை அவர்களது தாய்மார் சுதந்திரவான்களாக பெற்றெடுத்திருக்க நீங்கள் எப்போது அவர்களை அடிமைப்படுத்தினீர்கள்' எனக்கேட்டு கவர்னரின் மகனுக்கு உடன் தண்டனை வழங்கினார்கள். தனது கையிலிருந்த சாட்டையை அந்த சிறுவனிடம் வழங்கி 'உனக்கு அடித்தது போலவே நீயும் அடி' என்று கூறினார்கள். இது போன்ற ஏராளமான சம்பவங்களை வரலாற்றில் கண்டுகொள்ள முடியும்.

    உலகில் நீதிக்கு ஒரு உமர் என நீதியான ஆட்சிக்கு பெயர்போன கலீபா உமர் (ரழி) அவர்கள் தன்னைத் தொடர்ந்து வரக்கூடிய கலீபாவுக்கு உபதேசிக்கும்போது, 'மக்களை எப்போதும் சமமாக நடத்துங்கள். உண்மையை நிலைநாட்டுவதில் எவரையும் பொருட்படுத்த வேண்டாம். இவ்விடயத்தில் எவரின் தூற்றுதலுக்கும் அஞ்ச வேண்டாம். அல்லாஹ் உமக்களிக்கும் அதிகாரத்தில் எவருக்கும் சார்பாகவோ, எதிராகவோ நடக்க வேண்டாம்' என உபதேசம் செய்தார்கள்.
   எனவே, இஸ்லாத்தில் நீதியைப் பெறும் உரிமை வெறும் ஏட்டுத் தத்துவமாக காணப்படவில்லை. மாறாக அவை ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்விலும்,  குடும்ப வாழ்விலும், சமுக வாழ்விலும், அரசியல் வாழ்விலும் நடைமுறை வாழ்வில் பிரதிபலிக்கக் கூடியனவாக காணப்பட்டன.

இஸ்லாத்தில் மனிதரிடையே சமத்துவம்

    இஸ்லாம், இன, நிற, மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு மார்க்கமாகும். இன வெறியும், கோத்திர வெறியும் உச்ச நிலைக்குப் போயிருந்த ஜாஹிலிய்ய சமுகத்திற்கு நபியாக அனுப்பப்பட்ட முஹம்மத் (ஸல்) அவர்கள், மக்களிடையே காணப்பட்ட ஏற்றத்தாழ்வுகளுக்கும், இனம், கோத்திரம், நிறம், பிரதேசம் என பிரிந்து வாழும் நிலைப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.
 
    ஆரம்பமாக இறங்கிய அல்குர்ஆன் வசனங்களே, மனித வாழ்வில் சமத்துவத்தை வலியுறுத்தின. ' மனிதர்களே! நீங்கள் உங்கள் இரட்சகனுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவன் எத்தகையவன் என்றால், உங்களை (யாவரையும்) ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான். அதிலிருந்து அதற்குரிய சோடியையும் படைத்தான். இன்னும், அவ்விருவரிலிருந்து அனே ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். இன்னும், அல்லாஹ்வை, அவனைக்கொண்டு (தமக்குரிய உரிமைகளை) நீங்கள் (ஒருவருக்கொருவர்) கேட்டுக்கொள்கிறீர்களே, அத்தகையவனையும், மேலும், இரத்தக் கலப்பு சொநதங்கயை (த் துண்டித்து விடுவதை)யும் நீங்கள் அஞ்சிக்கொள்ளுங்கள்...' (4:1) என கூறுவதன் மூலம் மனிதர்கள் மத்தியில் சமத்துவத்தை வலியுறுத்துகிறது.
 
     மனித இனம் ஆரம்பத்தில் ஒரு சமுகமாக இருந்ததையும், கால வளர்சியின் போது அது பல இனங்களாகவும் குழுக்களாகவும், பல்வேறு மொழிகளைப் பேசுவோராகவும், பல பூகோலப் பிரதேசத்தைச் சார்ந்த பல்வேறு நிறத்தினர்களாகவும் பிரிந்தது என்பதையும் அல்குர்ஆன் மிகத்தெளிவாகக் குறிப்பிடுகிறது. 'மனிதர்கள் அனைவரும் ஆரம்பத்தில் ஒரே சமுகத்தவராகவே இருந்தனர். பின்னர் பல வகுப்பினராகப் பிரிந்து விட்டனர்'(10:19)

    இஸ்லாத்ததைப் பொருத்தவரையில், மனிதர்களை அவர்களது இனத்தை, நிறத்தை, மொழியை, பிரதேசத்தை மையப்படுத்தி சிறப்புக்குரியவர்களாக்கவில்லை. மாறாக, இறையச்சத்தின் அடிப்படையிலேயே அது நோக்கப்படுகிறது. 'உண்மையில், அல்லாஹ்வின் பார்வையில் மிக்க கண்ணியத்துக்குரியவர் யாரெனில் உங்களில் மிக்க இறையச்சம் உடையவரே' (49:13)

     அல்குர்ஆன் கூறும் இஸ்லாமிய வாழ்க்கை முறையை தனது வாழ்க்கையின் மூலம் மக்களிடையே நிலைநாட்டிய நபி (ஸல்) அவர்கள் தனது இறுதி ஹஜ்ஜின் போது நிகழ்த்திய உரை ஒரு சமத்துவப் பிரகடனத்திற்கு மிகச் சிறந்த உதாரணமாகும். 'மக்களே! நிச்சயமாக உங்களது இரட்சகன் ஒருவனே, உங்கள் தந்தையும் ஒருவரே, நீங்கள் எல்லோரும் ஆதமின் மக்கள். ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவர். இறையச்சமுடையவரே உங்களில் மேலானவர். அரபியர் மற்றெவரையும் விட மேலாகவரல்லர், மற்றவர்கள் அரபியரை விட மேலானவர்களுமல்லர். வெள்ளையர், கருப்பரை விடவோ, கருப்பர் வெள்ளையரை விடவோ இறையச்சத்தாலன்னி மேலானவரல்லர்... (புஹாரி)

     அல்குர்ஆனினதும் நபியவர்களதும் வார்த்தைகள் வெறும் வரட்டுத் தத்துவங்களாக அமையவில்லை. அவை அன்றைய சமுகத்தில் தலைவிரித்தாடிய குல பேதம், நிற பேதம், வர்க்க பேதம் முதலான நோய்களை முளையோடு கிள்ளி எறிந்தன. தீய பண்புகளை விட்டு மிகவும் தூரமான ஒரு பண்பட்ட சமுகத்தினை இன்மண்னுலகில் உருவாக்கிவிட்டன. அனைவரையும் சகோதரர்களாக மாற்றியமைத்தது, ;' அல்லாஹ் உங்கள் மீது புரிந்திருக்கும் அருளை நினைத்துப் பாருங்கள். நீங்கள் விரோதிகளாக இருந்தீர்கள். அவன் உஙகள் இதயங்களில் அன்பையூட்டி ஒன்று சேர்த்தான். எனவே, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாகி விட்டீர்கள்... (3:;103)

    இவ்வாறு சமத்துவத்தை வளர்த்த சமுகத்திலே தான் அபீஸீனியாவைச் சேர்ந்த பிலால், பாரசீகத்தைச்சேர்ந்த ஸலமான், உரோமத்தைச் சேர்ந்த சுஹைப் (ரழி) போன்ற சகல இனத்தவர்களும் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்ந்தனர்.

    ஒரு தடவை அபுதர் (ரழி) அவர்கள் கோமடைந்த நிலையில் பிலால் (ரழி) அவர்களைப் பார்த்து 'ஏ கறுப்பியின் மகனே!' எனக் கூறவே, அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று முறையிட்டபோது, 'பேச்சு எல்லை மீறிவிட்டது. இறைபக்தியாலன்றி கறுத்த பெண்ணின் மகனை விட வெள்ளைப் பெண்ணின் மகனுக்கு எவ்வித சிறப்புமில்லை' என கண்டித்தார்கள். கோபத்தின் காரணமாக நிதானத்தை இழந்த நிலையில் தான் செய்த தவறின் பாரதூரத்தை உணர்ந்த அபூதர் (ரழி) அவர்கள், உடனே நிலத்தில் கன்னத்தை வைத்துப் படுத்துக்கொண்டு 'நான் செய்த தவறுக்காக உமது காலால் எனது கன்னத்திற்கு உதைப்பீராக' என அக்கறுபடிமையிடம் கூறினார்கள் கூறினார்கள்.

     இஸ்லாத்தில் ஒரு அடிமைகூட தனது சமத்துவத்துக்காக போராடக்கூடியளவு அது தனது அங்கத்தினர்களை பயிற்றுவித்துள்ளது. எனவே, சமத்துவம் என்ற உரிமை நேற்று ஐரோப்பியரால் முன்வைக்கப்பட்ட ஒன்றல்ல. அவ்வாறு உண்மையாகவே அவர்கள் சமத்துவம் பேணும் தன்மை கொண்டவர்களாக இருந்திருந்தால் உலகில் பல்லாயிரக் கணக்கான மக்கள் தினமும் பட்டிணியால் இறந்துகொண்டிருக்கும் நிலையில், தனது உற்பத்திப் பொருட்களுக்கு கேள்வி குறைந்துவிடும் என்பதற்காக அமேரிக்கா மிகையுற்பத்தியாகக் காணப்படும்  பல மில்லியல் மெற்றித்தொண் கோதுமைகளை   கடலில் கொட்டியிருக்க மாட்டாது.

    இஸ்லாம் வெறும் போதனைகளில் மாத்திரம் சமத்துவ உரிமைகளை நோக்கிவிடவில்லை. மாறாக, அது தனது அனைத்து இபாதாக்களிலும் சமத்துவத்தை பேணக்கூடிய அமைப்பிலேயே அமைத்துள்ளது. உதாரணமாக, தொழுகையை எடுத்துக் கொண்டால், அரசன், ஆண்டி, எஜமான், அடிமை, பணக்காரன், ஏழை, முதலாளி, தொழிலாளி, கருப்பன், வெள்ளையன், பெரியவன்,
சிறியவன், மேல் நாட்டார், கீழை நாட்டார் என்ற பாகுபடின்றி எல்லோரும் தோளோடு தோள் சேர்த்து தொழ வேண்டும். அரசன் பக்கத்தில் தொழுகின்றானே என்று ஆண்டி அச்சப்படத் தேவையில்லை. அந்தஸ்து மிக்கோருக்கென பிரத்தியேகமான இடம் ஒதுக்கப்படவில்லை. இவ்வாறுதான் இஸ்லாமியக் கடமைகள் ஒவ்வொன்றிலும் சமத்துவத்தினை வலியுறுத்தியிருப்பதனை அவதானிக்க முடியும்.

     எனவேதான், அமேரிக்காவில் கறுப்பின விடுதலைக்காக குரல் கொடுத்து, பின் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட கறுப்பினத் தலைவர். அவர் இஸ்லாத்தை ஏற்றதும் ஹஜ் கடமையை நிiவேற்ற மக்கா சென்றார். அங்கு ஆசிய, ஆபிரிக்க, அமேரிக்க, ஐரோப்பிய இனத்து மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, கறுப்பர், வெள்ளையர் என்ற வித்தியாசமின்றி தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்து வியப்புற்ற அவர், தான் அமேரிக்காவில் பின்பற்றிக்கொண்டிருந்த வழிமுறை இன, நிற பிரச்சினைக்கு ஒரு தீர்வல்ல என்பதையும், இஸ்லாமே அதற்கு ஒரே தீர்வு என்பதையும் புரிந்து கொண்டார்.

    இந்நிலையில், சமத்துவத்துக்கு தாம் தான் உதாரணப் புருஷர்கள் என மார்தட்டிக்கொள்ளும் அமேரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளில் நடைபெறும் சம்பவங்களை நோக்கினால் அவை எந்தவகையிலும் மனித உரிமை பேசுவதற்கு அருகதையற்றவை என்பதை அறிந்து கொள்ள முடியும். பொதுவாகவே கறுப்பர், வெள்ளையர் பிரிவிணை ஒட்ட முடியாது உடைந்து போன கண்ணாடியைப் போன்று அந்த சமுதாயத்தில் ஊறிப்போயுள்ளது. கறுப்பினத்துப் பெண்ணை ஒரு வெள்ளையன் கற்பழித்தால் அதனை பெருட்படுத்தாத நீதித்துறை, கறுப்பினத்தவன் ஒரு வெள்ளை இனத்துப் பெண்ணுடன் அவ்வாறு நடந்து கொண்டாலோ அவன் கொலை செய்யப்பட்டு தீயிலிடப்படுவான். இது தான் அவர்களது சமத்துவம்.

     அமேரிக்காவின் அலபாமாவில் 20 ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற ஒரு நிகழ்வு இங்கு நினைவுகூறப் பொறுத்தமானதாகும். அலபாமாவில் ஒரு கறுப்பினப் பெண் தன் கல்லூரிப்படிப்பை முடித்துக்கொண்டு மேற்படிப்புக்காக அலபாமா பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்தார். கறுப்பினம் என்பதற்காக அவளது விண்ணப்பம்  ஏற்கப்படவில்லை. அனுமதி மறுக்கப்பட்டது. இது நியாயமற்றது என பர்மிங் ஹாம் பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார் அந்தப் பெண். அவருக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் தீர்ப்பாகியது. இதனை அறிந்த வெள்ளை மாணவர்கள் அந்த தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இவ்வெதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஊர்வலத்திலும் ஏனைய பல்கலைக்கழக மாணவர்களும் பங்குபற்றி ஒத்துழைத்தனர். ஏழாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அந்தக் கறுப்பியை கொன்று மரத்தில் தொங்க விடப்போவதாக அவர்கள் கோஷமெழுப்பினர். அப்பெண்ணைப்போன்று உருவத்தைச் செய்து அதனை கட்டி இழுத்துச்சென்று தீயிட்டுக் கொளுத்தினர். அத்துடன், ஒரு கூட்டத்தினர் அப்பெண் செல்லுமிடமெங்கும் சென்று கற்களால் அடித்தனர். அழுகிய முட்டைகளைக் கொண்டு அவருக்கு அடித்தனர். தம்மோடு சமமாக படிக்க வந்தால் கொன்று விடுவதாகவும் பயமுறுத்தினர். இத்தனை நடந்தும் கூட அப்பல்கலைக்கழகங்கள் அம்மாணவர்களுக்கு அறிவுரைகளைக்கூட கூறவில்லை. மாறாக, இந்த நிகழ்வுகளால் அப்பெண் அப்பல்கலைக்கழகத்திற்கு வரக்கூடாது என அப்பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது. தனக்கு நீதியைக் கோரி இரண்டாவது தடவையாக வழக்கு தாக்கல் செய்த அப்பெண் தனது உயிரைக் காக்க நீதிமன்றம் அமைந்துள்ள பர்மிங்ஹாம் நகரில் தனது சகோதரி வீட்டில் முடங்கிக்கிடந்தார். அந்நகரிலும்கூட அவர் இம்சிக்கப்பட்டார். வீட்டுத்தெலைபேசி இரண்டு நிமிடத்துக்கொருமுறை அலரியது. தூக்கினால் வசை மொழகளே கேட்டன. இவ்வாறு ஒரே இரவில் 7 மணிநேம் நடைபெற்றது. இத்தொல்லைகளிலிருந்து தப்பிப்பதற்காக யாரும் கண்காணாத இடத்துக்கு தலைமறைவாகி வாழ வேண்டிய நிலை அப்பெண்ணுக்கு ஏற்பட்டது.

   நீதி மன்றத் தீர்ப்பு மீண்டும் அப்பெண்ணுக்கு சாதகமாகவே, அதனை மறுத்த பல்கலைக்கழக நிர்வாகி ஜோன் காடீல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார். அவர்கூறிய பதில், 'வெள்ளை மாணவர் அந்த கறுப்பு மாணவரைக்கொன்று எம்மையும் கொலை செய்;யலாம் என்று அச்சப்படுகிறோம். இத்தகைய அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காகவே. அந்த மாணவியை பல்கலைக்கழகம் வர விடாது தடுத்து விட்டோம்' என்று கூறினார்.
 
     மற்றொரு முறை ஒரு கறுப்பினப் பெண் பஸ் பிரயாணத்தின் போது வெள்ளையருக்கு பிரத்தியேகமாக வைக்கப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்துவிட்டாள். அதிலிருந்து சென்று கறுப்பினத்தாரின் ஆசனத்தில் அமருமாறு அறிவுறுத்தப்பட்டாள் அவள் அதனை மறுக்கவே, பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டாள். நீதிமன்றம் அவளுக்கு தூக்குத் தண்டனை வழங்கியது. இதனை ஆட்சேபித்த கறுப்பினத்தவர்கள் பஸ் பிரயானத்தைப் பகிஷ்கரித்தனர். இது சட்டவிரோதமானது என்று அலபாமா நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதனால் பஸ்ஸில் பிரயாணம் செய்ய மறுத்த நூற்றுக்கணக்கான கறுப்பின மக்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டனர். இது நடைபெற்றது. ஆதி காலத்திலலல்ல. ஐ.நா.சபையின் மனித உரிமைப் பிரகடனமும் வெளியிடப்பட்ட பின் 1956 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலாகும்.

     இந்த நிலையிலேயே இன்று மேலை நாடுகளின் சமத்துவம் காணப்படுகின்றது. இத்தகு மனிதர்களே உலகிற்கு சமத்துவம் சொல்ல வருகின்றனர் என்பது நகைப்புக்கிடமானது.

    எனவே, இன்று நடுநிலையுடன் நோக்கும் முஸ்லிமல்லாத ஏராளமான சிந்தனையாளாகள், சமுக இஸ்லாம் சாதித்ததைப் போன்று உலகில் தோன்றிய எந்த கொள்கையாலும் சாதிக்க முடியவில்லை என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
                                                                                                   (தொடரும்)

   அஷ்ஷெய்க்.எம்.எஸ்.றியாஸ் முஹம்மத் (நளீமி) எம்.ஏ.